Showing posts with label பரீட்சை. Show all posts
Showing posts with label பரீட்சை. Show all posts

நான் கணனி கற்ற கதை .......

இற்றைக்கு சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தான் என்னுடைய  கணனியுடனான பயணம் ஆரம்பமானது.அப்போது வயது 10.  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறைவு செய்த கையோடு எங்கள் ஊறில் உள்ள கணனி வகுப்புக்களை நடாத்துவதற்கென்று பிரபலமான கல்லூரியொன்றின் கணனிப் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுமாரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்பாவின் முயற்சியால்தான் ஒரு வருட இலவச கணனி வகுப்புக்கான பரீட்சையில்   தேறக்கூடியதொரு வாய்ப்பும் கிட்டியது. அங்குதான் என்னுடைய கணனிக்கல்விக்கான அடித்தளம்  இடப்பட்டதென்பதுதான் உண்மையும் கூட. 

அது நாள் வரைக்கும்  நான் கணனியை  எவ்விடத்திலும் ஆசைக்குக் கூட கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும். முதலாவது கணனி வகுப்பு , Introduction to Computer என்ற தோறனையில்தான்  ஆசிரியர் வந்து வகுப்பை நடத்தி விட்டு , நாளைக்கு Practical Class இல் பார்ப்போம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்  . எனக்கோ உள்ளுக்குள் பெரியதொரு குஷி , நாளைக்கு நாம எப்புடியாச்சும் computer ஐ தொட்டுப் பாத்திடலாம் என்ற நம்பிக்கைதான்  அந்த மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்திருக்குமென்று இப்போது நினைக்கத் தோனுகின்றது. 


முதன் முதலாக கணனியை நேரடியாகக் கண்ட சந்தர்ப்பம் , வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதொரு திருப்தியைத் தந்தது. வெள்ளைக் களரில் பெரிய TV ஒன்றும் , அதுக்குப் பக்கத்தில் பெரியதொரு பெட்டி வடிவிலான பொருள் ஒன்றும் மேசையில் ஏதோ கொஞ்சம் நீளமாக ABCD....... என்றவாறு ஆங்கில எழுத்துக்கள நிறைந்த பொருளொன்றும் , உருண்டையாக வயருடன் இணைக்கப்பட்ட பொருளொன்றுமாக , அங்கு வைக்கப்பட்டிருந்தன.இவற்றையெல்லாம் அதற்க்கு முன்னர் நான் எங்குமே கண்டது கிடையாது.

ஆசிரியர் “  Students இதுதான் கம்பியூட்டர்  !  இது மொனிட்டர் , இது CPU , இது கீ போட் , இது MOUSE என்றவாரு ஒவ்வொன்றாக விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார் , நானும் ஆசைக்கு ஒரு தரம் அவற்றையெல்லாம் தொட்டுப் பார்த்து விட்டிருந்தேன்.

மேலும் எவ்வாரு தட்டச்சு செய்வது என்றும் சொல்லிக் கொடுக்கப்பட்டது , கறுப்பான திரையில் வெள்ளைக்களரில் எழுத்துக்கள இருக்கும் அதைப் பார்த்து வேகமாக ரைப் செய்ய வேண்டும் என்றும் வேகமாகவும் பிழையின்றியும் அதை செய்யும் போது அதிக புள்ளிகள் வழுங்கப்படும் என்றுமாரு கூறி தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கணனிகள் வழங்கப்பட்டு ரைப் செய்யுமாரும் கூறப்பட்டது. எனக்கோ , அதுதான் முதல்முறை கணனியை தொட்டுப் பார்ப்பதும் என்பதால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு வழியாக பயத்துடன் ரைப் செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தாக தேடிக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது , அந்தக்கணத்தை ஒருபோதுமே மறக்க முடியாது.

இங்கு , எத்தனை பேருக்கு DAVE கேம் ஞாபகம் இருக்குமென்று எனக்குத் தெரிய வில்லை , ஆனால் நான் கணனியில் முதன் முதலில் விளையாடிய விளையாட்டென்றால் அது DAVE game தான். 

Introduction to Computer . MS-DOS . என்றவாருதான் எனது கணனிக்கற்றல் ஆரம்பமானது. அங்கு காணப்பட்ட பெருப்பாலான கணனிகளில் DOS இயங்கு தளமே நிறுவப்பப்பட்டிருந்தது. ஒரு சில கணனிகளில் வர்ணத்திரைகளாக (Colour SCREEN)  காணப்பட்டன , அதில் சிலர் ,  எங்களை விட மூத்த மாணவர்கள் எதையோ வரைந்து கொண்டும் நிறந்தீட்டிக் கொண்டுமாக சீரியசாக வேலைசெய்துகொண்டிருந்தனர். ( Drawing and Painting ). அதுதான்  Paint Programme என்றும் அதில் நீங்கள் விரும்பியவாரு படங்கள் வரைந்தும் நிறந்தீட்டியும்  விளையாடலாம் எனறவாரு எங்களது ஆசிரியர் அறிவுருத்தினார்.

இவ்வாறாகத்தான் எனது கணனிப் பயணம் ஆரம்பமானது.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-













பரீட்சையும் நானும்

ஏராளமான பரீட்சைகள் எழுதினாலும்  பரீட்சையென்றால்  அடி மனதில் ஏதோ பயம் தொற்றிக் கொள்கின்றது.என்னத்த தான் செய்ய நடப்பது நடக்கட்டும் என்று ஒருவாறு தேற்றிக்கொண்டு பரீட்சை மண்டபத்திற்குள் சென்றால் அங்கு மீண்டுமொரு அடிவயிற்றுக் கலக்கல்.சும்மா வடிவேல் ஸ்டைலில் சொன்னா  " நல்லாக் கௌப்பிறாங்கயா பீதிய" என்றவாறு.

 ஒரு மாதிரி அப்புடி இப்புடின்னு பரீட்சையை முடிச்சா  மீண்டுமொரு கலக்கம்.
கலக்கம் என்னவெண்டு உங்களுக்கு புரியுமென்டு நம்புறன். அதாங்கே ரிசல்ஸ்.டேய் தமிழே சொல்லுடா என்டு நீங்க சொல்றது  புரியுது. என்னத்தத்தான் செய்ய நமக்கு தமிழு கொஞ்கம் கஷ்டமுங்க. ஓகே ஓகே தமிழ சொல்றன். எக்சுவலீ ரிரிரி சசசச......ஓ ஐயம் சொரி. இன்னம் தமிழே வரலேயேயென்டு  நீங்க கடுப்பாவதும் புரியுதுங்க. என்னதான் செய்ய இந்தப்பாளாப் போன இங்கீலீஸ் கொஞ்சம் டிஸ்டோப் பன்னுதுங்க.

"பரீட்சைப் பெறுபேறு”  போதுமய்யா ?? ஆள விடுடா சாமி. சொல்ல வந்த விடயத்தையே மறந்து ஏதோ உளறனென்டு மட்டும் நெனக்காதிங்கப்பா. அப்புறம் நம்முட மூட் கொஞ்சம் அப்ஸட் ஆகிடும்.

எனக்கொரு சந்தேகம் எப்படி ஒரு மனிதனால் அவனது வாழ்நாளில்  இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க முடிகின்றது என்டு.நானும் பல இடங்களில் தேடிப் பாத்துட்டன் நோ ஆன்சர்.உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பன்ன ஏழுமா??  ரொம்ப கஸ்டமாயிருக்கிங்க.

பரீட்சைக்கு முகங்கொடுப்பது எப்படி???? என்ற புத்தகத்தை 100 தரம் வாசிச்சிட்டன் ஆனா  மண்டைக்கு ஒண்டுமே ஏரலப்பா. இன்னும் பீதி கூடிச்சே தவிர  கொறயல.அப்பதான் ஒன்டு புரிஞ்சிச்சு ! என்ன என்டு கெஸ் பன்ன ஏழுமா? டேய் மொக்கய  போடாம மேட்டருக்கு வாடா  என்டு நீங்க கடுப்பாவது  புரியுதுங்க. வைட் வைட்  ஐயம்  கமிங். என்னடா இவன்  அ  ஊ என்டா பட டயலக்கா  சொல்றானென்டு பாக்கயலா ! இதெல்லாம் எங்களுக்கு பழகிடுச்சிங்க. கூல் கூல் கூல். உங்களுக்கு செம காண்டாவுமன்டு எனக்கு புரியுதுங்க.

அப்புடி இப்புடின்னு ஒருவாறு பாஸ் பன்னினா  சொல்லவா வேணும். நம்மல புடிக்க நாலு பொலிஸ் நாய் வேனும். அந்த அளவுக்கு நாம  ஏதோ பெஸ்ட் ரேங் எடுத்த மாதிரி சும்மா பந்தாவா  சுத்தக்கொள்ள வாற கட்ஸ் சுப்பவாயிருக்கும்.
இவன் கொஞ்சம் ஓவராத்தான் பீட்டா் உர்றான் என்டு சொல்றது  ஐயாவுக்கு வௌங்குதில்ல ! ஐயா ஓல் ஏரியாவிலும் சும்மா கில்லியில்ல.

என்னடா இவன் விஜய் பைத்தியமா என்டு  யோசிக்கிரிங்கலா. சும்மா வெக்கப் படாம சொல்லுங்க பாஸ். நான் சொன்னது உண்மைதானே? ஏனன்னடா சேருக்கு கொஞ்சம் 'சைக்கோலொஜி" தெரியும்.பட் நமக்கு தலயத்தான் கொஞ்சம் புடிக்கும். ஏய் பொறு .........இப்ப சோ் என்டு சொன்னயே அது யார??????  என்டு கேக்ககத் தோனுதா???? இல்லயா???
அப்புடி கேட்டா  நான் அழுதிடுவன்...........ம்ம்ம்ம்  ரியலி யா.

ஏதோ ஒரு வழியா தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம என்னென்னமோ சொல்லிட்டு முடிச்சிட்டான்  என்டு ஆதங்கப்படுவதும் தாங்களுக்கு புரிகின்றது. டேய் டேய் நீ இப்ப நீ அடிட வாங்கப் போற. என்டு சொல்ல வாறதும் தங்களுக்கு பு.........................................

குறிப்பு- தயவு செய்து பதிவுகளை யாரும் சுட வேண்டாம்.





















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...