Showing posts with label சமூக வலைத்தளம். Show all posts
Showing posts with label சமூக வலைத்தளம். Show all posts

மற்றுமொரு உறுப்பினர் ! வணக்கம் !! சூ(TSU)

இணையப் புரட்சியலில் Social Media எனும் சமூக வலைத் தளங்களின் பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்(Facebook) என்று சொல்லக்கூடிய முகப்புத்தகம்,  டுவிட்டர் (Twitter), கூகிலின் பினாமியான கூகில் பிளஸ்(Google+) அத்துடன் லிங்இன்ட்(Linkedin) எனும் அதிவிசேட தொழில்சார் சமூக வலைத்தளம் என்றவாறு பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றது.

சமூக வலைத்தளம் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது ?? அதன் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் என்ன ??? என்றவாறான அடுக்கடுக்கான கேள்விக்கணைகளுக்கான விடைகள் நம்மில் பல பேறுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

இன்று பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு  போட்டுக் கொண்டிருக்கும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு நான் மேற்கூறியவை பற்றிய போதுமான அறிவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. அதிலும் குறிப்பாக சிறப்பானதொரு கல்வி மட்டத்தில் ஜாம்பவான்களாக வீற்றிருப்பவர்களும் இதில் உட்சேர்க்கப்படுவதுதான் சற்று கவலைக்குரிய விடயம்.

நான் அறிந்தவரை பல பேர் தாங்களின் தொழில் சார் விடயங்களுக்கு அப்பால் துளியும் எந்தவொரு விடயத்தையும் அலசுவதில்லை. காரணம் கேட்டால் “அது நமக்கு வேண்டாத வேலை”   என்றுதான் பதில் வரும்.

ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிட  முடியாது என்பதுதான் எனது வாதம். உதாரணத்திற்கு, வைத்தியர் ஒருவர் சமையல் கற்பதில் தவறொன்றும் இல்லையே !  அதை விடுத்து நான் இது, நான் அது எனும் பந்தாக்கள் காட்டினால் இழப்பது பல.

சரி இனி மெயின் மேட்டருக்கு வருவோம்,

ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நம்முடவங்க ஏதாச்சும் செஞ்சுக்கிட்டுத்தான் இறுக்குறானுக. அதில இப்ப ரீசண்டா எண்டராகி இருப்பது, TSU எனும் வாய்க்குள் நுழைய மறுக்கும் “சூ” எனும் சமூக இணையத்தளம்.

நான் நெனய்க்கிறன் தம்பிமார் இந்தப் பெயர ஜப்பான் மொழியிலிருந்து சுட்டிருப்பாங்களோ என்னவோ எண்டு,

ஏஸ் காரணம் இருக்கு !!

காய்ஸ், உங்களுக்க ஞாபகம் இருக்குமா சுனாமி ??? TSUNAMI 
ஆமாங்க, நீங்க நெனயக்கிறது கரெக்ட். ''T" இற்கு சவுன்ட் இல்ல.

ஆழிப்பேரலை எனும் பதத்தால் சுட்டிக்காட்டப்படும் இந்த சுனாமி ஜப்பான் மொழியிலிருந்து சுட்டது, வந்தது, போனது என்ற ஆதிக் கதையெல்லாம் தெரியும் தானே மக்களே !!

அதே கேஸ்தான் TSU இற்கும் நடந்திருக்குமோ என நெனய்க்க தோனுதுங்க.

சோ, இது நம்முட தனிப்பட்ட கருத்து மேலும் மாற்றுக் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

பய புல்லயல்கள், சும்மா நல்லா டிசைன் பன்னிருங்கானுகள்,  யூஸ் பன்னவும் ஈசியாவிருக்கு ஆனாலும் பேஸ்புக்கின் வாடையடிக்கிறது என்னவோ உண்மைதான்.

மேலும் இங்கு குறிப்பான  மற்றும்  முக்கியமான விசயங்கள் ரெண்டு இருக்கு, முதலாவது  கொஞ்சம் கவலையான மேட்டர் - “பேஸ்புக் போன்று லைவா கடலயெல்லாம்  போட முடியாது, எதுவானாலும் மெசேஜ்தான் போடனும் ”

காய்ஸ் பாவங்க நீங்க !!

இப்ப ரெண்டாவது மேட்டர்  “பாஸ் இவங்க உங்களுக்கு காசு தருவினமாம்”
காசு, பணம், துட்டு, மணி மணி.

என்ன ரெடியா ???

ஏதோ புதுசா செய்றம் எண்ட பேர்ல எங்குட பய புல்லயல வாழ்க்கையில இப்புடி வௌயாடிட்டயலே மிஸ்டர் Sebastian Sobczak, வாய்க்கு நொழயுது  இல்ல அதான் இங்கிலீசுல அடிச்சு விட்டேன்.


பயணம் தொடர வாழ்த்துக்கள் !!
































பேஸ்புக்கின் ஆதிக்கம் ! வரமா?? சாபமா???

 மிகவும் பிரபலமான சமுகவலைத்தளங்களில் ஒன்றுதான் பேஸ்புக்(Facebook).
2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மார்க் சகர்பேர்க்(Mark Zuckerberg) என்பவராலும் சக நண்பர்களாலுமே இது உருவாக்கப்பட்டது.பல்கலைக்கழக நண்பர்கள் மத்தியில் கல்விசார் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் நோக்கத்திற்காகவே பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டதேயன்றி வியாபார நோக்கத்திற்காகவல்லதென்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.காலப்போக்கிலே இது  விரிவுபடுத்தப்பட்டு தற்போது அதாவது இன்றைய நிலையில் பல பில்லியன் டொலர்களை இலாபமீட்டக்கூடியதொரு நிறுவனமாக வேறூன்றியிருப்பதென்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். 



நட்புவட்டத்தை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தியே பேஸ்புக்கானது தன்னை மக்களின்பால் ஈர்த்துள்ளது.நிச்சயமாக இதனால் ஏராளமான சாதமான விளைவுகள் கிடைக்கப்பெற்றாலும் அதற்க்கு நிகரான விகிதத்தில் பாதகமான விளைவுகளுக்கும் குறைவில்லையென்றுதான் கூற வேண்டும்.இது நியுட்டனின் 3ம் விதிக்கமைய பொருத்தமானதொன்றாகவே அமையப் பெற்றுள்ளது.அதாவது ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கமுண்டு என்பதாகும்.(Every action has an equal and opposite reaction)


13 வயதிற்க்கு மேற்பட்ட எவரொருவரும் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கலாம் என்பது பேஸ்புக் நிறுவனம் வகுத்துள்ள ஆரம்பக்கட்ட விதிமுறையாகும்.இதன் விளைவாகவே இன்று பாடசாலை மாணவா்கள் முதல் வயதானவர்கள் வரை பட்டி தொட்டியெல்லாம் அனைவரிடத்திலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக்கெனும் சமுகவலைத்தளம்(Social site).

குறிப்பாக அண்மைய ஆய்வறிக்கையிக் பிரகாரம் (மார்ச் 2013) பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1.11 பில்லியன் என்பதுதான் ஆச்சரியமானதொரு விடயமாகும்.அதாவது நாளொன்றுக்கு 665 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 7 மாதத்திற்கு முன்னர் 1.06 பில்லியன் பாவனையாளர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது கடந்த வருடத்தை விட 27% ஆன வளர்ச்சி கண்டுள்ளது.அந்தளவுக்கு இதன் பாவனையாள்களின் எண்ணிக்கை ஆர்முடுகளில் பயணிக்கின்றது.


நாளொன்றுக்கு பேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 26% ஆன வளர்ச்சி கண்டு ஆய்வாளர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.
மேலும் நவீன கைப்பேசிகளின் வருகையினாலும்(Smart Phones) இதனது பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருக்கின்றது.சுமார் 750 மில்லயன் மக்கள் தங்களது கைப்பேசிகளின் ஊடாவே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.


வருடாந்த பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை :Source facebook Inc

1 மில்லியன்  - 2004 இறுதி
5.5  மில்லியன் -2005 இறுதி
12  மில்லியன்  -2006 இறுதி
20  மில்லியன் - ஏப்ரல் 2007 
50  மில்லியன் - ஒக்டோபர்  2007
100  மில்லியன்  - ஆகஸ்ட் 2008
150  மில்லியன் - ஜனவரி 2009
750  மில்லியன் -ஜுலை 2011
800  மில்லியன் -செப்டம்பர் 2011
845  மில்லியன்-2011 இறுதி
901  மில்லியன் -மார்ச் 2012
955  மில்லியன் -ஜுன் 2012
1.01 பில்லியன் -செப்டம்பர் 2012
1.06 பில்லியன் -டிசம்பர் 2012
1.11 பில்லியன் -மார்ச் 2013


தற்போது சந்தையில் பலகையான ஸ்மாட் கைப்பேசிகளில்(Smart Phones) பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) நிறுவப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.இதன் விளைவாக பேஸ்புக்கின் வளர்ச்சி மற்றும் வியாபார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
அன்ரொயிட் கைப்பேசிகள்(Android phones), வின்டோஸ் கைப்பேசிகள்(Windows phones) , ஜாவா கைப்பேசிகள்(Java phones) போன்றன தற்போது சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற கைப்பேசிகளாகும்.
மேலும் இவற்றில் சமுக வலைத்தளங்களுக்கென்று தனியானதொரு இடமொதுக்கப்பட்டுள்ளது.அதாவது பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) என்ற பெயரில், இதன்மூலமே இலகுவாக பேஸ்புக்கின் பாவனைனையை மேற்கொள்ள முடியுமாகவுள்ளது.


பேஸ்புக்(Facebook), டுவிட்டர(Twitter), கூகில் பிளஸ்(Google Plus), லிங்ட் இன்(Linked in) போன்றன மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமுக வலைத்தளங்களாகும்.இதிலும் குறிப்பாக பேஸ்புக்கானது தனது ஆதிக்கத்தை முதன்மைப் படுத்தியிருக்கின்றது என்பதே விசேட அம்சமாகும்.
பேஸ்புக்கானது வருடமொன்றுக்கு பல பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டிக்கொண்டிருக்கின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.எவ்வாறு பேஸ்புக்கானது இலாபமீட்டுகின்றது என்பது பற்றியதொரு ஐயப்பாடொன்றும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
CTR (((((((((Click Through Rate) என்ற முறையின் அடிப்படையிலே பேஸ்புக்கானது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுகின்றது.குறிப்பாக இது விளம்பரங்கள் மூலமே சாத்தியமாக்கப்படுகின்றது.உண்மையில் விளம்பரங்கள் இல்லாவிட்டால் பேஸ்புக்கின் கதி பரிதாபத்திற்குள்ளானதொன்றாக மாறிவிடும்.


பாவனையாளருக்கு பல்வேறு வசதிகளை புதுப் புது வடிவில் அறிமுகப்படுத்தி தொடர்ந்தும் தன்னோடு இணைத்து வைத்து கொண்டிருப்பதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான் என்றால் அதற்கான மாற்றுக் கருத்துக்கள் குறைவாகத்தான் இருக்கும்.
தற்போது பல்வேறு நிறுவனங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஊடாகவே (facebook page) தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.உண்மையில் இது பெருமளவில் மக்கள் மத்தியில் சென்றடைவதே சிறப்பியல்பாகும்.பிரபலமான நிறுவனங்கள் முதல் சிறியளவிளான நிறுவனங்கள் வரை அனைவருமே தங்களுக்கென்று பேஸ்புக் பக்கத்தினை உருவாக்கி அதனை வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ,மக்கள் மத்தியிலும் பிரபலமடையச் செய்கின்றன.மேலும் இணையத்தள வியாபாரத்திற்க்கு (E-Business/Online Business) பேஸ்புக்கானது ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றது என்பதை எவரொறுவராலும் மறுக்க முடியாது.


பேஸ்புக்கானது பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டினைந்து தனது பங்குகளை முதலீடு செய்வதன் மூலமாகவும்  பெருமளவான இலாபத்தை ஈட்டிக் கொள்கின்றது.
பேஸ்புக்கின் வருகை இணையத்தின் மற்றுமொரு புரட்சியென்றே இணையத்தள ஆய்வாளர்களினால் குறிப்பிடப்பட்டு வருகின்றது.அந்தளவுக்கு அதன் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது.உண்மையில் இது மக்களுக்க வரமா? சாபமா? என்றதொரு வினாவும் எழுப்பப்படுகின்றது.
ஒரு நாணயத்திற்க்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல பேஸ்புக்குக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன அதாவது சாதகமான பக்கம் மற்றும் பாதகமான பக்கம் போன்றவையாகவே அவை அடையாளப்படுத்தப்படுகின்றன.
நேரவிரயம், கல்விச் சீர் குலைவுகள், ஆபாச நடவடிக்கைகள், இணையத்தள மோசடிகள், போலி நட்பு வட்ட மோசடிகள் என்றே இதனது பாதகமான பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றன. இதனை பேஸ்புக்கினால் மறுக்கவும் முடியாது , எந்தவொரு மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது என்பதே நாம் யாவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

எது எவ்வாறாயினும் பேஸ்புக்கானது பல்வேறு சாதகமான விளைவுகளுக்கே தன்னை அர்ப்பணித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பயன்பாட்டாளர்களைப் பொறுத்தே சாதக, பாதக விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்ற கருத்தையும் மறுக்க முடியாது.இதன் அடிப்படையில் உண்மையில் இது மக்களுக்கு கிடைத்ததொரு வரமாகத்தான் என்னால் உற்று நோக்கப்படுகின்றது.




பேஸ்புக்கும் பேயாட்டமும் !

கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் இப்பதிவை எழுதுவதற்கு  ஏராளமான காரணங்கள்  எனினும் அவற்றை  இங்கே குறிப்பிட  முடியாத  நிலையில் நான்....................???????

இன்று முதலாம் வகுப்பு படிக்கும் பிள்ளையும்  பேஸ்புக்கென்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் நிலை. அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் தலை விரித்தாடுகின்றதென்றால் தவறில்லை.

தொலைத்தொடர்பு  நோக்கத்தினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதுதான்  பேஸ்புக்கெனும் சமூக வலைத்தளம், ஆனால் இன்று  இது முற்றிலும் மாறுபட்ட  தேவைகளுக்காக  பயன்படுத்தப்படுவது  கொஞ்சம் கவலை  அளித்தாலும்  இதன் வளா்ச்சியைக்கண்டு  வியந்து  பாராட்டமல்  இருக்க முடியாது. கடின உழைப்பின்  பிரதிபளிப்பாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இன்று பேஸ்புக் கணக்கு இல்லாத ஒருவனை ஏதோ  கொலைகாரனைப் பார்ப்பது போல் இச்சமூகத்தின் பார்வை அமைகின்றது. இது தவறா ? சரியா ? என்ற விவாதம் ஒருபுறமிருக்க  பேஸ்புக்கின் மீதான மோகமும்  குறைந்த பாடில்லை.

மாணவர்களின் எதிர்காலத்தை  கேள்விக் குறியோடு  நகர்த்துவதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான்  என்றால் இதற்கான மாற்றுக் கருத்துக்களும்  குறைவாகத்தான் இருக்குமென்பதில் எனக்கு  துளியும் ஐயமில்லை.

தொழிநுட்பத்தின்  அசுர வளா்ச்சியின்  தாக்கம்  பேஸ்புக்கின் விரிவுபடுத்தலை தூண்டுகின்றதென்பதுதான்  உண்மை.மடிக்கணிணி(Laptop), ஐபேட், ஐபோன், டெப்லட் பீசி  போன்றவற்றின் பாவனை இதற்கு ஊக்கியாக  அமைந்து விடுகின்றன என்பதுதான் திண்ணம்.

பேஸ்புக் பேயாட்டத்தின் பாதகமான விளைவுகள் ஏராளம் அவற்றுள் சில
*மந்தமான பரீட்சைப் பெறுபேறுகள்
*பாலியல் துஸ்பிரயோகங்கள்
*பண மோசடி
*இணையத்தள மோசடிகள் (cyber crime) என்றவறு பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்லும்.

நேர விரயம்  என்ற அடிப்படையில் பார்த்தால் பேஸ்புக்கின் பங்கு பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதை  இலகுவாக அவதானித்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தத்தான் வேண்டும் , அளவோடு பயன்படுத்தும் போது  அதன் பயன்பாடுகளை பாதகமற்ற முறையில்  அனுபவிக்கலாம்  ஆனால் அளவு மீறும் போதுதான் பாரியளவிலான பாதிப்புக்களுக்கு முகங்ககொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவோம்  என்பது  யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

ஆங்கிலத்தில் இதை இவ்வாறுதான் குறிப்பிடுவார்களாம் !
Too much of  anything is good for nothing !






















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...