Showing posts with label போட்டோ சொப். Show all posts
Showing posts with label போட்டோ சொப். Show all posts

போட்டோ சொப் முற்றிலும் இலவசம்! Photoshop CS2

போட்டோ சொப்பின் வரலாறு மிகவும் நீண்டது அதாவது 25 வருடங்கள் பழமையானது. உண்மையில் இது 1990 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக திருத்தப்பட்ட பதிப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. சுமார் 25 மொழிகளில் முற்றிலும் புதிய மேம்படுத்தலுடன்  இவை கிடைக்கப்பெறுகின்றன என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் இதைப் பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களுக்கு விக்கிபீடியா மற்றும் அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குள் நுழைவதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.


பல்வேறு துறைகளில் போட்டோ சொப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும், இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை. எது எவ்வாறாகினும் அடோப் நிறுவனமானது தனது மென் பொருட்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதில்லை என்ற உண்மையும் எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

உண்மையில் இதற்கான காரணம் அவை தொழிற் துறையில் மிகவும் இன்றியமையாத மற்றும் முன்னனியான மென் பொருள் உற்பத்திகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதே எனலாம்.

ஆனால் சில நேரங்களில் அதாவது மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய பதிப்புகளின் தாக்கத்தால் பழைய பதிப்புகளை இலவசமாக வழங்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன என்பது சற்று மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

மேலும் இவை நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தொடர் எண்களுடன் கிடைக்கப் பெறுவதே சிறப்பம்சமாகும்.

இங்கு நீங்கள் அடோப் நிறுவனத்தின் CS2 உற்பத்திகளை முற்றிலும் இலவசமாக சட்ட ரீதியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.



1. இவற்றை தரவிறக்கிக் கொள்ள உங்களது கணினி பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்யதல் வேண்டும்.



  • Mac OS X v.10.2.8–v.10.3.8, PowerPC® G4 or G5 processor
  • Microsoft® Windows® 2000/Windows XP, Intel® Pentium® III or 4 processor

  • 2. இரண்டாவதாக பின்வரும் இணைப்பை சொடுக்குவதன் மூலமாக தரவிறக்க வலைப் பக்கத்திற்குள் நுழையலாம். இணைப்பு 
                                                       
    3. மூன்றாவதாக Accept என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக:


    பின்வருமாறு அடோப் ஐடியினுள் உள்நுழையுமாறு வினவப்படுவீர்கள்


    அவ்வாறு உங்களுக்கு அடோப் ஐடி இருந்தால் உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் வழங்கி  உள்நுழையலாம்.

    அவ்வாறு உங்களுக்கு அடோப் ஐடி இல்லை எனின், 

    Get and Adope ID என்பதை சொடுக்குவதன் மூலமாக உருவாக்கி கொள்ளலாம்



    அவ்வாறு உருவாக்கி உள் நுழைந்ததன் பின்னராக
    பின்வரும் பக்கத்திற்கு திருப்பப்படுவீர்கள் அங்கு நீங்கள் மீண்டும்
    ஒரு முறை பின்வரும் ACCEPT பொத்தானை அழுத்தி 
    உங்களது தரவிறக்க பட்டியலை பார்வையிடலாம்.



    அதன் பின்னர் ஆங்கில மொழியை தெரிவு செய்து அங்கே போட்டோ சொப் CS2 என்பதை சொடுக்கி உங்களது தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.



    இங்கு இரண்டு விதமான இயங்கு தளங்களுக்கான தரவிறக்க தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன 

    1. மெக் - அதாவது நீங்கள் அப்பிள் இயங்குதளம் பயன்படுத்தினால்
    2. வின்டோஸ்- மைக்ரோ சொப்டின் வின்டோஸ் இயக்குதளம் பயன்படுத்தினால்

    அதன் அருகில் ஒவ்வொன்றுக்குமான சட்ட ரீதியான தொடர் எண்கள் தரப்பட்டுள்ளன அவற்றை இறுதியாக மென் பொருளை நிறுவும் போது
    உள்ளிட வேண்டும். 

    இதன் பின்னர் PHOTOSHOP CS2 உடன் உங்களது மாயாஜால வித்தைகள் மற்றும் இன்னோரன்ன பற்பல விடயங்களை மிகவும் இலகுவாகவும் துல்லியமாகவும் மேற் கொள்ளலாம் என்பது உறுதியே!

    குறிப்பு: இணைய சந்தைகளில் குவிந்து கிடக்கும் இரண்டாம் தர போலியான மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை விடுத்து அதை விட மேம்படுத்தலில் சற்றுத் தாழ்வான சட்ட ரீதியான முறைபடியாக வழங்கப்பட்ட தொடர் எண்களுடன் கூடிய இவ் மென் பொருட்கள் எவ்வளோ சிறந்தது. மேலும் அவ்வாறு கிடைக்கப் பெறும் சில மென் பொருட்கள் ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் தாமாகவே காலாவதியாகி விட்டு பணம் செலுத்துங்கள் என்று உங்களை அடிக்கடி தொல்லைப் படுத்தும் என்பது நிச்சயமே. 

    ---- தொடா்ந்தும் கதைப்போம்  தொழிநுட்பத்துடன்  இதுபோலவும்....







    Creative Commons License
    manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
    Related Posts Plugin for WordPress, Blogger...