தலைப்பைப் பார்த்தவுடனேயே எத்தனை பேர் இதனை ஆவேசமாக கிளிக் பண்ணியிருப்பார்கள் என்பதை என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஏனென்றால் நம்மில் பலர் எது இலவசமாகக் கிடைத்தாலும் அதை விரயமாக்க விரும்புவதில்லை என்ற மிகவும் நல்ல நோக்கத்தை கொள்கையாகக் கடைப்பிடிப்பவர்கள்
என்பதனால்தான்.
சரி , இனி தலைப்புக்கு வருவோம்.எவ்வாரு பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை ( wi-fi ) யை ஹெக் பண்ணுவது என்பதைப் பற்றி.மிகவும் நல்ல நோக்கம் என்பதனால் தான் இப்பதிவை நம்மவர்களுக்கு சமர்பிக்கிறேன்.
உண்மையில் வை-பை யை ஹெக் பண்ணுவது பெரியதொரு விடமயல்ல என்பதையும் இவ்விடத்திலே சொல்லியே ஆக வேண்டும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வை-பை யை ஹெக் பண்ணலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
WEP , WPA , WPA2 போன்ற பாதுகாப்பு முறைகள்தான் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் WPA2 தான் அதி பாதுகாப்பு முறையாகக் கருதப்படுகின்றது. எது எவ்வாறாயினும் கள்வனுக்கு வேலி போட்டு பயனில்லையே !!
என்னடா இவன் மொக்கைக்கு மேல மொக்கையைப் போட்டு கடுப்பேத்துறான் என்றவாரு தாங்கள் ஆதங்கப்படுவதை என்னால் உணரமுடியாமலில்லை.மேலும் இவ்விடத்திலே உங்களது பொறுமையை சோதிக்கவும் எனக்குத் துளியும் உடன்பாடில்லை என்றபடியால் விடயத்துக்கு வருகிறேன்.
இந்த உதவியை மட்டும் தான் என்னால் செய்ய முடியும் , இதைப் பயன்படுத்தி நிச்சயம் உங்களால் ஒரு வை-பை யை ஹெக் செய்ய முடியும் , இதனுடன் இன்னும் ஒரு சில காரியங்களை செய்யுமிடத்து.அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட்டால் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைத் தேடி அடிக்க வருவது உறுதியே !!
முழுமையான உதவிகள் தேவைப்படும் மகத்தான நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்னை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
ஏன் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை யை ஹெக் செய்ய முனைகின்றீர்கள் ??? அடுத்தவன் பொருள் நமக்கெதுக்கு என்று கூறிக் கொள்ளும் மோசமான முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள்தானே !!??
என்ன ??? நான் சொல்வதெல்லாம் சரிதானே ???
இப்பதிவை ஒரு நகைச்சுவை உணர்வுடனேயே கிறுக்கியிருக்கிறேன் என்பதை பாவப்பட்ட வாசிப்போருக்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-