ஆடாம ஜெயிச்சோமடா

“எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
இவரும் ஒருவர்.

இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
 என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














இலங்கையிலுள்ள முற்கொடுப்பனவுத் தரவுத் திட்டங்கள் ஒரு ஒப்பீடு 2014

குறிப்பு : இப் பதிவானது இலங்கையிலுள்ள இணையப் பாவனையாளர்களுக்கு நிச்சயமாக உதவக் கூடியவாறானதொன்றாகவே அமையப்பெறும். மேலும் இதன் மூலம் வினைத்திறனான தரவுத் திட்டமொன்றை தெரிவு செய்யக்கூடிய தெளிவொன்றும் உருவாகும்.

சரி,

இனி பதிவிற்குள் நுழையலாம்.

இணையப்புரட்சி என்றதொரு யுகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதனது அத்தியவசியமான தேவைகளுக்குள் இணையமும் ஒன்றாகிவிட்டது. இணையம் இன்றி  வாழ்வதற்க்கு மனிதன் தயாரில்லை என்றதொரு நிலைக்கு மனிதனது தேவைகள் அனைத்தும் இணையத்திற்குள் முடக்கப்பட்டு விட்டன என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

இது ஒரு புறமிருக்க இணையக் கட்டணங்கள் என்றதொரு விடயமும் மனிதனது பிரதான செலவினங்களுக்குள் உள்ளடக்கலாகிவிட்டது. எது எவ்வாறாயினும் இதனைத் தவிர்த்துக் கொள்ளவதென்பது சற்றுக் கடினமானதொரு காரியம் ஆனாலும் ஒப்பீட்டளவில் இதனை இழிவாக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இலங்கையில் இணையப் பாவணையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான்  செல்வதாக அண்மைய ஆய்வறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது ஒரு விதத்தில் சாதகமானதாக உற்று நோக்கப்பட்டாலும் மற்றொரு விதத்தில் பாதகமானதொன்றாகவே அவதானிக்கப்படுகின்றது.

எடிசலாட்(Etisalat), டயலொக்(Dialog), மொபிடெல்(Mobitel), எயாடெல்(Airtel) மற்றும் ஹச்(Hutch) ஆகிய இவ் ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் இலங்கையில் பிரதான இணையப் பங்காளர்களாகவும் வழங்குனர்களாவும் செயற்பட்டு வருகின்றன.

ஒப்பீட்டளவில் வேறுபட்ட தரவுத் திட்டங்களை/பொதிகளை (Data Plans/Packages) வழங்குவதிலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தங்களோடு தக்க வைத்துக் கொள்வதிலும் இந் நிறுவனங்கள் மிகவும் கச்சிதமாக  தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சாதாரணமாகவே தரவுத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த இவ் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டிற்குள் சமூக வலைத்தளங்களுக்கென்றே தனிப்பட்ட தரவுத் திட்டங்களை வழங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு தினம் தினம் விசேட புதிய தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க,

என்னால் இங்கு ஒரு சிறிய முயற்சியாக இவ் ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்களை அதாவது முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்களை ஒப்பு நோக்கியவாறான ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட  தரவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது இதன் பிரதான நோக்கம் யாதெனில் எந்த நிறுவனம் மிகவும் வினைத்திறனான தரவுத் திட்டத்தை வழங்குகின்றது என்பதாகும்.

 இதன் மூலம் இணையச் செலவினங்களை ஓரளவுக்கு இழிவாக்கலாம் என்றதொரு அடிப்படையில்தான் என்னால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இவ் ஒப்பீட்டு அட்டவணையிலுள்ள தகவல்கள் அனைத்தும் நேரடியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை மேலும் இத் தகவல்கள்  அதாவது செப்ரம்பர் மாதம் 16 ம் திகதி 2014 ஆண்டுக்குரியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன (Updated Details).

ஒப்பீட்டு அட்டவணை  


தெளிவான அட்டவணைக்கு இதனை சொடுக்கவும்

இங்கு அட்டவணையில் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்கள் அதனது விலைகளுக்கேற்ப ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட விலை வீச்சுக்கேற்ப எவ்வாறான தரவுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்பதை மிகவும் இலகுவான முறையில் அவதானிக்கவும் முடியுமாகவுள்ளது.

உதவிக் குறிப்புகள் :
Prize range - விலை வீச்சு, அதாவது இங்கு மூன்று விலை வீச்சுக்குள் எல்லைப் படுத்தப்பட்ட தரவுப் பொதிகள்/திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

1. ரூபா 1- 99 வரையில்
2. ரூபா 100 - 299 வரையில்
3. ரூபா 300 - 1999 வரையில்

இலகுவாக ஒப்பீட்டை மேற்கொள்ளலாம்.

Prize - விலை, அதாவது குறிப்பிட்ட தரவுத் திட்டத்தின் விலை

Data - தரவுத் திட்டம் (MB) அலகில் தரப்பட்டுள்ளது மேலும் என்னால் சில இடங்களில் GB யிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக 110+50 எனில் 110MB ஆனது பகல் பொழுதிலும் 50MB என்பது இரவுப் பொழுதிலும் பாவிக்க கூடியவாறாக உள்ளது.

SMS/Call - இதன் போது வழங்கப்படுகின்ற குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளுர் அழைப்பு நிமிடம்.

உதாரணமாக 50/10 எனில், 50 குறுஞ்செய்திகள் மற்றும் 10 நிமிட அழைப்பு இலவசம் என்றவாறு அது  அமையப் பெறும்

Val (Validity) - செல்லுபடிக்காலம், அதாவது இத் தரவுத் திட்டமானது எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதாகும்.

உதாரணமாக : 7 என்றால் இத்தரவுத் திட்டமானது 7 நாட்களுக்குள் செல்லுபடியாகும் என்பதாகும் அதன் பிறகு அது தானாகவே காலாவதியாகிவிடும்.

TT - Talk Time - அழைப்பு நேரம்.

NIG - இரவு நேரத் திட்டம்

இங்கு இரவு நேரத்திட்டங்கள் பொதுவாக நள்ளிரவு 12 யிலிருந்தே ஆரம்பிக்கின்றன ஆனாலும் சில நிறுவனங்களின் திட்டங்கள் வேறுபட்ட நேரத்தில் ஆரம்பிக்கின்றன ( அதிகாலை 1 மற்றும் 2 மணியளவுகளில் ) தயவு செய்து இதனைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணையத் தளங்களுக்குள் பிரவேசியுங்கள்.

எடிசலாட் (Etisalat) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எடிசலாட் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்






டயலொக் (Dialog) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: டயலொக் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








எயாடெல் (Airtel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எயாடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








 மொபிடெல்(Mobitel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்







ஹச் (Hutch) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: ஹச் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்
















அஞ்சானுக்கு ஆப்பு ! சூர்யாக்கு சோப்பு !!




அட நீயுமாடா ராசா ??? 


ச்சே, சே அப்புடியெல்லாம் நீங்க நெனய்க்கிற மாதிரி ஒண்டுமில்ல, 

படத்தப்பற்றி மனசில பட்ட ஒண்டிரண்டு வார்த்தைகள்  கொஞ்சம் சூர்யாக்கு சாதகமாக

சூர்யான்ட மனச நோகடிக்காம அதாவது பாத்து சூதானமாத்தான் இந்தப் பதிவ போடப் போறன், 

ஓகே காய்ஸ் ஆ யு ரெடி????

திருப்பதி பிரதர்ஸ், யு-ரீ-வீ, லிங்குசாமி அப்புறமா நம்முட சூர்யாத் தம்பி ---

அம்புட்டு பேருக்கும் சேத்து  நம்முட பய புள்ளைகள் சும்மா தாக்கு தாக்ன்னு போட்டுத் தாக்குறானுகள். 

ஏன்டா இப்புடி ????? 

அப்புடி என்னதான்டா  இருக்கு அங்கே ??? 

என்ற பல கேள்விகளின் ஒட்டுமொத்த பதில் என்னன்னா ----

படத்த எடுக்கச் சொன்னா  அண்ணன் லிங்குசாமி  கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலம் இடைவிடாத சண்டக் காட்சிகள  சும்மா நச்சு நச்சுன்னு போட்டுத் தள்ளியிருக்காறாமில்ல,--------1

போட்டாலும் போட்ட அதுவென்ன  பஞ்சு ?????--------------2

 ---------- நல்ல வருது வாய்ல ----

அதெல்லாம் நம்முட சூர்யாத் தம்பிக்கு செட்டாவாது, இவரென்ன பெரிய பருப்பா ???? 

என்டெல்லாம், பேஸ்புக், டுவிட்டர், யு-டியுப் என்னு சும்மா  செமயா போட்டுத் தாக்குறானுகள். 

பாவன்டா சூர்யா, அழுது-கிழுதிடப் போறான்.

டேய், நீ இப்ப என்ன சொல்ல வாற? ன்னு தானே கேக்கப் போறீங்க , 

யேஸ், ஐ நோ............ கொஞ்சம் பொறுங்க, 

மம்மி கூப்புறா !!  யேஸ் மாம், வட் ???? 

---------------------------------------------------------------------------

ஐயம் சொரி,  மாம் கூப்பிட்டா அதான் போயிட்டேன், ஆ சொல்லுங்க  என்ன ???

என்னமோ கேட்டிங்களே ???? 

ஓ அதுவா !!! ???

அது வந்து , ஐ டோடலி சபோடிங் சூர்யா, 

பட், நியாயம், தர்மம் என்டெல்லாம் ஒண்டு இருக்காம, சொ அதயும் நாம பாக்கத்தானண்னே வேணும், 

அதான் கொஞ்சமாப்போல அன்சபோடிங் ஒன் அஞ்சான்.

---------------------------------------------------------------------------------------

நெறயப் பேர் சமந்தாட அதப் பாக்கத்தான்  போயிருக்கானுகள்

அதாங்க அது ????  

டாடாடாடான்ஸ். பட் அதுவும் ஊத்திக்சிச்சாமில்ல-------3

ப்ப்ப்பாபாபா, 

நான் அது ன்னதும்  நீங்க ஏன் சிறிச்சீங்க பாஸ் ???????  

சொல்லுங்க பாஸ், சொல்லுங்க. 

சரி அதவுடு, படத்தில் ஏதாச்சும் கதயிருக்கான்னு பாத்தா-------4

 பட் லிங்குவாமி அதிலயும் ஆப்பு வச்சுட்டாராம்  

பயபுள்ளய்கள்  பொலம்புறானுகள் ---- பொங்குறானுகள்

இப்புடி ஆப்பு மேல ஆப்பு வச்சா  எவன்தாங்க பொங்காம இருப்பான்??

அதனால  நம்முட சகோதர, சகோதரிகளின் 

பொங்கல், பொங்காமை  சரியா ?? தவறா ???? 

வாங்க கதைக்கலாம், அப்புடின்னு கோபிநாத்தா என்னால மாற முடியாது, பிகோஸ் 

ஸ்டில் ஐயம் சபோடிங்  சூர்யா, மதர் புரோமிஸ் யா !!! 

அடேய் !! நீ சபோட், சபோட் எங்குறாய் ஆனா, சபோட் பண்றமாதிரி இப்ப வரைக்கும் ஏதாச்சும் சொல்லியிருக்கயாடா ”  என்று சூர்யாவின் ரசிகக் கோடிகள் என்னப் பாத்து கேட்கக்கூடும்.

அதனால, இப்ப என்னன்னா கடசியா ஒரு பஞ்சு---------சூர்யாக்காக

அஞ்சானுக்கு ஆப்பு, சூர்யாக்கு சோப்பு------------------------------------------------??????

எப்புடிடிடிடி ?? நம்முட பஞ்சு , அதவுட்டுட்டு புறா, கழுகிண்டிட்டு 

போங்க  சூர்யா போங்க ------------------------------உருப்பர்ர வழியப் பாருங்க. 

(இத நான் சொல்லல, அவங்க அதாங்க அவங்க சொல்றாங்க )

ஏதோ நம்மலால முடிஞ்சது  இம்புட்டுத்தான். 

சோ, நவ் ஐயம் கொயிங், பட் கமிங் சூன் எகய்ன்.

டேக் கெயார். பாய். பாய்.


தொடர்ந்து  கதைப்போம்  இது  போலவும்































ஏதோ எழுதனும்னு தோனுது !

"அட இவனுக்கு வேற வேலயேயில்ல சும்மா எப்ப பாத்தாலும்  சம்பந்தமில்லாமலேயே எதையாச்சும் கதைக்கிறது" 

என ஆதங்கப்படும் உங்களின்ட மைன்ட் வொய்ஸ் எனக்கு கேக்குதுங்க. (பட்)

என்னதான் ஆனாலும் நீங்க வாசிச்சுத்தான் ஆகனும் ஏனன்டா இது என்னன்ட கட்டள.




 சும்மா நம்முட விஜயகாந்த் ஸ்டைல்ல ரை பண்ணிப் பாத்தனுங்கோ !!!!!

வ்வ்வ்வ்வ் . பிலீஸ் சிறிக்காம வாசிங்கோய். 

அது என்னன்னா, கொஞ்சக் காலத்துக்கு முன்னால வை-பை யை ஹெக் பண்றது எப்புடின்னு ஒரு பதிவப் போட்டனுங்க,


 சரி போட்டாய் அதுக்கு இப்ப என்னங்ற??? ன்னுதானே கேக்க வாறிங்க,

 என்ன எம் ஐ ரைட் ???

சரி சரி, கொஞ்சம் பொறுங்க மேட்டருக்கு வாறன்,

 அதுவென்னன்னாங்க!!

அந்தப் பதிவிருக்கே அது நம்முட போய்ஸ், கேல்ஸ் மற்றும் மகத்தான நல்லுள்ளம் படைத்த எம் மக்களின்ட மத்தியில சும்மா அப்புடி ரீச்சாகியிருக்குன்னு எனக்கு இன்னய்க்குத்தான் தெரிய வந்திச்சு !

அதனால  யு நோ , நான் உடனே குசியாவி,  அதே மாதிரி இன்னொரு பதிவப் போடலாம்னு பாத்துத்தான் இங்க வந்தனுங்கோய்,

ஆனா, 

என்னடா ஆனா, ஆவனா என்டுட்டு” இவர் ஒரு ஆளு, இவருக்கொரு புலக்கு, அதில நாம வேறன்னு கடுப்பின்  உச்சிக்கே போகும் சகோதர, சகோதரிகளின் உணர்ச்சியை என்னால புரிய முடியாமில்ல.



காய்ஸ்,ஏஸ், ஐ கேன் அன்டஸ்டேன் யுவர் பீலிங்ஸ்.

அட மொக்க, இதான் மேட்டரா??? 

இதுக்கத்தானா இம்பட்டு பில்டப்பான்னு,  நீங்க கேக்கிறதும் புரியுதுங்கோ !!

பாருங்க நான் இப்ப உண்மயச் சொன்னா,  நீங்க சத்தியமா என்னத் தேடி வந்து அடிப்பீங்க, அது மட்டும் உறுதியாத் தெரியும்.

சரி பரவால சொல்றன் அது வந்து,

உண்மையாவே எனக்கிட்ட இங்க எழுதுறத்துக்கு எந்தவொரு ஐடியாவுமே இருக்கல்ல,

பட் கொஞ்சம் எழுதுற மூட் இருந்திச்சு அதான் சும்மா எதயாச்சும் கிறுக்குலாமேய்ன்னு ஸ்டாட் பண்ணினேன் எடயில ஒரு பக்கி வந்து மூட ஸ்பொயில் பண்ணிட்டு.

சோ, நான் இப்ப என்ன சொல்ல வாறன்னா !!!! 

நீ ஒரு மண்ணும் சொல்ல வேணாம், என்ன------- க்கடா !!!!!!

 என நீங்க கோபத்தின் உச்சிக்கே போவீங்கன்னும் தெரியும்.

 ஆனா ஒண்டு மட்டும் சொல்றன் கேட்டுக்கொங்க, அது என்னன்னா ???

நான் எழுதத்தான் வந்தேன், ஆனா  எடயில  வந்து என்னன்ட மூட ஸ்பொயில்  பண்ணின அந்தப் பக்கிக்குத்தான்  இந்த அப்புட்டு கெட்ட வார்த்தையும்  சமர்ப்பணம்.


 என்ன சரியா ???

இல்லாட்டியும், இவர் பெரிய எழுத்தாளர், கிளிச்சிடுவாறு என்னுதானே மைன்ட் வொய்ஸ் சொல்லுது. 

அட சும்மா பொய் சொல்லாம சொல்லுங்க !!

என்ன நான் சொன்னது சரிதானே ??



அப்பப்பா, டேய் நாங்க என்னதான்டா உனக்கு பாவம் செஞ்சோம், இப்படிப் போட்டு படுத்துறானேன்னு அந்த அக்கா நெனய்க்காவு.

ஓகேங்க,  ஐயம் எக்ஸ்-ரீம்லீ சொறீங்க, இனி நான் பேசல, போறன் பாய் !!!

ஆனா பொறகும் வருவேன்,  தயவு செஞ்சு அதுக்காக மனச தயார் படுத்திக்கொங்கோ !!!! 

போய்ட்டு வாறன்....................................

------அட லூசுப்பய-புல்லன்னா ஏசுறிங்க, பொறுங்க உங்கள வச்சுக்கிறன்-------

ஹேய் ஹேய் ஹேய், நான் ஒன்னும் அந்த அர்தத்தில சொல்லலிங்க, சும்மா ஒரு வ்லோல்ல சொல்லிப்புட்டன். 

சோ, டோன் மிஸ்டேக் மீ யா !!



பிகோஸ் ஐயம் பேசிக்களி குட் பெமிலி - காய்------ யு நோ !!!! 


நான் ஏதோ கிறுக்கிப்புட்டேன் என நெனக்கிறன் தொடர்ந்தும் கிறுக்குவோம் இது போலவும்
















முட்கள் நிறைந்த பாதை......

என்னதான்யா சொல்லப் போறான், என்ற ஆவலில் தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் இதனை சொடுக்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். இதுவொரு சிறுகதையாக இருக்குமோ என்றுகூட சிலர் நினைத்திருக்கக் கூடும், ஆனால் இது அவ்வாறனதொரு பதிவல்ல. தொடர்ந்து  வாசியுங்கள்  என்னுடைய கிறுக்குத்தனத்தை; 

மனிதனாகப் பிறந்து விட்டால் அவன் மீது ஏராளமான சுமைகள் ஏற்றப்படுவது இயல்பே, அதுதான் இயற்கையின் நியதியும் கூட என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். உண்மையில் அந்த சுமைகளைத் தாங்குவதற்கு மனிதனால் முடியுமா என்றதொரு வினாவும் எம் மத்தியில்
தோன்றாமலில்லை. எது எவ்வாறாயினும், மனிதனால் முடியாதது என்று எதையுமே இவ்வுலகில் இறைவன் படைக்கவில்லையென்பது தெளிவே. 


காலவோட்டத்திற்கேற்ப மனிதத் தேவைகளும் மற்றும் அவனது வேகமும் அபரிதமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நிச்சயமாக அவற்றை அடைவதற்கு மனிதன் பல்வேறு தடைகளையும் தகர்த்து முற்கள் நிறைந்த கரடு முரடான பாதைகளில் பயணித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க, எந்தன் காலம் வெல்லும் என்ற பின்பே வாங்கடா வாங்க” என்ற பாடல் வரிகள்தான் ஹாபகம் வருகின்றது  இதனைக் கிறுக்கும் போது. 


நிச்சயமான இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான அபரிதமான திறமையொன்று மறைந்திருக்கின்றது என்பது காலம் காலமாக விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மையாகவிருக்கின்றது. இது உண்மைதானா ?? எனக்குள்ளும் திறமையிருக்கிறதா??? என்னாலும் முடியுமா???? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இதன் விளைவாக கேட்கப்படுகின்றன, எம்மவர்களால்.

இவை அனைத்துக்குமான ஒரே பதில் ஆம் உன்னால் முடியும். என்றவாறுதான் அமையும். திறமையென்பது இறைவன் மனிதனுக்கு கொடுத்ததொரு வரம், அதை சரியாகப் பயன்படுத்துபவன் அவன் மீது ஏற்றப்பட்டுள்ள சுமைகளைத் தாண்டி முற்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் இலகுவாக பயணித்து சாதனையாளனாக இறுதியில் உருமாற்றம் பெறுகிறான். 

மனதில் ஆசையும் வெற்றிக்கான வெறியும் இருக்கிறவனை எந்தவொரு தடைகள் மூலமும் தடுத்த நிறுத்த முடியாது. அவனது இலக்கை நோக்கிய பணயம் எதுவென்று அவன் ஏற்கனவே தீர்மானித்திருப்பான் மேலும் அதன் வழியேதான் அவனது பயணமும் அமையப்பெறும். முட்ககைள தூரப் போட்டு முன்னேறுபவனும் அவனே. 



வெற்றியின் ருசி தெரிந்தவனுக்கு தோல்விகள் மற்றும் தடைகள் ஒரு பொருட்டல்ல. அவனுக்கு வேண்டியதெல்லாம் வெற்றி யென்ற மூன்றெழுத்து வார்த்தை. இலக்கைத் தீர்மானித்து திறமை மீது நம்பிக்கை வைத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனது வெற்றியாகவே அவனது ஆழ் மனதில் பதிவாகின்றது. அதுவேதான் இறுதியில் அவனை 
சாதனையாளனாகவும் மாற்றுகின்றது.

தொடர்ந்து  கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக.......








Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...