Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
 என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














ஏதோ எழுதனும்னு தோனுது !

"அட இவனுக்கு வேற வேலயேயில்ல சும்மா எப்ப பாத்தாலும்  சம்பந்தமில்லாமலேயே எதையாச்சும் கதைக்கிறது" 

என ஆதங்கப்படும் உங்களின்ட மைன்ட் வொய்ஸ் எனக்கு கேக்குதுங்க. (பட்)

என்னதான் ஆனாலும் நீங்க வாசிச்சுத்தான் ஆகனும் ஏனன்டா இது என்னன்ட கட்டள.




 சும்மா நம்முட விஜயகாந்த் ஸ்டைல்ல ரை பண்ணிப் பாத்தனுங்கோ !!!!!

வ்வ்வ்வ்வ் . பிலீஸ் சிறிக்காம வாசிங்கோய். 

அது என்னன்னா, கொஞ்சக் காலத்துக்கு முன்னால வை-பை யை ஹெக் பண்றது எப்புடின்னு ஒரு பதிவப் போட்டனுங்க,


 சரி போட்டாய் அதுக்கு இப்ப என்னங்ற??? ன்னுதானே கேக்க வாறிங்க,

 என்ன எம் ஐ ரைட் ???

சரி சரி, கொஞ்சம் பொறுங்க மேட்டருக்கு வாறன்,

 அதுவென்னன்னாங்க!!

அந்தப் பதிவிருக்கே அது நம்முட போய்ஸ், கேல்ஸ் மற்றும் மகத்தான நல்லுள்ளம் படைத்த எம் மக்களின்ட மத்தியில சும்மா அப்புடி ரீச்சாகியிருக்குன்னு எனக்கு இன்னய்க்குத்தான் தெரிய வந்திச்சு !

அதனால  யு நோ , நான் உடனே குசியாவி,  அதே மாதிரி இன்னொரு பதிவப் போடலாம்னு பாத்துத்தான் இங்க வந்தனுங்கோய்,

ஆனா, 

என்னடா ஆனா, ஆவனா என்டுட்டு” இவர் ஒரு ஆளு, இவருக்கொரு புலக்கு, அதில நாம வேறன்னு கடுப்பின்  உச்சிக்கே போகும் சகோதர, சகோதரிகளின் உணர்ச்சியை என்னால புரிய முடியாமில்ல.



காய்ஸ்,ஏஸ், ஐ கேன் அன்டஸ்டேன் யுவர் பீலிங்ஸ்.

அட மொக்க, இதான் மேட்டரா??? 

இதுக்கத்தானா இம்பட்டு பில்டப்பான்னு,  நீங்க கேக்கிறதும் புரியுதுங்கோ !!

பாருங்க நான் இப்ப உண்மயச் சொன்னா,  நீங்க சத்தியமா என்னத் தேடி வந்து அடிப்பீங்க, அது மட்டும் உறுதியாத் தெரியும்.

சரி பரவால சொல்றன் அது வந்து,

உண்மையாவே எனக்கிட்ட இங்க எழுதுறத்துக்கு எந்தவொரு ஐடியாவுமே இருக்கல்ல,

பட் கொஞ்சம் எழுதுற மூட் இருந்திச்சு அதான் சும்மா எதயாச்சும் கிறுக்குலாமேய்ன்னு ஸ்டாட் பண்ணினேன் எடயில ஒரு பக்கி வந்து மூட ஸ்பொயில் பண்ணிட்டு.

சோ, நான் இப்ப என்ன சொல்ல வாறன்னா !!!! 

நீ ஒரு மண்ணும் சொல்ல வேணாம், என்ன------- க்கடா !!!!!!

 என நீங்க கோபத்தின் உச்சிக்கே போவீங்கன்னும் தெரியும்.

 ஆனா ஒண்டு மட்டும் சொல்றன் கேட்டுக்கொங்க, அது என்னன்னா ???

நான் எழுதத்தான் வந்தேன், ஆனா  எடயில  வந்து என்னன்ட மூட ஸ்பொயில்  பண்ணின அந்தப் பக்கிக்குத்தான்  இந்த அப்புட்டு கெட்ட வார்த்தையும்  சமர்ப்பணம்.


 என்ன சரியா ???

இல்லாட்டியும், இவர் பெரிய எழுத்தாளர், கிளிச்சிடுவாறு என்னுதானே மைன்ட் வொய்ஸ் சொல்லுது. 

அட சும்மா பொய் சொல்லாம சொல்லுங்க !!

என்ன நான் சொன்னது சரிதானே ??



அப்பப்பா, டேய் நாங்க என்னதான்டா உனக்கு பாவம் செஞ்சோம், இப்படிப் போட்டு படுத்துறானேன்னு அந்த அக்கா நெனய்க்காவு.

ஓகேங்க,  ஐயம் எக்ஸ்-ரீம்லீ சொறீங்க, இனி நான் பேசல, போறன் பாய் !!!

ஆனா பொறகும் வருவேன்,  தயவு செஞ்சு அதுக்காக மனச தயார் படுத்திக்கொங்கோ !!!! 

போய்ட்டு வாறன்....................................

------அட லூசுப்பய-புல்லன்னா ஏசுறிங்க, பொறுங்க உங்கள வச்சுக்கிறன்-------

ஹேய் ஹேய் ஹேய், நான் ஒன்னும் அந்த அர்தத்தில சொல்லலிங்க, சும்மா ஒரு வ்லோல்ல சொல்லிப்புட்டன். 

சோ, டோன் மிஸ்டேக் மீ யா !!



பிகோஸ் ஐயம் பேசிக்களி குட் பெமிலி - காய்------ யு நோ !!!! 


நான் ஏதோ கிறுக்கிப்புட்டேன் என நெனக்கிறன் தொடர்ந்தும் கிறுக்குவோம் இது போலவும்
















உன்னால் முடியும் !

ஏதோ சிந்தனையில் இருந்த போது தோன்றிய தலைப்புதான் “உன்னால் முடியும்” .வேறுபட்ட கோணத்தில் கிறுக்குவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அந்த அடிப்படையில்தான் இப்பதிவை எழுதுகின்றேன்.மனிதனாகப் பிறந்தால் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை கடைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவன்தான்  நான்.“ சாதிக்கப் பிறந்தவன் தான் மனிதன்” மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று
கூட சொல்லலாம் ஆனால் கடவுளுடன் ஒப்பிட முடியாதென்பது எனது தனிப்பட்ட கருத்து.




ஏராளமான தோல்விகள் , அவமானங்கள் போன்றவற்றை சந்தித்த பெருமைக்குரியவன் என்று கூட என்னைச் சொல்லாம். சில வேளைகளில் தோல்விகள் என்னை முழுமையாக ஆட்கொண்ட சந்தர்ப்பங்களை நினைக்கும் போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு வித மாற்றத்தை உணர முடிகின்றது.








“தோமஸ் அல்வா எடிசனைப்” பற்றியதொரு ஆழ்மனப்பதிவானது  நான் நம்பிக்கை இழந்து  போகும் தருணங்களில் என்னுள் புகுந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம்.எடிசனின் முயற்சியை நினைத்து நான் வியக்காத நாட்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு எடிசனின் முயற்சிகள் மற்றும் தோல்விச்சரித்திரங்கள் என்னுள் மிகவும் ஆழமாக வேறூன்றியிருப்பதை என்னால் கூட சில நேரங்களில் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்றால்  அது மிகையில்லை.


எதையாவத சாதிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேறூன்ற ஆரம்பித்தது எனது பாடசாலைப் பருவத்தில்தான்.பல்வேறு ஆசைகள் , எண்ணங்ளை சுமந்த காலங்கள் அவை.பசுமை கலந்த காலங்கள் மற்றும் நினைவுகளை சுமந்த பருவம் என்று கூட குறிப்பிடலாம்.பாடசாலைக் காலங்களில் பெருப்பாலான தோல்விகளை சந்தித்த அனுபவங்கள் மிகவும் குறைவென்றுதான் சொல்ல வேண்டும்.


தோல்விகள் என்னை புரட்டி எடுத்த சந்தர்ப்பங்களில் “ஏன்டா பிறந்தோம்?”
என்றதொரு  வினாவை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.ஆழ்மனதின் அபார சக்தி என்னுள் இதன் போது வெளிப்படுத்தப்பட்டதும் என்னையறியாமலே  நடந்ததொரு  நிகழ்வாகக் கூட இருக்கலாம்.

“முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை” தந்தையின்  அமுத மொழி அடிக்கடி என்னை விழிப்படைய வைத்த தருணங்கள் ஏராளம்.எனது வெற்றியின் பாதிப்பகுதி தந்தைக்க சமர்ப்பணமாகத்தான் செல்ல வேண்டும் என்றால் அதை மறுப்பதற்கு எனக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“உயிர் உள்ளவரை போராடு”  எனக்கு நானே அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒன்று.ஏராளமான சந்தர்ப்பங்களில் என்னுடைய முயற்சிகளுக்க தக்கதொரு விளைவு கிடைத்ததில்லை என்றால் அது மிகைப்படுத்தப்படா உண்மையாகத்தான் இருக்கும்.எத்தனை முறை வெற்றி பெற்றேன்  என்பதைப் பற்றி நான் நினைத்ததை விட எத்தனை முறை தோற்றுப் போனேன் என்று நினைத்த தருணங்கள் தான் அதிகம்.


தோல்விகளைக் கண்டு சோர்ந்து போன காலங்ளை நினைத்துப் பார்க்கும் போது என் மீது எனக்குக் கூட ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.தோல்விகள்தான்  எனக்கு நல்லதொரு நண்பன் என்று கூறுமளவுக்கு ஏராளமான அனுபவப் பாடங்கைளை கற்றுத்  தந்திருக்கின்றது.

ஆழ்மனதை ஆட்டிப் படைக்கும்  சக்தியை சற்று அதிகரிக்கும் போதுதான் வெற்றியின் வாசணையை நுகர முடியும் என்பது எனது தனிப்பட்ட அனுபவக் கருத்து , இதனுடன் எத்தனை பேர் உடன்படுவார்கள்  என்பதுதான்  ஐயம்.

-தொடர்ந்து  கதைப்போம்-









Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...