ஆடாம ஜெயிச்சோமடா

“எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
இவரும் ஒருவர்.

இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
 என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














இலங்கையிலுள்ள முற்கொடுப்பனவுத் தரவுத் திட்டங்கள் ஒரு ஒப்பீடு 2014

குறிப்பு : இப் பதிவானது இலங்கையிலுள்ள இணையப் பாவனையாளர்களுக்கு நிச்சயமாக உதவக் கூடியவாறானதொன்றாகவே அமையப்பெறும். மேலும் இதன் மூலம் வினைத்திறனான தரவுத் திட்டமொன்றை தெரிவு செய்யக்கூடிய தெளிவொன்றும் உருவாகும்.

சரி,

இனி பதிவிற்குள் நுழையலாம்.

இணையப்புரட்சி என்றதொரு யுகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதனது அத்தியவசியமான தேவைகளுக்குள் இணையமும் ஒன்றாகிவிட்டது. இணையம் இன்றி  வாழ்வதற்க்கு மனிதன் தயாரில்லை என்றதொரு நிலைக்கு மனிதனது தேவைகள் அனைத்தும் இணையத்திற்குள் முடக்கப்பட்டு விட்டன என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

இது ஒரு புறமிருக்க இணையக் கட்டணங்கள் என்றதொரு விடயமும் மனிதனது பிரதான செலவினங்களுக்குள் உள்ளடக்கலாகிவிட்டது. எது எவ்வாறாயினும் இதனைத் தவிர்த்துக் கொள்ளவதென்பது சற்றுக் கடினமானதொரு காரியம் ஆனாலும் ஒப்பீட்டளவில் இதனை இழிவாக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இலங்கையில் இணையப் பாவணையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான்  செல்வதாக அண்மைய ஆய்வறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது ஒரு விதத்தில் சாதகமானதாக உற்று நோக்கப்பட்டாலும் மற்றொரு விதத்தில் பாதகமானதொன்றாகவே அவதானிக்கப்படுகின்றது.

எடிசலாட்(Etisalat), டயலொக்(Dialog), மொபிடெல்(Mobitel), எயாடெல்(Airtel) மற்றும் ஹச்(Hutch) ஆகிய இவ் ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் இலங்கையில் பிரதான இணையப் பங்காளர்களாகவும் வழங்குனர்களாவும் செயற்பட்டு வருகின்றன.

ஒப்பீட்டளவில் வேறுபட்ட தரவுத் திட்டங்களை/பொதிகளை (Data Plans/Packages) வழங்குவதிலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தங்களோடு தக்க வைத்துக் கொள்வதிலும் இந் நிறுவனங்கள் மிகவும் கச்சிதமாக  தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சாதாரணமாகவே தரவுத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த இவ் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டிற்குள் சமூக வலைத்தளங்களுக்கென்றே தனிப்பட்ட தரவுத் திட்டங்களை வழங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு தினம் தினம் விசேட புதிய தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க,

என்னால் இங்கு ஒரு சிறிய முயற்சியாக இவ் ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்களை அதாவது முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்களை ஒப்பு நோக்கியவாறான ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட  தரவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது இதன் பிரதான நோக்கம் யாதெனில் எந்த நிறுவனம் மிகவும் வினைத்திறனான தரவுத் திட்டத்தை வழங்குகின்றது என்பதாகும்.

 இதன் மூலம் இணையச் செலவினங்களை ஓரளவுக்கு இழிவாக்கலாம் என்றதொரு அடிப்படையில்தான் என்னால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இவ் ஒப்பீட்டு அட்டவணையிலுள்ள தகவல்கள் அனைத்தும் நேரடியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை மேலும் இத் தகவல்கள்  அதாவது செப்ரம்பர் மாதம் 16 ம் திகதி 2014 ஆண்டுக்குரியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன (Updated Details).

ஒப்பீட்டு அட்டவணை  


தெளிவான அட்டவணைக்கு இதனை சொடுக்கவும்

இங்கு அட்டவணையில் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்கள் அதனது விலைகளுக்கேற்ப ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட விலை வீச்சுக்கேற்ப எவ்வாறான தரவுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்பதை மிகவும் இலகுவான முறையில் அவதானிக்கவும் முடியுமாகவுள்ளது.

உதவிக் குறிப்புகள் :
Prize range - விலை வீச்சு, அதாவது இங்கு மூன்று விலை வீச்சுக்குள் எல்லைப் படுத்தப்பட்ட தரவுப் பொதிகள்/திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

1. ரூபா 1- 99 வரையில்
2. ரூபா 100 - 299 வரையில்
3. ரூபா 300 - 1999 வரையில்

இலகுவாக ஒப்பீட்டை மேற்கொள்ளலாம்.

Prize - விலை, அதாவது குறிப்பிட்ட தரவுத் திட்டத்தின் விலை

Data - தரவுத் திட்டம் (MB) அலகில் தரப்பட்டுள்ளது மேலும் என்னால் சில இடங்களில் GB யிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக 110+50 எனில் 110MB ஆனது பகல் பொழுதிலும் 50MB என்பது இரவுப் பொழுதிலும் பாவிக்க கூடியவாறாக உள்ளது.

SMS/Call - இதன் போது வழங்கப்படுகின்ற குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளுர் அழைப்பு நிமிடம்.

உதாரணமாக 50/10 எனில், 50 குறுஞ்செய்திகள் மற்றும் 10 நிமிட அழைப்பு இலவசம் என்றவாறு அது  அமையப் பெறும்

Val (Validity) - செல்லுபடிக்காலம், அதாவது இத் தரவுத் திட்டமானது எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதாகும்.

உதாரணமாக : 7 என்றால் இத்தரவுத் திட்டமானது 7 நாட்களுக்குள் செல்லுபடியாகும் என்பதாகும் அதன் பிறகு அது தானாகவே காலாவதியாகிவிடும்.

TT - Talk Time - அழைப்பு நேரம்.

NIG - இரவு நேரத் திட்டம்

இங்கு இரவு நேரத்திட்டங்கள் பொதுவாக நள்ளிரவு 12 யிலிருந்தே ஆரம்பிக்கின்றன ஆனாலும் சில நிறுவனங்களின் திட்டங்கள் வேறுபட்ட நேரத்தில் ஆரம்பிக்கின்றன ( அதிகாலை 1 மற்றும் 2 மணியளவுகளில் ) தயவு செய்து இதனைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணையத் தளங்களுக்குள் பிரவேசியுங்கள்.

எடிசலாட் (Etisalat) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எடிசலாட் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்






டயலொக் (Dialog) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: டயலொக் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








எயாடெல் (Airtel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எயாடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








 மொபிடெல்(Mobitel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்







ஹச் (Hutch) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: ஹச் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்
















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...