விஸ்வரூபம்

 photo bb_zps65c861bf.gif
மனதில் பட்டது
நீயுமா ??? என்று  நீங்கள் கேட்பது புரிகின்றது. காலத்தின் தேவைக்கேற்ப சில சில செயற்பாடுகளை மேற்கொள்வதுதான் சிறந்ததாக என் மனதில் பட்டது அதன் விளைவுதான் இப்பதிவு.


அப்படி என்னதான் இருக்கின்றது என்றதொரு ஆவலில்தான் திரைப்படத்தைப் பார்த்தேன் (திருட்டு டி.வி.டி யில்).பெரிதாக என்னால் குறைகளை இனங்கான முடியவில்லை என்று கூடச் சொல்லலாம்.

உண்மையில் கமலின் கடின உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் திரைப்படத்தை மிகவும் துல்லியமாக செதுக்கியிருக்கிறார் என்பதை திரைப்படத்தைப் பார்க்கும் எவரொருவராலும் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமென்பதுதான் தெளிவான உண்மையாகும்.


                                                                                                     

திரைப்படத்தைப் பற்றி ஏராளமானவர்கள் ஏராளமான விமர்சனங்களை எழுதிவிட்டனர் ஆனால் என் பங்குக்கும் ஏதாவது கிறுக்கலாம் என்றடிப்படையில்தான் இதைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையும் கூட.
                                                                 

படத்தின் தலைப்புக்கு ஏற்றால் போல் திரைக்கதையும் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றது  என்பதுதான் மிகவும் முக்கியமானதொரு விடயமாக என்னால் உணரப்பட்டது.படத்தின் காட்சியமைப்புக்கள் பிரமாண்டமாக அசத்தப்பட்டிருக்கின்றன மேலும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றார்கள் என்றால் அதில் எந்தவொரு பொய்யோ , அலட்டலோ இல்லையென்று கூடச்  சொல்லலாம்.

                                                                       
நான்  உண்மையில் இங்கு திரை விமர்சனத்தை எழுத முற்படவில்லை ஆனால் என் மனதில் தோன்றிய சில நிஜங்களைத்தான் கிறுக்க முற்பட்டேன் என்பதை வாசிப்போருக்கு  கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

திரைக்கதைக்கு ஏற்றால் போல் கதாப்பாத்திரங்களையும் மிகவும் அருமையாக அமைத்திருக்கிறார் என்றால் கூட அதில் எந்தவொரு மிகைப்படுத்தப்பட்ட  கருத்துமில்லை.

                                                                             

படம் ஆரம்பிக்கும் போது பறக்கும் புறாக்களில்தான்  கிளைமாக்சையும் புகுத்தியிருப்பது உண்மையில் பாராட்டப் பட வேண்டியதொரு யுக்தியாகத்தான் என் மனதில் தோன்றியது.உண்மையில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களிலும் தனித்தன்மையான வேறுபாடுகள் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.

                                                                             
பூஜாக்குமார் மற்றும் ஆன்றியா ஆகியோர் கதைக்கு ஏற்றாப் போல் தாங்களை  சரியான முறையில் தயார் படுத்தி நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகத்தான் தோன்றுகின்றது். பூஜாக்குமார்  டொக்டருடன் பேசும் விதம் உண்மையிலே அருமையாகயிருந்தது.

                                                                                             
ஏன் பூஜாக்குமார் ?? என்ற கேள்விக்கான விடையை  திரைப்படத்தின்  இறுதியிலேயே போட்டு உடைத்திருக்கிறார் கமல்ஜி. இது எத்தனை பேருக்கு புரிந்தது என்பதில்தான் எனக்குக்  கொஞ்சம்  ஐயமிருந்தது.



தொழில்நுட்பத்தை எவ்வளவுக்கு புகுத்த முடியுமோ அவ்வளவுக்குப் புகுத்தி  ஹொலிவுட்டுக்கு நிகரானதொரு தமிழ்த் திரைப்படத்தைப் படைத்திருப்பது தமிழ் சினிமாவின் சாதனையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.சாதனைகளுக்கு சோதனை  வரும் என்பதை சரியாக உணர்ந்து கொண்ட சந்தா்ப்பமாக இதைக் குறிப்பிடலாம் என்றால் அதில் எவ்விதத்  தவருமில்லை.
                                                                                           

ஆப்கானிஸ்தான் காட்சிகளில் பிண்ணிருக்கிறார்கள் மேலும் நுணுக்கமான ஒளிப்பதிவு அதை சர்வதேச அளவுக்கு நகர்த்தியிருக்கின்றது என்பதுதான் நிஜமும் கூட. ஆப்கானிஸ்தான் மக்களின்  வாழ்க்கையை இதன் ஊடாக ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளவும் விஸ்வரூபம் உதவியிருக்கின்றது.


முஸ்லிம் மக்களுக்கு எந்த ரீதியில் திரைப்படம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது இன்று வரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது.சில அற்ப அரசியல் நோக்கங்களுக்காக  மதங்களைப்  பகடைக் காயாகப் பயன்படுத்துவதையே நம்மவர்கள் வழக்கமாக்கிவிட்டனர் என்பதுதான் மறுக்கவோ , மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

உண்மையில் பதிவுகள் நீளமாக  இருந்தால் வாசிப்போரின் மனோநிலை சற்று வேறுபட்டதாகவே  இருக்கும் என்ற  காரணத்தினால்தான் என்னுடைய பதிவை  ஓரளவுக்கு கட்டுப்பாடாக கிறுக்கியிருக்கிறேன் என்பதை கூறிக் கொள்கிறேன்.
                                                                                               

விஸ்வரூபம் பற்றி பக்கம் பக்கமாக கிறுக்கலாம் ஆனால் அதை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்பதில்தான் மிகப்பெரிய ஐயப்பாடு என்மத்தியில் நிலவியிருந்ததன் பொருட்டே என்னுடைய பதிவை சற்று வேறுபட்ட கோணத்தில் சில சில முக்கியமான கருத்துக்களுடன்  தெரிவித்திருந்தேன் என்பதுதான் உண்மையாகும்.

தொடர்ந்து எழுதுவதற்கு நான் தயார் “விஸ்வரூபம்II ” ஐப் பற்றி ..................
(I am waiting.................)

தொடர்ந்து கதைப்போம்-










Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...