வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இலங்கைத் தமிழில் சொன்னால் “சட்டப்படியாக இருக்கு மச்சான்” என்று சொல்லுமளவுக்கு  திரைப்படம் பிரமாதமாக  செதுக்கப்பட்டிருக்கின்றது. சிவகார்த்திகேயனுக்கென்றே அமையப்பெற்ற கதையம்சம்கூடியதொரு திரைப்படமாகத்தான்  பொன்றாம் இதை  தயாரித்திருப்பாரோ என்னவோ ?? என்று கூட கேட்கத் தோனுது. 



சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால் “ SIMPLY  SUPERB"...... அதாவது சரியான விகிதத்தில் காரம் , மசாலா மற்றும் மொளகாப்பொடி போன்றவை சேர்ந்ததொரு கலவையாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

சத்தியராஜின் வழக்கமான அசத்தலான  நடிப்பு  படத்தின் வெற்றிக்கான ஒரு காரணியென்றும் கூறலாம் . இதில் இவருக்கு சீரியஸான ஜோக்கர் பாத்திரம். சும்மா பிண்ணியிருக்கிறாரு  மனிசன்.சிவனான்டி ன்னா ஊருக்குள்ள  பயம் ஆனா மனிசன்  உள்ளுக்குள்ள செம ஜோக்கர். இதை கிளைமக்ஸிலேயே போட்டு உடைத்திருக்கிறாரு  பொன்றாம். இதுதான் படத்துக்கு இன்னும் கொஞ்சம் மேலதிக பலத்தையும்  சேர்த்திருந்தது.


அண்மைக்காலமாக  தமிழில் வெளியான பல திரைப்படங்கள் என்னைப் போன்ற ரசிகர்களை ஏமாற்றினாலும் , வருத்தப் படாத வாலிபர் சங்கம் அவற்றையெல்லாம் ஈடு செய்வதற்கான முயற்சியாகத்தான் இருக்குமோ என்னவோ ?? என்று கூட என்னத் தோனுகின்றது. இதற்காக மீண்டும் ஒரு முறை பொன்றாமுக்கு  நன்றி  சொல்லக் கடமைப்  பட்டுள்ளோம்.

சிரிப்புக்கு பஞ்சமில்லாமலும்  விருவிருப்புக் குறையாமலும் எந்தவொரு ஆபாச காட்சிகளுக்கும்  இடங்கொடுங்காமலும்  தரமான படைப்புக்ளை தமிழ் சினிமாவிலும் படைக்க முடியும் என்பதற்க்கு  வருத்தப்படாத வாலிபர் சங்கம்  ஒரு முன்னுதாரனமாகுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

சூரி யைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் ,தமிழ் சினிமா கண்டெடுத்த நகைச்சுவை  நடிகர்களில் சூரியும் ஒருவர் .தனக்கு எது வழங்கப்பட்டிருக்குதோ அதற்க்கு ஏற்றால் போல் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய திறமை இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. இதில் இவர் சிவா வுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் உண்மையிலேயே “செமயாயிருக்கு”. கோடி என்ற பாத்திரத்தில் கேடியாக நடிச்சிருக்காரு தம்பி. 


ஏய் !! சிவா , அந்தப் புள்ள பாவம் யா  “சிறி திவ்யா” . தமிழில் இதுதான் முதல் படம்  அதிலேயே சும்மா பிண்ணியிருக்கா ! Superb Acting என்று கூடச் சொல்லலாம் , சிவாவுக்கு ஈடு கொடுத்து அசத்தியதன் மூலம் பல இளைஞர்களின் மனதில் தனியிடம் இவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கசிகின்றன.


“வருத்தப்படாத வாலிபர் சங்கம்”  பாடல் மூலம் தனக்கு பாடவும் தெரியுமுடா !! என்று கூறுகின்றார்  நம்முட சிவாத் தம்பி . டி.இமான் கச்சிதமாக  காயை நகர்த்தியிருக்கிறார் என்று கூடச் சொல்லாம் . அனைத்துப் பாடல்களுமே கேட்கக் கூடியவாருதான்  இசை அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஊதாக்கலரு ரிப்பனு பாடல், #NICEsong தற்போது அனைவரிடத்திலும் முனு முனுக்கப் படக் கூடிதொன்றாகவே இருக்கின்றது. பல பேரின் ரிங்கிங் டோனாகவும் தான்.

போஸ் பாண்டி-சிவா , லதா பாண்டிக்கு- சிறி திவ்யா  விடம்  டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுக்கச் சொல்லும் காட்சி பிரமாதம் . என்னை வெகுவாக ஈர்த்த காட்சிகளில் அதுவும் ஒன்று.

கதை  வழமையான கதையாக இருந்தாலும்  அதனை  நகர்த்தியிருக்கு விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய  தொன்றாகும். அதிலும் இறுதிக் காட்சி சற்று வேறுபட்ட கோணத்தில் நகர்த்தப்பட்டு  திரைப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

ஆக மொத்தத்தில் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவ்வருட தமிழ் சினிவாவில் தனக்கென்றதொரு தனியிடத்தை பிடித்துக் கொள்ளக் கூடியதொரு திரைப்படமாகப் பதிவாகும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை !












No comments:

Post a Comment

Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...