பதிவுத் தளங்களாக தங்களை அடையாளப்படுத்திய இரண்டு வேறுபட்ட தளங்களாக வலம் வந்து கொண்டிருப்பவையென்றால் அவை புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகியவை என்றுதான் கூற வேண்டும்.உண்மையிலேயே இவை இரண்டுமே மிகவும் சிறந்த பதிவுத் தளங்களாக பதிவாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மையும் கூட.
மாறுபட்ட கருத்துக்கள் , சிந்தனைகள் , நிகழ்கால நிஜங்கள் மேலும் பல விடயங்களை தனிப்பட்ட ரீதியாக யாருடைய தலையீடுமன்றி பதிவேற்ற வசதியளிக்கப்பட்ட தனித்துவமான இடமாகத்தான் இவை திகழ்கின்றன என்பதுதான் இதன் விசேட அம்சமாகும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்க ளுக்குமிடமில்லை.
“யாரும் கிறுக்கலாம் , எதையும் கிறுக்கலாம்” என்ற சிறந்த கொள்கையை கடைப்பிடிக்கும் பதிவேற்றுத் தளங்கள் என்ற ரீதியில் இவை தங்களுக்கென்று தனியொரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றது என்பதையே வாசிப்போருக்கு கூறிக் கொள்ள வேண்டும்.
பத்திரிகையில் ஒரு கருத்தை அல்லது ஏதாவது ஒரு விடயத்தை பற்றி எழுதலாம் என்றால் அதற்கான் சந்தர்பங்கள் அனைவருக்குமே
வழங்கப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்ததொரு உண்மையாகும். இப் பாரிய குறையைப் போக்க உருவாக்கப் பட்டவைதான் இவ்விரண்டு பதிவேற்று தளங்களுமே என்பதுதான் வெளிப்படையான உண்மையாகும்.
புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகிய இரண்டுமே மிகவும் சிறந்த பதிவேற்று தளங்கள்தான் எனினும் இவை இரண்டிலும் எது மிகவும் சிறந்தது என்ற கேள்வி பலரால் பல்வேறு விதமாக கேட்கப்படுகின்றன். மனிதர்கள் வேறுபட்டவர்கள் மனிதர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை என்றதுக்கமைய புளக்கர் தான் சிறந்தததாக என் மனதுக்குப் படுகின்றது. உண்மையில் இதில் வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும் எழலாம் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கருத்துச் சுதந்திரம் மற்றும்எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்கு சந்தர்ப்பத் தை வழற்குவதே இவை இரண்டினதும் பிரதான நோக்கங்களாக வெளிப்படுத்தப்படுதை எவரொருவராலும் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமாக உள்ளது.
ஏராளமானோருக்கு புளக்கர் தான் மிகவும் பரிச்சயமானதாகும் வேட் பிரஸ் ஐ விட என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட. இதனை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் என்னிடத்திலே ஏற்படுகின்ற ஐயப் பாடென்றும் கூறலாம்.
ஏன் உனக்கு வேட் பிரஸ் பிடிக்காதா ??? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் நான் இங்கு எனக்கு வேட் பிரஸ் பிடிக்காது புளக்கர் தான் பிடிக்கும் என்ற தொரு கருத்தை தெரிவிக்க வில்லை. என்னைப் பொறுத்த மட்டில் புளக்கர் ஆனது வேட் பிரஸ் ஐ விட ஏதோ சற்று சிறந்ததாக தோன்றகின்றது , அவ்வளவுதான்.
கருத்துக்களாகிய பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்க்கு இவை இரண்டுமே மிகவும் சிறந்த தளங்கள்தான் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களுமில்லை.
உண்மையில் எனக்கு மற்றவர்களைப் போல் பக்கம் பக்கமாக கிறுக்குவதற்கு விருப்பமில்லை ஏனெனில் அது உண்மையில் வாசிப்போருக்கு பொறுமையை இழக்கச் செய்யும் ஒரு செயலாக மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையிலேயே !
வித்தியாசமான மொழி நடையில் கிறுக்கும் போது உண்மையில் அது வாசிப்போருக்கு வேறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்றதொரு கருத்து என் மனதில் பதிவிக்கப்பட்டுள்ளது , அதன் நிமித்தமே வேறுபட்ட கோணங்களில் என் பதிவுகளை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் இது போலவும் !!!
-தொடர்ந்து கதைப்போம்-