அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
 என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























No comments:

Post a Comment

Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...