Showing posts with label மனதில் பட்டது. Show all posts
Showing posts with label மனதில் பட்டது. Show all posts

ரசனியின் ஜிங்கா.... ஓ சொாறி “லிங்கா”

முதல்ல எல்லாறும் என்ன மன்னிச்சுக்கொங்கோ, தலைப்பு கொஞ்சம் சொதப்பிடுச்சு. சோ ஐயம் றியலி சொறி போ தட்.

டீசர், ரெய்லர் எண்டு சும்மா அம்புட்டு பந்தா காட்டி வெளியான திரைப்படம் இப்புடி எடயில .................. ஆகும் எண்டு ஆராச்சும் நெனச்சிங்களா?????

உண்மையில படத்த நான் தியட்டருக்கெல்லாம் போய் பாக்கலங்க, எப்போயும் போல திருட்டு டிவிடி தான் !


தியட்டருக்கெல்லாம் போய் பாக்குர அளவுக்கு வசதியில்லீங்க !
விடுங்க அது நம்முட சோகக் கதை, அத விட்டுட்டு 
இப்ப லிங்காக்கிட்ட வருவோம்.

உண்மையச் சொன்னா படம் சுமார் மூஞ்சிக் முமாரு, 

காரணங்கள் அஞ்சு - வைவ் ரீசன்ஸ் (சோட் - நோட்ஸ் : நச்சிண்டு அஞ்சு)
------------------------------------------------------------------------------------------------------------------------

1. பழைய சோத்துக் கதை
ஐயா, ராசா “கே.எஸ்” ஒங்குட ரெண்ட கொஞ்சம் மாத்தலாமே?
 சும்மா ஒரு எட்டு சுத்திப் பாருங்க இப்ப 
என்ன நடக்குது தமிழ் சினிமால எண்டு. 
பய புல்லய்கள் எப்புடி எப்புடியெல்லாம்
 யோசிச்சு கதை எழுதுறானுக எண்டு. 

பிலிஸ் அப்டேட் யுவர் தோட்ஸ், 
இது அட்வைஸ் இல்ல, சிமோல் ரிகுவஸ்ட். 

********************************************

2. தலைவருக்கு வயசாச்சில்ல ???? 
 பல எடங்கல அப்பட்டமா தெரியுதோ, 
என்ன செய்ய? சொல்லித்தான் ஆகனும். 
எவ்வளவு மேக்-அப் போட்டாலும் சத்தியமா 
வௌங்குது- வயசாச்சிண்டு. 

குரல கொஞ்சம் தொய்வு மாதிரி வௌங்குது, ஆனா வௌங்கள.

கிசு-கிசு- இமய மலைக்கு போற வயசுல ஏண் ஒங்களுக்கு வேண்டாத வேல எண்டு ஒரு தகவல், மிகவும் ரகசியமாக.
நான் இத யாருக்கிட்யும் சொல்லலிங்க!! (யேஸ் புரமிஸ்)

ஐயா !! அந்த பழைய கெட்டப்ப இப்பெல்லாம் பாக்க முடியலிங்க!! 
(ஆதங்கம்)

WOW !! வவ் !! - பில்லா, முரட்டுக்காளை, பாட்சா மற்றும் பல.

****************************************************

3. ஜாடிக்கேத்த மூடி ??? -
புரிஞ்சாச் சரி ???? 
என்ன கொடும சரவணா????? 
“கே.எஸ்” உங்களுக்கு கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்கா !! 

நல்லா வருது வாய்ல !! ஏதாச்சும் சொல்லி-கில்லிடப் போறன் !

அதில “இது” வேற - “அப்பா. கண்ணக் கட்டுதே !! 

இது எண்டா எது எண்டு புரியுதா ??

அனுஸ்கா அக்கா - பரவால 
ஆனா அந்த வெள்ள (அக்கா) புள்ள பாவம்

 யேஸ், ஓடியன்ஸ் நான் அவங்க ரெண்டு பேரயும் விட 
வயசில சின்னவன் அதான் 
கொஞ்சமாப்போல மரியாதய்க்கு 
அக்கா எண்டு சொல்லிப்புட்டேன்.

ஏதோ என்னால முடிஞ்சது !

******************************************************************

4. வை- ஓல் மோஸ்ட் 3 அவர்ஸ் டைம் - ???? 
அப்புடி பெரிசா என்னத்தய்யா சொல்ல, 
இந்த நேர நீடிப்பு ??? 
ரீசன் - பிலீஸ்???
பல- பேரின் ஆவேசம் 
கலந்த கேள்வி !! 

அட ராசா!! 
அந்த பைட்டுக்கா இம்புட்டு 
நேரம் எடுத்த???

விஜய்ங்கிட குருவி ஸ்டைலா ??? 
அப்புடி பிலையிங் !! ஓ காட் !! 
இட்ஸ், ஓசம் !! ??? 

ரியலி இம்பிரஸ்ட் ஆயிட்டன். 

*******************************************************************

5. ஓ !! வில்லன்கள் ??? - 
சிரிப்பு போலீஸ். 
மசாலாவ கொஞ்சம் காரமா போட்டாத்தானே, 
சும்மா டேஸ்ட் தூக்கலா இருக்கும். 
இது எழுதப்படாத விதியெண்டு 
ஒங்களுக்கு தெரியாதா - 
மிஸ்டர்- குமாரு ??? !!! 

பெடர் - லக் நெக்ஸ்ட் டைம் !! 
போத் ஒவ் யு 
*************************************************************

நாங்க இப்புடியும் கதப்போமில்ல !!






















ஆடாம ஜெயிச்சோமடா

“எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
இவரும் ஒருவர்.

இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
 என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














இலங்கையிலுள்ள முற்கொடுப்பனவுத் தரவுத் திட்டங்கள் ஒரு ஒப்பீடு 2014

குறிப்பு : இப் பதிவானது இலங்கையிலுள்ள இணையப் பாவனையாளர்களுக்கு நிச்சயமாக உதவக் கூடியவாறானதொன்றாகவே அமையப்பெறும். மேலும் இதன் மூலம் வினைத்திறனான தரவுத் திட்டமொன்றை தெரிவு செய்யக்கூடிய தெளிவொன்றும் உருவாகும்.

சரி,

இனி பதிவிற்குள் நுழையலாம்.

இணையப்புரட்சி என்றதொரு யுகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதனது அத்தியவசியமான தேவைகளுக்குள் இணையமும் ஒன்றாகிவிட்டது. இணையம் இன்றி  வாழ்வதற்க்கு மனிதன் தயாரில்லை என்றதொரு நிலைக்கு மனிதனது தேவைகள் அனைத்தும் இணையத்திற்குள் முடக்கப்பட்டு விட்டன என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

இது ஒரு புறமிருக்க இணையக் கட்டணங்கள் என்றதொரு விடயமும் மனிதனது பிரதான செலவினங்களுக்குள் உள்ளடக்கலாகிவிட்டது. எது எவ்வாறாயினும் இதனைத் தவிர்த்துக் கொள்ளவதென்பது சற்றுக் கடினமானதொரு காரியம் ஆனாலும் ஒப்பீட்டளவில் இதனை இழிவாக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இலங்கையில் இணையப் பாவணையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான்  செல்வதாக அண்மைய ஆய்வறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது ஒரு விதத்தில் சாதகமானதாக உற்று நோக்கப்பட்டாலும் மற்றொரு விதத்தில் பாதகமானதொன்றாகவே அவதானிக்கப்படுகின்றது.

எடிசலாட்(Etisalat), டயலொக்(Dialog), மொபிடெல்(Mobitel), எயாடெல்(Airtel) மற்றும் ஹச்(Hutch) ஆகிய இவ் ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் இலங்கையில் பிரதான இணையப் பங்காளர்களாகவும் வழங்குனர்களாவும் செயற்பட்டு வருகின்றன.

ஒப்பீட்டளவில் வேறுபட்ட தரவுத் திட்டங்களை/பொதிகளை (Data Plans/Packages) வழங்குவதிலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தங்களோடு தக்க வைத்துக் கொள்வதிலும் இந் நிறுவனங்கள் மிகவும் கச்சிதமாக  தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சாதாரணமாகவே தரவுத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த இவ் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டிற்குள் சமூக வலைத்தளங்களுக்கென்றே தனிப்பட்ட தரவுத் திட்டங்களை வழங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு தினம் தினம் விசேட புதிய தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க,

என்னால் இங்கு ஒரு சிறிய முயற்சியாக இவ் ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்களை அதாவது முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்களை ஒப்பு நோக்கியவாறான ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட  தரவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது இதன் பிரதான நோக்கம் யாதெனில் எந்த நிறுவனம் மிகவும் வினைத்திறனான தரவுத் திட்டத்தை வழங்குகின்றது என்பதாகும்.

 இதன் மூலம் இணையச் செலவினங்களை ஓரளவுக்கு இழிவாக்கலாம் என்றதொரு அடிப்படையில்தான் என்னால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இவ் ஒப்பீட்டு அட்டவணையிலுள்ள தகவல்கள் அனைத்தும் நேரடியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை மேலும் இத் தகவல்கள்  அதாவது செப்ரம்பர் மாதம் 16 ம் திகதி 2014 ஆண்டுக்குரியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன (Updated Details).

ஒப்பீட்டு அட்டவணை  


தெளிவான அட்டவணைக்கு இதனை சொடுக்கவும்

இங்கு அட்டவணையில் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்கள் அதனது விலைகளுக்கேற்ப ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட விலை வீச்சுக்கேற்ப எவ்வாறான தரவுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்பதை மிகவும் இலகுவான முறையில் அவதானிக்கவும் முடியுமாகவுள்ளது.

உதவிக் குறிப்புகள் :
Prize range - விலை வீச்சு, அதாவது இங்கு மூன்று விலை வீச்சுக்குள் எல்லைப் படுத்தப்பட்ட தரவுப் பொதிகள்/திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

1. ரூபா 1- 99 வரையில்
2. ரூபா 100 - 299 வரையில்
3. ரூபா 300 - 1999 வரையில்

இலகுவாக ஒப்பீட்டை மேற்கொள்ளலாம்.

Prize - விலை, அதாவது குறிப்பிட்ட தரவுத் திட்டத்தின் விலை

Data - தரவுத் திட்டம் (MB) அலகில் தரப்பட்டுள்ளது மேலும் என்னால் சில இடங்களில் GB யிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக 110+50 எனில் 110MB ஆனது பகல் பொழுதிலும் 50MB என்பது இரவுப் பொழுதிலும் பாவிக்க கூடியவாறாக உள்ளது.

SMS/Call - இதன் போது வழங்கப்படுகின்ற குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளுர் அழைப்பு நிமிடம்.

உதாரணமாக 50/10 எனில், 50 குறுஞ்செய்திகள் மற்றும் 10 நிமிட அழைப்பு இலவசம் என்றவாறு அது  அமையப் பெறும்

Val (Validity) - செல்லுபடிக்காலம், அதாவது இத் தரவுத் திட்டமானது எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதாகும்.

உதாரணமாக : 7 என்றால் இத்தரவுத் திட்டமானது 7 நாட்களுக்குள் செல்லுபடியாகும் என்பதாகும் அதன் பிறகு அது தானாகவே காலாவதியாகிவிடும்.

TT - Talk Time - அழைப்பு நேரம்.

NIG - இரவு நேரத் திட்டம்

இங்கு இரவு நேரத்திட்டங்கள் பொதுவாக நள்ளிரவு 12 யிலிருந்தே ஆரம்பிக்கின்றன ஆனாலும் சில நிறுவனங்களின் திட்டங்கள் வேறுபட்ட நேரத்தில் ஆரம்பிக்கின்றன ( அதிகாலை 1 மற்றும் 2 மணியளவுகளில் ) தயவு செய்து இதனைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணையத் தளங்களுக்குள் பிரவேசியுங்கள்.

எடிசலாட் (Etisalat) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எடிசலாட் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்






டயலொக் (Dialog) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: டயலொக் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








எயாடெல் (Airtel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எயாடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








 மொபிடெல்(Mobitel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்







ஹச் (Hutch) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: ஹச் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்
















நேர்முகப்பரீட்சையில் டுவிட்டர் !!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு  மீண்டும் ஒரு பதிவையே இங்கு பதிவிக்கிறேன்.அண்மையில் நோ்முகப்பரீட்சையொன்றுக்காக  சென்றிருந்தேன்.உண்மையில் , அது ஊடக அமைச்சின் பதவியொன்றுக்காகவே நடைபெற்றது.ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளுமை மற்றும் ஊடகத் தகைமைகள்  போன்றன தகுதிகளாக வினவப்பட்டன.அட, சும்மா போய்ப் பார்ப்போம் என்ற உள் மனதின் வேண்டுகோளுக்கிணங்கவே போக வேண்டிதாயிற்று.அன்று மழை வேறு ”சோவென” பெய்து கொண்டிருந்தது.ஒருவாறாக இடத்தையும் கண்டுபிடித்து சென்றாகிவிட்டது.

வரவேற்பறையில் , இரண்டாவது மாடிக்குப் போகுமாறு உத்தரவிடப்பட்டது.அங்கு நான் மட்டும் தான் சென்றிருந்தேன் , முதலாம் நபராக என்று நினைக்கிறேன்.சரி, எதுவானாலும் பார்ப்போம் என்றெண்ணிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து அழைக்கும் வரை காத்திருந்தேன்.

உள்ளே அழைக்கப்பட்டேன், பொதுவாக, அரச நிறுவனங்களில் பனல் இன்டவியுக்கள் தான் மேற்கொள்ளப்படும்.அதற்கமைய,இதுவும் அவ்வாறுதான் அமைந்தது.மூன்று பேர். ஒரு ஆண், இரண்டு பெண்கள்.

குட் மோனிங் !  என்று வாயிலிருந்து  கொஞ்சம் மரியாதை கலந்த காலை வணக்கம் சொல்லப்பட்டது, என்னால் மூவருக்கும் பொதுவாக. Please sit down , அமரும் படி கூறப்பட்டது.குட் யு பிலீஸ் கிவ் மீ யுவர் சிவி??? , ஆண் குரல். யார், சுவர்??? என்று இழுத்துக் கொண்டு சீவியை நீட்டினேன்.

ஆர் யு ஏ பிரிலான்ஸ் ஜேர்னலிஸ்ட்?? , முதலாவது வினா வினவப்பட்டது என்னிடம்.நானும் பதிலுக்கு yes sir, i'm also be a freelance Journalist. என்று கூறிவிட்டேன்.பின்னர்,அடுக்கடுக்காக கேள்விக்கனைகள் என்னை நோக்கி வீசப்பட்டன. நானும், பதிலளித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சம் பதட்டமாக.வழமையாக எல்லாருக்கும் ஏற்படும் ஒன்றுதானே பதட்டம் .

ஒரு மாதிரியாக, எல்லாவற்றுக்குமாக பதில் கூறிவிட்டிருந்தேன்.ஆனால் திருப்தியில்லை.இறுதியாக , We'll have to be shortlisted , Although if you select, we'll conduct you as soon for the second round of interview with our secretary. என்று கூறப்பட்டது ஆண் குரலினால்.நானும் பதிலுக்கு, OK sir, thank you so much, have a nice day for you.என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

பின்னர் அடுத்த நாள் ஐந்து மணி போல ஒரு அழைப்பு  எனக்கு : Mr........... Could you please come for a second interview with our secretary  on tomorrow at 10 a.m ??? Yes, Mam !! I'll be there on time, thank you so much. bye என்றவாரு உரையாடல் நிறைவுற்றது.

இப்போது, மனதில் ஒரு மகிழ்ச்சி கலந்த பயம். என்ன நடக்கப் போகின்றது நாளை?? என்ற வினாவுக்கான சபலமே அது.

அடுத்த நாள் காலை, நேர காலத்தோடு  தயாராகியிருந்தாலும், வாகன நெரிசல் தாமதப்படத்தி விட்டது.நடப்பது நடக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு  secretary office  க்கு சென்ற போது எனக்கு முன்னதாக வந்திருந்த நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் ஒரு வித Interview க்கான டென்ஸனுடன்.அவர்களைக் கண்டவுடன் கனவுகள்  கலைக்கப்பட்டது போன்றதொரு உணர்வு , தெரிவு செய்யப்படுவேனா ??? இல்லையா ???? என்ற குழப்பத்துடன்.

ஒருவாறாக என்னை சுதாகரித்துக்கொண்டு  நானும் அமர வேண்டியதாயிற்று அவர்களுடன்.பின்னர் ஒவ்வொருவறாக சென்றுகொண்டிருந்தார்கள் என்னைத் தாண்டியவாரு.

இறுதியாக நானும் அழைக்கப்பட்டேன் , விசாலமான அறை ! CCTV  கமராவினுடைய காட்சிகள் ஒரு பக்கமாக திரையில். மேசையில் ஒரு லப்டொப் , May i come sir?? Good Morning sir, மீண்டும் மரியாதை கலந்த  வணக்கம் என்னிடமிருந்து. You Mr................ !!! " Yes, sir !! I'm................... என்றவாரு மீண்டும் கேள்விக்கணைகள் கொஞ்சம் காரசாரமாக. 

அதில் ஒரு கேள்வி இவ்வாறாக : Do you have a twitter account ???? what is the ID of that ????? "Yes, sir !! But, i running that one of  another name sir, not mine  !!! #..........................


அவ்வளவுதான் , இன்டர்வியு பினிஸ்ட் !!! Ok, Thank you, Mr.................... for coming to this interview, as well  Mr..................... we'll conduct you again, if you select.

இப்போ நான் waiting...................................................!!!! ----done----





















தாய்மொழியாம் தமிழ்

எதையாவதைப் பற்றி எழுதலாம் எனும் சிந்தனையின் போதுதான் இன்றைய தினம் ஞாபகத்திற்கு வந்தது “உலக தாய்மொழித் தினம்”. எத்தனை மொழிகளில் உரையாடினாலும் அவரவர் தாய்மொழியில் உரையாடுகின்ற போது    கிடைக்கின்ற சௌகரியம்,தைரியம்,தெளிவுத்தன்மை,நிதானம், பூரண மகிழ்ச்சி ஆகியவற்றை அளவிட முடியாது அனுபவிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ளலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.



என்னுடைய தாய்மொழி “தமிழ்” என்று எத்தனை பேர் மார் தட்டிக் கொள்கிறார்கள் என்பது என்னிடத்திலே பெரியதொரு ஐயப் பாட்டை தோற்றுவித்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும். ஆங்கிலத்தின் ஆதிக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு அதன் வளர்ச்சிப் போக்கு துரித கதியில் பயணித்துக் கொண்டு செல்வதே தெளிவான எடுத்துக்காட்டாகும்.


ஏராளமான நண்பா்கள் தாங்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் மாத்திரம் தான் அங்கிகரிக்கப் படுவோம் என்றதொரு தவறான சிந்தனைப் போக்கை கண்மூடித்தனமாக பின்பற்றி வருவது தாய்மொழியாம் தமிழுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகவே என் மனதில் தோன்றுகின்றது.

என்னைப் பொறுத்த மட்டில் மொழியென்பது ஒரு ஊடகமாகத்தான் உற்று நோக்கப்படுகின்றது.அதாவது ஒரு தொடர்பாடல் ஊடகம் என்றே குறிப்பிடலாம்.





தாய்மொழியை இழிவாக நினைப்பது தாயை இழிவாக நினைப்பதற்கு ஈடாகும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு முதலில் அறிமுகப்படுத்தப்படுவது தாயும் , தாய்மொழியும் தான் என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது..


 கட்டாயம் எப்போதும் தாய்மொழியில் தான் பேச வேண்டுமா ?? என்றதொரு வினாவை எம்மில் பலர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். உண்மையில் உங்களது சிந்தனைப் போக்கு தவறானதாகத்தான் என் மனதில் தோன்றுகின்றது காரணம் என்னவெனில் காலத்தின் தேவைக்கேற்ப தங்களைத் தாங்கள் மாற்றிக் கொள்வதுததான் சிறந்தது என்ற கருத்தின் அடிப்படையில்.

“தழிழ் அவமானமல்ல அதுவொரு அடையாளம் என ஒரு பகுதியினரும் ச்ச்சீ   தமிழா??” என இன்னுமொரு பகுதியினரும் ஒரு மொழிக்கிடையிலேயே பிரிவினவாதத்தை உண்டாக்கும் செயலானது மிகவும் வருந்நத்தக்க தொன்றாகும்.



காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கில அறிவு இன்றியமையாததொன்றாகி விட்டதை எவரொருவராலும் மறுக்க முடியாது. தொழில்நுட்ப புரட்சியின் கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதில் ஆங்கிலம் தான் முதல் மொழி மட்டுமல்ல உலக மொழியும் கூட என்ற அடிப்படையில் இதன் பயன்பாட்டை இழிவாக்கவோ நிறுத்தவோ முடியாததென்பது உலகறிந்த உண்மையாகும்.

வெளிநாட்டவருடனோ அல்லது தமிழ் மொழி நன்கு பரிச்சயம் இல்லாத ஒருவருடனோ ஆங்கிலத்திலோ அல்லது குறிப்பிட்ட வேறு மொழியிலோ உரையாடுவதில் தவறில்லை ஆனால் தமிழ் நன்கு பரிச்சயமானவர்கள் ஆங்கிலதில் உரையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் எனது கருத்து. இது தாய் மொழிக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமைந்து விடுகின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.


கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஏராளமான எடுத்துக்காட்டுக்களுடன் ஆனால் அதை வாசிப்போருக்கு பொறுமை இருக்குமா?? என்பதுதான் என்னிடத்திலே எழும் பெரிய ஐயப்பாடு. அதன் நிமித்தம் இப்பதிவை மிகவும் சுருக்கமாகவே கிறுக்கியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும் ஏராளமாக-






வை-பை யை ஹெக் பன்னுவது எப்படி??


தலைப்பைப்  பார்த்தவுடனேயே  எத்தனை பேர்  இதனை ஆவேசமாக   கிளிக் பண்ணியிருப்பார்கள்  என்பதை என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஏனென்றால் நம்மில் பலர் எது இலவசமாகக் கிடைத்தாலும் அதை விரயமாக்க விரும்புவதில்லை என்ற மிகவும் நல்ல நோக்கத்தை கொள்கையாகக் கடைப்பிடிப்பவர்கள்

என்பதனால்தான்.

சரி , இனி தலைப்புக்கு வருவோம்.எவ்வாரு பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை ( wi-fi ) யை ஹெக் பண்ணுவது என்பதைப் பற்றி.மிகவும் நல்ல நோக்கம் என்பதனால் தான் இப்பதிவை நம்மவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

உண்மையில் வை-பை யை ஹெக் பண்ணுவது பெரியதொரு விடமயல்ல என்பதையும் இவ்விடத்திலே சொல்லியே ஆக வேண்டும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வை-பை யை ஹெக் பண்ணலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

                                                                                                           
WEP , WPA ,  WPA2   போன்ற  பாதுகாப்பு முறைகள்தான் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் WPA2 தான் அதி பாதுகாப்பு முறையாகக் கருதப்படுகின்றது. எது எவ்வாறாயினும் கள்வனுக்கு வேலி போட்டு பயனில்லையே !!

என்னடா  இவன் மொக்கைக்கு மேல மொக்கையைப் போட்டு கடுப்பேத்துறான் என்றவாரு தாங்கள் ஆதங்கப்படுவதை என்னால் உணரமுடியாமலில்லை.மேலும் இவ்விடத்திலே உங்களது பொறுமையை சோதிக்கவும் எனக்குத் துளியும் உடன்பாடில்லை என்றபடியால் விடயத்துக்கு வருகிறேன்.



இந்த உதவியை மட்டும் தான் என்னால் செய்ய முடியும் , இதைப் பயன்படுத்தி நிச்சயம் உங்களால் ஒரு வை-பை யை ஹெக் செய்ய முடியும் , இதனுடன் இன்னும் ஒரு சில காரியங்களை செய்யுமிடத்து.அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட்டால் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைத் தேடி அடிக்க வருவது உறுதியே !!

முழுமையான உதவிகள் தேவைப்படும் மகத்தான நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்னை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

                                                             
ஏன் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை யை ஹெக் செய்ய முனைகின்றீர்கள் ??? அடுத்தவன் பொருள் நமக்கெதுக்கு என்று கூறிக் கொள்ளும் மோசமான முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள்தானே !!??  

என்ன ??? நான் சொல்வதெல்லாம் சரிதானே ???

இப்பதிவை ஒரு நகைச்சுவை உணர்வுடனேயே கிறுக்கியிருக்கிறேன்  என்பதை பாவப்பட்ட வாசிப்போருக்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-

















டுவிட்டர் ( Twitter )

ஏதாவதைப் பற்றி எழுதலாம் எனும் போதுதான் இத்தலைப்பு மனதில் தோன்றியது.டுவிட்டர்” நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானதொன்றுதான் என்றால் அது பொய்யில்லை.உண்மையில் டுவிட்டரானது  வியாபார நோக்குடனேயே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் பெரும்பாலும் இது  கருத்துப் பறிமாற்றத்தினை இலகுவாக மேற்கொள்ளவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பேஸ்புக்கைப் போன்று டுவிட்டரும் ஒரு சமுக வலைத்தளம்தான் ஆனால் பேஸ்புக்கை விட சற்று மாறுபட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.உண்மையில் டுவிட்டரை  பயன்படுத்தவதற்கு  ஓரளவாவது மொழியறிவு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தரமான கருத்துக்கள் மற்றும் தகவல்கள்  சூடான , காரசாரமான விவாதங்கள் கடலை போடல் போன்ற பற்பல செயற்பாடுகள் இதன் மூலம் செவ்வென நிறைவேற்றப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.



டுவிட்டரைப்  பற்றி ஓர் அறிமுகம் தெரியாதவர்களுக்கு :

உண்மையில் இப்பதிவானது எவ்வாறு டுவிட்டரை முழுமையாக கையாள்வது தொடர்பான ஓர் அறிவை வழங்கும் என்று நம்புகிறேன்.

டுவிட்டர் கணக்கொன்றை உருவாக்கல் , அதாவது sign up செய்தல்.


பின்னர் நீங்கள் டுவிட்டர் தளத்திற்குள்  நுழையலாம். இதன் பின்னர் செய்ய வேண்டிய வேலைகள் பல.


Setting ஐ கிளிக் பன்னுங்க -



சரியான தகவல்களைக் கொடுத்து  Save changes  ஐ சொடுக்குங்கள். நீங்கள் விரும்பியவாரு User name ஐயும்  மாற்றலாம்.

பின்னர்  Profile  ஐ edit செய்யுங்கள்



மேலே காட்டியவாரு மேற்கொள்ளலாம். உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் அதையும் இதனுடன் இணைத்து உங்களது கீச்சுக்களை உங்களது பேஸ்புக் வோலில் பதிவேற்றறலாம்.

அடுத்தது டிசைன் பக்கம் போவோம்.



படத்திலே தெளிவான முறையில் காட்டப்பட்டுள்ளது. உங்களது பேக்றவுன்டை நீங்கள் விரும்பியவாரு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் உங்களது டுவிட்டர் கணக்குடன் பல Apps களையும்  இணைக்கலாம் 
.


மேலும் உங்களது டுவிட்டர் டைம்லைனை உங்களது  வலைத்தளத்தில் embed செய்து உங்களது வலைத்தளத்தின்  வருயைகாளர்களின் எண்ணிக்கையைக் 
கூட்டலாம். கீழே காட்டப்படுமாரு. 








மேலும் இங்கு காட்டப்படும் Code ஐ copy செய்து உங்களது Blog இன் HTML  பகுதியில் Paste செய்தால் போதும். 




இனி உங்களது விளையாட்டை  தாராளமாகத் தொடரலாம்.கீச்சத் தொடங்குங்கோ !!!!


டுவிட்ரில் பயன்படுத்தப்படும் சில Codes
# இதைப் பயன்படுத்தி உங்களது கருத்துக்களைப் பகிரலாம். உதாரணமாக
#help #sorry #HRM #Biology #manathilpaddathu .......etc

மேலும் @ தைப் பயன்படுத்தி உங்களது நண்பர்களை இணைக்கலாம்.
@manathilpaddath @black ......etc 



பலோவர்ஸ் மற்றும்  பலோவிங்.





மேலும் உங்களது Followers and Unfollowers போன்ற தகவல்களைப் பெற இதைப் பயன்படுத்துங்கள்


மேலுள்ள தகவல்கள் அனைத்தும்  டுவிட்டர் கணக்கொன்றை எவ்வாறு சரியான முறையில் உருவாக்குவது பற்றி தெளிவு படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

குறிப்பு - சந்தேகங்கள் இருந்தால் மனதில் பட்டது ” டுவிட்டரில் கேட்கலாம்.







Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...