Showing posts with label கிறுக்கல். Show all posts
Showing posts with label கிறுக்கல். Show all posts

இன்னும் படிச்சு முடியலயா ??? குட்டிக் கிறுக்கல்

என்னிடம் அதிகம் பேர் கேட்கும் கேள்வி
“தம்பி நீங்க இன்னும் படிச்சு முடியலயா ??? ”

// இன்னும் கொஞ்சம் இருக்கு // இதத்தான் நானும் அஞ்சு வருசமா சொல்லிக்கிட்டு வாறன்.

“படிச்சு முடியற” எண்டா என்ன ? என்கிறதுதான் என்னன்ட பெரிய டவுட்டு

இலங்கையின் கல்வி அமைப்பானது மிகவும் நேர்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் என்னிடத்திலில்லை.

ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி அதன் பின்னர் பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி அதன் பின்னராக இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டக் கற்கைகளுடன் இணைந்தவாறான தொழில்சார் கற்கைகள் என தொடர்ச்சியாக அதன் போக்கிலேயே அது பயணிக்கின்றது.

35% (சதவீத)மானவர்களின் மனநிலை என்னவென்றால் ''ஒன்று தொடக்கம் உயர்தரம்" வரையில்தான் படிப்பு என்றவாறு.

ஏஸ், ஏற்றுக்கொள்ளலாம் !!

மீதமுள்ள 65% (சதவீத)மானவர்களின் மனநிலை பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி வரையில் ஓரளவுக்கு விரிவுபடுத்தப்படுகின்றது.

ஆம், இதையும் ஏற்றுக்கொள்ளலாம் !!!

உண்மையில் ஏராளமானோருக்கு பல்கலைக்கழகத்தின் பின்னரான இரண்டாம், மூன்றாம் மற்றும் இன்னோரன்ன பட்டக்கற்கைகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை போலும்.

அல்லது ஏதாவது ஒரு கற்கையை தனியார் கல்லூரியில் மேற்கொண்டு துபாயோ, சவூதியோ, லண்டனோ சென்றால் அத்துடன் கதை ஓவர் என்றவாறுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்தோனுகின்றது.

//நான் சாகுற வரைக்கும்  படிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன்// என்னா கேக்குறவங்க நம்மல ஒருமாதிரியாத்தான் பாப்பாங்க.

 “என்ன இவனுக்கு தல கில சரியில்லயோ” !! என்றுமாக வதந்திகள் காட்டுத் தீ போல பரவிவிடும் .

அதுக்குத்தான் இன்னம் கொஞ்சம் இருக்கு,  கொஞ்சம் இருக்குன்னு கூறி தப்பித்துக் கொள்வது.

என்னைப் பொறுத்தமட்டில் கற்றல் என்பது மரணிக்கும் வரை  பயணிக்கக்கூடியது என்றே கூறுவேன்.

''Yes, its a life-long process''

அம்மா, அக்கா, அண்ணா, அப்பா, தம்பி ராசா மார்களே ! ஒண்ட மட்டும் தெளிவா புரிஞ்சுக்கொங்கோ, // படிப்புக்கு என்றய்க்குமோ முடிவில்ல // 
எங்கிற உண்மய.

----- தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக ----------































வேட் பிரஸ் மற்றும் புளக்கர்


பதிவுத் தளங்களாக தங்களை அடையாளப்படுத்திய இரண்டு வேறுபட்ட தளங்களாக வலம் வந்து கொண்டிருப்பவையென்றால் அவை புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகியவை என்றுதான் கூற வேண்டும்.உண்மையிலேயே இவை இரண்டுமே மிகவும் சிறந்த பதிவுத் தளங்களாக பதிவாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மையும் கூட.


மாறுபட்ட கருத்துக்கள் , சிந்தனைகள் , நிகழ்கால நிஜங்கள் மேலும் பல விடயங்களை தனிப்பட்ட ரீதியாக யாருடைய தலையீடுமன்றி பதிவேற்ற வசதியளிக்கப்பட்ட தனித்துவமான இடமாகத்தான் இவை திகழ்கின்றன என்பதுதான் இதன் விசேட அம்சமாகும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்க ளுக்குமிடமில்லை.


“யாரும் கிறுக்கலாம் , எதையும் கிறுக்கலாம்” என்ற சிறந்த கொள்கையை கடைப்பிடிக்கும் பதிவேற்றுத் தளங்கள் என்ற ரீதியில் இவை தங்களுக்கென்று தனியொரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றது என்பதையே வாசிப்போருக்கு கூறிக் கொள்ள வேண்டும்.

பத்திரிகையில் ஒரு கருத்தை அல்லது ஏதாவது ஒரு விடயத்தை பற்றி எழுதலாம் என்றால் அதற்கான் சந்தர்பங்கள் அனைவருக்குமே
வழங்கப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்ததொரு உண்மையாகும். இப் பாரிய குறையைப் போக்க  உருவாக்கப் பட்டவைதான் இவ்விரண்டு பதிவேற்று தளங்களுமே என்பதுதான் வெளிப்படையான உண்மையாகும்.



புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகிய இரண்டுமே  மிகவும் சிறந்த பதிவேற்று தளங்கள்தான்  எனினும் இவை இரண்டிலும் எது மிகவும் சிறந்தது என்ற கேள்வி பலரால் பல்வேறு விதமாக கேட்கப்படுகின்றன். மனிதர்கள் வேறுபட்டவர்கள்  மனிதர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை என்றதுக்கமைய புளக்கர் தான் சிறந்தததாக என் மனதுக்குப் படுகின்றது. உண்மையில் இதில் வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும் எழலாம் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.


கருத்துச் சுதந்திரம் மற்றும்எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்கு சந்தர்ப்பத் தை வழற்குவதே இவை  இரண்டினதும் பிரதான நோக்கங்களாக வெளிப்படுத்தப்படுதை  எவரொருவராலும்  இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமாக உள்ளது.


ஏராளமானோருக்கு புளக்கர் தான் மிகவும் பரிச்சயமானதாகும் வேட் பிரஸ் ஐ விட என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட. இதனை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் என்னிடத்திலே ஏற்படுகின்ற ஐயப் பாடென்றும் கூறலாம்.


ஏன் உனக்கு வேட் பிரஸ் பிடிக்காதா ??? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் நான் இங்கு எனக்கு வேட் பிரஸ் பிடிக்காது  புளக்கர் தான் பிடிக்கும் என்ற தொரு கருத்தை தெரிவிக்க வில்லை. என்னைப் பொறுத்த மட்டில் புளக்கர் ஆனது வேட் பிரஸ் ஐ விட ஏதோ சற்று சிறந்ததாக தோன்றகின்றது , அவ்வளவுதான்.


கருத்துக்களாகிய பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்க்கு இவை இரண்டுமே மிகவும் சிறந்த தளங்கள்தான் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களுமில்லை.

உண்மையில் எனக்கு மற்றவர்களைப் போல் பக்கம் பக்கமாக கிறுக்குவதற்கு விருப்பமில்லை ஏனெனில் அது உண்மையில் வாசிப்போருக்கு பொறுமையை இழக்கச் செய்யும் ஒரு செயலாக மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையிலேயே !


வித்தியாசமான மொழி நடையில் கிறுக்கும் போது உண்மையில் அது வாசிப்போருக்கு வேறுபட்ட அனுபவத்தை  வழங்கும் என்றதொரு கருத்து என் மனதில் பதிவிக்கப்பட்டுள்ளது , அதன் நிமித்தமே வேறுபட்ட கோணங்களில் என் பதிவுகளை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்  இது போலவும் !!!

-தொடர்ந்து கதைப்போம்-















டுவிட்டர் ( Twitter )

ஏதாவதைப் பற்றி எழுதலாம் எனும் போதுதான் இத்தலைப்பு மனதில் தோன்றியது.டுவிட்டர்” நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானதொன்றுதான் என்றால் அது பொய்யில்லை.உண்மையில் டுவிட்டரானது  வியாபார நோக்குடனேயே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் பெரும்பாலும் இது  கருத்துப் பறிமாற்றத்தினை இலகுவாக மேற்கொள்ளவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பேஸ்புக்கைப் போன்று டுவிட்டரும் ஒரு சமுக வலைத்தளம்தான் ஆனால் பேஸ்புக்கை விட சற்று மாறுபட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.உண்மையில் டுவிட்டரை  பயன்படுத்தவதற்கு  ஓரளவாவது மொழியறிவு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தரமான கருத்துக்கள் மற்றும் தகவல்கள்  சூடான , காரசாரமான விவாதங்கள் கடலை போடல் போன்ற பற்பல செயற்பாடுகள் இதன் மூலம் செவ்வென நிறைவேற்றப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.



டுவிட்டரைப்  பற்றி ஓர் அறிமுகம் தெரியாதவர்களுக்கு :

உண்மையில் இப்பதிவானது எவ்வாறு டுவிட்டரை முழுமையாக கையாள்வது தொடர்பான ஓர் அறிவை வழங்கும் என்று நம்புகிறேன்.

டுவிட்டர் கணக்கொன்றை உருவாக்கல் , அதாவது sign up செய்தல்.


பின்னர் நீங்கள் டுவிட்டர் தளத்திற்குள்  நுழையலாம். இதன் பின்னர் செய்ய வேண்டிய வேலைகள் பல.


Setting ஐ கிளிக் பன்னுங்க -



சரியான தகவல்களைக் கொடுத்து  Save changes  ஐ சொடுக்குங்கள். நீங்கள் விரும்பியவாரு User name ஐயும்  மாற்றலாம்.

பின்னர்  Profile  ஐ edit செய்யுங்கள்



மேலே காட்டியவாரு மேற்கொள்ளலாம். உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் அதையும் இதனுடன் இணைத்து உங்களது கீச்சுக்களை உங்களது பேஸ்புக் வோலில் பதிவேற்றறலாம்.

அடுத்தது டிசைன் பக்கம் போவோம்.



படத்திலே தெளிவான முறையில் காட்டப்பட்டுள்ளது. உங்களது பேக்றவுன்டை நீங்கள் விரும்பியவாரு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் உங்களது டுவிட்டர் கணக்குடன் பல Apps களையும்  இணைக்கலாம் 
.


மேலும் உங்களது டுவிட்டர் டைம்லைனை உங்களது  வலைத்தளத்தில் embed செய்து உங்களது வலைத்தளத்தின்  வருயைகாளர்களின் எண்ணிக்கையைக் 
கூட்டலாம். கீழே காட்டப்படுமாரு. 








மேலும் இங்கு காட்டப்படும் Code ஐ copy செய்து உங்களது Blog இன் HTML  பகுதியில் Paste செய்தால் போதும். 




இனி உங்களது விளையாட்டை  தாராளமாகத் தொடரலாம்.கீச்சத் தொடங்குங்கோ !!!!


டுவிட்ரில் பயன்படுத்தப்படும் சில Codes
# இதைப் பயன்படுத்தி உங்களது கருத்துக்களைப் பகிரலாம். உதாரணமாக
#help #sorry #HRM #Biology #manathilpaddathu .......etc

மேலும் @ தைப் பயன்படுத்தி உங்களது நண்பர்களை இணைக்கலாம்.
@manathilpaddath @black ......etc 



பலோவர்ஸ் மற்றும்  பலோவிங்.





மேலும் உங்களது Followers and Unfollowers போன்ற தகவல்களைப் பெற இதைப் பயன்படுத்துங்கள்


மேலுள்ள தகவல்கள் அனைத்தும்  டுவிட்டர் கணக்கொன்றை எவ்வாறு சரியான முறையில் உருவாக்குவது பற்றி தெளிவு படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

குறிப்பு - சந்தேகங்கள் இருந்தால் மனதில் பட்டது ” டுவிட்டரில் கேட்கலாம்.







Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...