Showing posts with label தொலைத்தொடர்பு. Show all posts
Showing posts with label தொலைத்தொடர்பு. Show all posts

பேஸ்புக்கும் பேயாட்டமும் !

கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் இப்பதிவை எழுதுவதற்கு  ஏராளமான காரணங்கள்  எனினும் அவற்றை  இங்கே குறிப்பிட  முடியாத  நிலையில் நான்....................???????

இன்று முதலாம் வகுப்பு படிக்கும் பிள்ளையும்  பேஸ்புக்கென்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் நிலை. அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் தலை விரித்தாடுகின்றதென்றால் தவறில்லை.

தொலைத்தொடர்பு  நோக்கத்தினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதுதான்  பேஸ்புக்கெனும் சமூக வலைத்தளம், ஆனால் இன்று  இது முற்றிலும் மாறுபட்ட  தேவைகளுக்காக  பயன்படுத்தப்படுவது  கொஞ்சம் கவலை  அளித்தாலும்  இதன் வளா்ச்சியைக்கண்டு  வியந்து  பாராட்டமல்  இருக்க முடியாது. கடின உழைப்பின்  பிரதிபளிப்பாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இன்று பேஸ்புக் கணக்கு இல்லாத ஒருவனை ஏதோ  கொலைகாரனைப் பார்ப்பது போல் இச்சமூகத்தின் பார்வை அமைகின்றது. இது தவறா ? சரியா ? என்ற விவாதம் ஒருபுறமிருக்க  பேஸ்புக்கின் மீதான மோகமும்  குறைந்த பாடில்லை.

மாணவர்களின் எதிர்காலத்தை  கேள்விக் குறியோடு  நகர்த்துவதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான்  என்றால் இதற்கான மாற்றுக் கருத்துக்களும்  குறைவாகத்தான் இருக்குமென்பதில் எனக்கு  துளியும் ஐயமில்லை.

தொழிநுட்பத்தின்  அசுர வளா்ச்சியின்  தாக்கம்  பேஸ்புக்கின் விரிவுபடுத்தலை தூண்டுகின்றதென்பதுதான்  உண்மை.மடிக்கணிணி(Laptop), ஐபேட், ஐபோன், டெப்லட் பீசி  போன்றவற்றின் பாவனை இதற்கு ஊக்கியாக  அமைந்து விடுகின்றன என்பதுதான் திண்ணம்.

பேஸ்புக் பேயாட்டத்தின் பாதகமான விளைவுகள் ஏராளம் அவற்றுள் சில
*மந்தமான பரீட்சைப் பெறுபேறுகள்
*பாலியல் துஸ்பிரயோகங்கள்
*பண மோசடி
*இணையத்தள மோசடிகள் (cyber crime) என்றவறு பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்லும்.

நேர விரயம்  என்ற அடிப்படையில் பார்த்தால் பேஸ்புக்கின் பங்கு பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதை  இலகுவாக அவதானித்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தத்தான் வேண்டும் , அளவோடு பயன்படுத்தும் போது  அதன் பயன்பாடுகளை பாதகமற்ற முறையில்  அனுபவிக்கலாம்  ஆனால் அளவு மீறும் போதுதான் பாரியளவிலான பாதிப்புக்களுக்கு முகங்ககொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவோம்  என்பது  யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

ஆங்கிலத்தில் இதை இவ்வாறுதான் குறிப்பிடுவார்களாம் !
Too much of  anything is good for nothing !






















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...