Showing posts with label ஆடாம ஜெயிச்சோமடா. Show all posts
Showing posts with label ஆடாம ஜெயிச்சோமடா. Show all posts

ஆடாம ஜெயிச்சோமடா

“எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
இவரும் ஒருவர்.

இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...