அடுத்த பில்கேட்ஸ் நீங்களா???

உங்களிடம் நம்பிக்கை, விடாமுயற்சி,  கடின உழைப்பு மற்றும் புதிய சிந்தனைகள் போன்றவை காணப்படுமாயின் நீங்கள்தான் அடுத்த  பில்கேட்ஸ் என்று உங்களிடம் பொய் சொல்லி நான் உங்களை உசுப்பியெல்லாம் விட மாட்டேன்.

உலகிலுள்ள ஏராளமானவர்களிடத்தில் நான் மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன என்பதும் அதற்கான காரணமாகும். 

ஆம், தற்போது இவ்உலகில் உள்ள அனைவரும் கடினமாக உழைக்கத் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். அதேபோல் புதிய மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். 

ஆனால் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்தால்,

பெரும்பாலானவர்களிடத்தில் பெரிய கனவுகளோ, அதனை செயற்படுத்துவதற்குரிய போதுமான நீண்ட காலத் திட்டமிடல்களோ இல்லை என்பதுதான் விடயமாகும்.

குறுகிய கால சிறிய இலக்குகளை நோக்கி குறிவைத்திருக்கும் இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கிய கனவுகள் விடயத்தில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள் என்பதுதான் இவர்களின் பில்கேட்ஸ் கனவுகளுக்கு முதல் தடையாக அமைந்து விடுகின்றது.

கிழக்காசிய நாடுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து அதனுடன் தொடர்பானதொரு துறையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் இணைந்து கைநிறைய சம்பாதிப்பதனையே அவர்களது வாழ்நாள் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மையாகும். 

அதிலும் குறிப்பாக தொழிநுட்பத் துறையை தெரிவு செய்து ஏதோ ஒரு அளவுக்கு வருமானம் கிடைத்தவுடன் வீட்டில் பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து ஐயம் செட்டில்ட் டவுன் என்று கூறிக்கொண்டும் திறிகிறார்களாம்...

இதை தவரென்றோ அல்லது இவர்கள் இலட்சியமற்றவர்கள் என்றோ யாராலும் குறை கூற முடியாது.

ஆனால், இவர்கலெல்லாம் அடுத்த பில்கேட்ஸ் அளவுக்கு யோசிப்பார்களேயானால் அதுதான் அவர்களின் வாழ்நாள் முட்டாள் தனம் என்று என்னால் கூற முடியும்.

உங்களின் இலக்குகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க வில்லையெனின் உங்களது இலக்குகள் மிகவும் சிறியவை  -அசிம் பிரேம்ஜி

உங்களின் பெரிய கனவுகள் தான் உங்களின் நீண்ட கால வெற்றிக்கு ஒரு ஊன்றுகோலாகும். 

யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உங்களின் கனவுகளையும் இலக்குகளையும் தீர்மானியுங்கள். 

அதனை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துங்கள். உங்களுக்கென்றே ஒரு கற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீங்கள்தான் அந்த சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ்.

உங்களின் கனவுகளுக்கு சக்தி கொடுங்கள் அதனை எவ்வாறு அடையலாம் என்று திட்டமிடுங்கள். வியூகங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் உங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பீர்கள் என்று உங்களை நம்புங்கள். அதற்கான தயார் படுத்தல்களை ஆரம்பியுங்கள். 

இவை போதும் உங்களின் பெரிய கனவுகளை நிஜமாக்குவதற்கு. 

ஒருபோதும் ஒரே இரவில் வெற்றிவாகையெல்லாம் சூட முடியாது. அதாவது ஓவர் நைட் சக்ஸஸ் (Overnight Success) எல்லாம் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலேயே சாத்தியமாகும்.

மாறாக, முறையான நீண்டகாலத் திட்டமிடல்கள், நம்பிக்கையான உழைப்பு, அதன் மீது மட்டில்லா ஈர்ப்பு (அல்லது அதன் மீது ஒரு வெறி) போன்றவற்றை ஒருமைப்படுத்திய யாருடைய தலையீடுமற்ற செயற்பட்டாடுகள் அவசியம்.

இதற்கு நீங்கள் தயார் எனின்,

நிச்சயமாக அடுத்த பில்கேட்ஸ் நீங்கள்தான்.

ஒரு வேளை அது நானாகக் கூட இருக்கலாம்!!!!

--பாஸ் முதல்ல உங்கள நம்புங்க, அப்புறமா அடுத்தவன நம்பலாம்--

4 comments:

  1. “உங்களின் இலக்குகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க வில்லையெனின் உங்களது இலக்குகள் மிகவும் சிறியவை ”
    - இதை சொன்னது அசிம் பிரேம்ஜி அல்ல, Grayson Marshall

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி ஆனால் என்னுடைய தேடலில் பட்டது பற்றி உங்களின் கவனத்திற்கு:
      1. தயவு செய்து இந்த இணைப்பை சொடுக்குங்கள் அதில் 4 ஆவது என்ன என்பது பற்றி தயவு செய்து பார்க்கவும். பிரபலமான தொழில்சார் சமூகத்தளமான லிங்ன்ட்இன்னின் இணைப்பு.
      https://www.linkedin.com/pulse/20141007133100-18521876-10-things-about-billionaires-by-billionaires

      “if people aren't laughing at your goals your goals are too small” -- Azim Premji
      Goals- மொழிமாற்றம் செய்தால் தமிழில் இலக்குகள்.

      மேலும் உசாத்துணைக்கு கூகிள் இமேச் அல்லது வெப் ரிசேச்சை தயவு செய்து பயன்படுத்துங்கள்.

      2. ”If people aren't laughing at your dreams, then they aren't big enough!" - Grayson Marshall
      dreams- கனவுகள்
      ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது இதுவாகவும் இருக்கலாம்.

      இரண்டிற்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு காணப்படுவதாக நான் நினைக்கிறேன்.

      மீண்டும் ஒரு முறை நன்றி, தரமான தேடல் உங்களுடையது. வெறுமனே என்னுடைய கருத்தை உள்வாங்காமல் நீங்கள் அதனை மேலாய்வு செய்திருக்கிறீர்கள்.

      உண்மையில் மகிழ்ச்சி!!

      உங்களின் பதிலுக்காக.............I am waiting!!!

      தயவு செய்து இதையும் சற்று நோக்குங்கள்:
      http://www.quora.com/Whats-the-exact-version-of-the-quote-If-people-aren’t-laughing-at-your-dream-then-they-aren’t-big-enough-Who-said-it

      Delete
  2. உங்களின் கருத்துக்கு நன்றி ஆனால் என்னுடைய தேடலில் பட்டது பற்றி உங்களின் கவனத்திற்கு:
    1. தயவு செய்து இந்த இணைப்பை சொடுக்குங்கள் அதில் 4 ஆவது என்ன என்பது பற்றி தயவு செய்து பார்க்கவும். பிரபலமான தொழில்சார் சமூகத்தளமான லிங்ன்ட்இன்னின் இணைப்பு.
    https://www.linkedin.com/pulse/20141007133100-18521876-10-things-about-billionaires-by-billionaires

    “if people aren't laughing at your goals your goals are too small” -- Azim Premji
    Goals- மொழிமாற்றம் செய்தால் தமிழில் இலக்குகள்.

    மேலும் உசாத்துணைக்கு கூகிள் இமேச் அல்லது வெப் ரிசேச்சை தயவு செய்து பயன்படுத்துங்கள்.

    2. ”If people aren't laughing at your dreams, then they aren't big enough!" - Grayson Marshall
    dreams- கனவுகள்
    ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது இதுவாகவும் இருக்கலாம்.

    இரண்டிற்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு காணப்படுவதாக நான் நினைக்கிறேன்.

    மீண்டும் ஒரு முறை நன்றி, தரமான தேடல் உங்களுடையது. வெறுமனே என்னுடைய கருத்தை உள்வாங்காமல் நீங்கள் அதனை மேலாய்வு செய்திருக்கிறீர்கள்.

    உண்மையில் மகிழ்ச்சி!!

    உங்களின் பதிலுக்காக.............I am waiting!!!

    ReplyDelete
  3. தயவு செய்து இதையும் சற்று நோக்குங்கள்:
    http://www.quora.com/Whats-the-exact-version-of-the-quote-If-people-aren’t-laughing-at-your-dream-then-they-aren’t-big-enough-Who-said-it

    ReplyDelete

Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...