இற்றைக்கு சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தான் என்னுடைய கணனியுடனான பயணம் ஆரம்பமானது.அப்போது வயது 10. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறைவு செய்த கையோடு எங்கள் ஊறில் உள்ள கணனி வகுப்புக்களை நடாத்துவதற்கென்று பிரபலமான கல்லூரியொன்றின் கணனிப் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுமாரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்பாவின் முயற்சியால்தான் ஒரு வருட இலவச கணனி வகுப்புக்கான பரீட்சையில் தேறக்கூடியதொரு வாய்ப்பும் கிட்டியது. அங்குதான் என்னுடைய கணனிக்கல்விக்கான அடித்தளம் இடப்பட்டதென்பதுதான் உண்மையும் கூட.
அது நாள் வரைக்கும் நான் கணனியை எவ்விடத்திலும் ஆசைக்குக் கூட கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும். முதலாவது கணனி வகுப்பு , Introduction to Computer என்ற தோறனையில்தான் ஆசிரியர் வந்து வகுப்பை நடத்தி விட்டு , நாளைக்கு Practical Class இல் பார்ப்போம் என்று கூறிவிட்டு சென்று விட்டார் . எனக்கோ உள்ளுக்குள் பெரியதொரு குஷி , நாளைக்கு நாம எப்புடியாச்சும் computer ஐ தொட்டுப் பாத்திடலாம் என்ற நம்பிக்கைதான் அந்த மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்திருக்குமென்று இப்போது நினைக்கத் தோனுகின்றது.
முதன் முதலாக கணனியை நேரடியாகக் கண்ட சந்தர்ப்பம் , வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதொரு திருப்தியைத் தந்தது. வெள்ளைக் களரில் பெரிய TV ஒன்றும் , அதுக்குப் பக்கத்தில் பெரியதொரு பெட்டி வடிவிலான பொருள் ஒன்றும் மேசையில் ஏதோ கொஞ்சம் நீளமாக ABCD....... என்றவாறு ஆங்கில எழுத்துக்கள நிறைந்த பொருளொன்றும் , உருண்டையாக வயருடன் இணைக்கப்பட்ட பொருளொன்றுமாக , அங்கு வைக்கப்பட்டிருந்தன.இவற்றையெல்லாம் அதற்க்கு முன்னர் நான் எங்குமே கண்டது கிடையாது.
ஆசிரியர் “ Students இதுதான் கம்பியூட்டர் ! இது மொனிட்டர் , இது CPU , இது கீ போட் , இது MOUSE என்றவாரு ஒவ்வொன்றாக விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார் , நானும் ஆசைக்கு ஒரு தரம் அவற்றையெல்லாம் தொட்டுப் பார்த்து விட்டிருந்தேன்.
மேலும் எவ்வாரு தட்டச்சு செய்வது என்றும் சொல்லிக் கொடுக்கப்பட்டது , கறுப்பான திரையில் வெள்ளைக்களரில் எழுத்துக்கள இருக்கும் அதைப் பார்த்து வேகமாக ரைப் செய்ய வேண்டும் என்றும் வேகமாகவும் பிழையின்றியும் அதை செய்யும் போது அதிக புள்ளிகள் வழுங்கப்படும் என்றுமாரு கூறி தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கணனிகள் வழங்கப்பட்டு ரைப் செய்யுமாரும் கூறப்பட்டது. எனக்கோ , அதுதான் முதல்முறை கணனியை தொட்டுப் பார்ப்பதும் என்பதால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு வழியாக பயத்துடன் ரைப் செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தாக தேடிக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது , அந்தக்கணத்தை ஒருபோதுமே மறக்க முடியாது.
இங்கு , எத்தனை பேருக்கு DAVE கேம் ஞாபகம் இருக்குமென்று எனக்குத் தெரிய வில்லை , ஆனால் நான் கணனியில் முதன் முதலில் விளையாடிய விளையாட்டென்றால் அது DAVE game தான்.
Introduction to Computer . MS-DOS . என்றவாருதான் எனது கணனிக்கற்றல் ஆரம்பமானது. அங்கு காணப்பட்ட பெருப்பாலான கணனிகளில் DOS இயங்கு தளமே நிறுவப்பப்பட்டிருந்தது. ஒரு சில கணனிகளில் வர்ணத்திரைகளாக (Colour SCREEN) காணப்பட்டன , அதில் சிலர் , எங்களை விட மூத்த மாணவர்கள் எதையோ வரைந்து கொண்டும் நிறந்தீட்டிக் கொண்டுமாக சீரியசாக வேலைசெய்துகொண்டிருந்தனர். ( Drawing and Painting ). அதுதான் Paint Programme என்றும் அதில் நீங்கள் விரும்பியவாரு படங்கள் வரைந்தும் நிறந்தீட்டியும் விளையாடலாம் எனறவாரு எங்களது ஆசிரியர் அறிவுருத்தினார்.
இவ்வாறாகத்தான் எனது கணனிப் பயணம் ஆரம்பமானது.
-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-