டுவிட்டர் ( Twitter )

ஏதாவதைப் பற்றி எழுதலாம் எனும் போதுதான் இத்தலைப்பு மனதில் தோன்றியது.டுவிட்டர்” நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானதொன்றுதான் என்றால் அது பொய்யில்லை.உண்மையில் டுவிட்டரானது  வியாபார நோக்குடனேயே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் பெரும்பாலும் இது  கருத்துப் பறிமாற்றத்தினை இலகுவாக மேற்கொள்ளவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பேஸ்புக்கைப் போன்று டுவிட்டரும் ஒரு சமுக வலைத்தளம்தான் ஆனால் பேஸ்புக்கை விட சற்று மாறுபட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.உண்மையில் டுவிட்டரை  பயன்படுத்தவதற்கு  ஓரளவாவது மொழியறிவு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தரமான கருத்துக்கள் மற்றும் தகவல்கள்  சூடான , காரசாரமான விவாதங்கள் கடலை போடல் போன்ற பற்பல செயற்பாடுகள் இதன் மூலம் செவ்வென நிறைவேற்றப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.



டுவிட்டரைப்  பற்றி ஓர் அறிமுகம் தெரியாதவர்களுக்கு :

உண்மையில் இப்பதிவானது எவ்வாறு டுவிட்டரை முழுமையாக கையாள்வது தொடர்பான ஓர் அறிவை வழங்கும் என்று நம்புகிறேன்.

டுவிட்டர் கணக்கொன்றை உருவாக்கல் , அதாவது sign up செய்தல்.


பின்னர் நீங்கள் டுவிட்டர் தளத்திற்குள்  நுழையலாம். இதன் பின்னர் செய்ய வேண்டிய வேலைகள் பல.


Setting ஐ கிளிக் பன்னுங்க -



சரியான தகவல்களைக் கொடுத்து  Save changes  ஐ சொடுக்குங்கள். நீங்கள் விரும்பியவாரு User name ஐயும்  மாற்றலாம்.

பின்னர்  Profile  ஐ edit செய்யுங்கள்



மேலே காட்டியவாரு மேற்கொள்ளலாம். உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் அதையும் இதனுடன் இணைத்து உங்களது கீச்சுக்களை உங்களது பேஸ்புக் வோலில் பதிவேற்றறலாம்.

அடுத்தது டிசைன் பக்கம் போவோம்.



படத்திலே தெளிவான முறையில் காட்டப்பட்டுள்ளது. உங்களது பேக்றவுன்டை நீங்கள் விரும்பியவாரு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் உங்களது டுவிட்டர் கணக்குடன் பல Apps களையும்  இணைக்கலாம் 
.


மேலும் உங்களது டுவிட்டர் டைம்லைனை உங்களது  வலைத்தளத்தில் embed செய்து உங்களது வலைத்தளத்தின்  வருயைகாளர்களின் எண்ணிக்கையைக் 
கூட்டலாம். கீழே காட்டப்படுமாரு. 








மேலும் இங்கு காட்டப்படும் Code ஐ copy செய்து உங்களது Blog இன் HTML  பகுதியில் Paste செய்தால் போதும். 




இனி உங்களது விளையாட்டை  தாராளமாகத் தொடரலாம்.கீச்சத் தொடங்குங்கோ !!!!


டுவிட்ரில் பயன்படுத்தப்படும் சில Codes
# இதைப் பயன்படுத்தி உங்களது கருத்துக்களைப் பகிரலாம். உதாரணமாக
#help #sorry #HRM #Biology #manathilpaddathu .......etc

மேலும் @ தைப் பயன்படுத்தி உங்களது நண்பர்களை இணைக்கலாம்.
@manathilpaddath @black ......etc 



பலோவர்ஸ் மற்றும்  பலோவிங்.





மேலும் உங்களது Followers and Unfollowers போன்ற தகவல்களைப் பெற இதைப் பயன்படுத்துங்கள்


மேலுள்ள தகவல்கள் அனைத்தும்  டுவிட்டர் கணக்கொன்றை எவ்வாறு சரியான முறையில் உருவாக்குவது பற்றி தெளிவு படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

குறிப்பு - சந்தேகங்கள் இருந்தால் மனதில் பட்டது ” டுவிட்டரில் கேட்கலாம்.







பரீட்சையும் நானும்

ஏராளமான பரீட்சைகள் எழுதினாலும்  பரீட்சையென்றால்  அடி மனதில் ஏதோ பயம் தொற்றிக் கொள்கின்றது.என்னத்த தான் செய்ய நடப்பது நடக்கட்டும் என்று ஒருவாறு தேற்றிக்கொண்டு பரீட்சை மண்டபத்திற்குள் சென்றால் அங்கு மீண்டுமொரு அடிவயிற்றுக் கலக்கல்.சும்மா வடிவேல் ஸ்டைலில் சொன்னா  " நல்லாக் கௌப்பிறாங்கயா பீதிய" என்றவாறு.

 ஒரு மாதிரி அப்புடி இப்புடின்னு பரீட்சையை முடிச்சா  மீண்டுமொரு கலக்கம்.
கலக்கம் என்னவெண்டு உங்களுக்கு புரியுமென்டு நம்புறன். அதாங்கே ரிசல்ஸ்.டேய் தமிழே சொல்லுடா என்டு நீங்க சொல்றது  புரியுது. என்னத்தத்தான் செய்ய நமக்கு தமிழு கொஞ்கம் கஷ்டமுங்க. ஓகே ஓகே தமிழ சொல்றன். எக்சுவலீ ரிரிரி சசசச......ஓ ஐயம் சொரி. இன்னம் தமிழே வரலேயேயென்டு  நீங்க கடுப்பாவதும் புரியுதுங்க. என்னதான் செய்ய இந்தப்பாளாப் போன இங்கீலீஸ் கொஞ்சம் டிஸ்டோப் பன்னுதுங்க.

"பரீட்சைப் பெறுபேறு”  போதுமய்யா ?? ஆள விடுடா சாமி. சொல்ல வந்த விடயத்தையே மறந்து ஏதோ உளறனென்டு மட்டும் நெனக்காதிங்கப்பா. அப்புறம் நம்முட மூட் கொஞ்சம் அப்ஸட் ஆகிடும்.

எனக்கொரு சந்தேகம் எப்படி ஒரு மனிதனால் அவனது வாழ்நாளில்  இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க முடிகின்றது என்டு.நானும் பல இடங்களில் தேடிப் பாத்துட்டன் நோ ஆன்சர்.உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பன்ன ஏழுமா??  ரொம்ப கஸ்டமாயிருக்கிங்க.

பரீட்சைக்கு முகங்கொடுப்பது எப்படி???? என்ற புத்தகத்தை 100 தரம் வாசிச்சிட்டன் ஆனா  மண்டைக்கு ஒண்டுமே ஏரலப்பா. இன்னும் பீதி கூடிச்சே தவிர  கொறயல.அப்பதான் ஒன்டு புரிஞ்சிச்சு ! என்ன என்டு கெஸ் பன்ன ஏழுமா? டேய் மொக்கய  போடாம மேட்டருக்கு வாடா  என்டு நீங்க கடுப்பாவது  புரியுதுங்க. வைட் வைட்  ஐயம்  கமிங். என்னடா இவன்  அ  ஊ என்டா பட டயலக்கா  சொல்றானென்டு பாக்கயலா ! இதெல்லாம் எங்களுக்கு பழகிடுச்சிங்க. கூல் கூல் கூல். உங்களுக்கு செம காண்டாவுமன்டு எனக்கு புரியுதுங்க.

அப்புடி இப்புடின்னு ஒருவாறு பாஸ் பன்னினா  சொல்லவா வேணும். நம்மல புடிக்க நாலு பொலிஸ் நாய் வேனும். அந்த அளவுக்கு நாம  ஏதோ பெஸ்ட் ரேங் எடுத்த மாதிரி சும்மா பந்தாவா  சுத்தக்கொள்ள வாற கட்ஸ் சுப்பவாயிருக்கும்.
இவன் கொஞ்சம் ஓவராத்தான் பீட்டா் உர்றான் என்டு சொல்றது  ஐயாவுக்கு வௌங்குதில்ல ! ஐயா ஓல் ஏரியாவிலும் சும்மா கில்லியில்ல.

என்னடா இவன் விஜய் பைத்தியமா என்டு  யோசிக்கிரிங்கலா. சும்மா வெக்கப் படாம சொல்லுங்க பாஸ். நான் சொன்னது உண்மைதானே? ஏனன்னடா சேருக்கு கொஞ்சம் 'சைக்கோலொஜி" தெரியும்.பட் நமக்கு தலயத்தான் கொஞ்சம் புடிக்கும். ஏய் பொறு .........இப்ப சோ் என்டு சொன்னயே அது யார??????  என்டு கேக்ககத் தோனுதா???? இல்லயா???
அப்புடி கேட்டா  நான் அழுதிடுவன்...........ம்ம்ம்ம்  ரியலி யா.

ஏதோ ஒரு வழியா தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம என்னென்னமோ சொல்லிட்டு முடிச்சிட்டான்  என்டு ஆதங்கப்படுவதும் தாங்களுக்கு புரிகின்றது. டேய் டேய் நீ இப்ப நீ அடிட வாங்கப் போற. என்டு சொல்ல வாறதும் தங்களுக்கு பு.........................................

குறிப்பு- தயவு செய்து பதிவுகளை யாரும் சுட வேண்டாம்.





















பேஸ்புக்கும் பேயாட்டமும் !

கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் இப்பதிவை எழுதுவதற்கு  ஏராளமான காரணங்கள்  எனினும் அவற்றை  இங்கே குறிப்பிட  முடியாத  நிலையில் நான்....................???????

இன்று முதலாம் வகுப்பு படிக்கும் பிள்ளையும்  பேஸ்புக்கென்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் நிலை. அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் தலை விரித்தாடுகின்றதென்றால் தவறில்லை.

தொலைத்தொடர்பு  நோக்கத்தினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதுதான்  பேஸ்புக்கெனும் சமூக வலைத்தளம், ஆனால் இன்று  இது முற்றிலும் மாறுபட்ட  தேவைகளுக்காக  பயன்படுத்தப்படுவது  கொஞ்சம் கவலை  அளித்தாலும்  இதன் வளா்ச்சியைக்கண்டு  வியந்து  பாராட்டமல்  இருக்க முடியாது. கடின உழைப்பின்  பிரதிபளிப்பாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இன்று பேஸ்புக் கணக்கு இல்லாத ஒருவனை ஏதோ  கொலைகாரனைப் பார்ப்பது போல் இச்சமூகத்தின் பார்வை அமைகின்றது. இது தவறா ? சரியா ? என்ற விவாதம் ஒருபுறமிருக்க  பேஸ்புக்கின் மீதான மோகமும்  குறைந்த பாடில்லை.

மாணவர்களின் எதிர்காலத்தை  கேள்விக் குறியோடு  நகர்த்துவதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான்  என்றால் இதற்கான மாற்றுக் கருத்துக்களும்  குறைவாகத்தான் இருக்குமென்பதில் எனக்கு  துளியும் ஐயமில்லை.

தொழிநுட்பத்தின்  அசுர வளா்ச்சியின்  தாக்கம்  பேஸ்புக்கின் விரிவுபடுத்தலை தூண்டுகின்றதென்பதுதான்  உண்மை.மடிக்கணிணி(Laptop), ஐபேட், ஐபோன், டெப்லட் பீசி  போன்றவற்றின் பாவனை இதற்கு ஊக்கியாக  அமைந்து விடுகின்றன என்பதுதான் திண்ணம்.

பேஸ்புக் பேயாட்டத்தின் பாதகமான விளைவுகள் ஏராளம் அவற்றுள் சில
*மந்தமான பரீட்சைப் பெறுபேறுகள்
*பாலியல் துஸ்பிரயோகங்கள்
*பண மோசடி
*இணையத்தள மோசடிகள் (cyber crime) என்றவறு பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்லும்.

நேர விரயம்  என்ற அடிப்படையில் பார்த்தால் பேஸ்புக்கின் பங்கு பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதை  இலகுவாக அவதானித்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தத்தான் வேண்டும் , அளவோடு பயன்படுத்தும் போது  அதன் பயன்பாடுகளை பாதகமற்ற முறையில்  அனுபவிக்கலாம்  ஆனால் அளவு மீறும் போதுதான் பாரியளவிலான பாதிப்புக்களுக்கு முகங்ககொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவோம்  என்பது  யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

ஆங்கிலத்தில் இதை இவ்வாறுதான் குறிப்பிடுவார்களாம் !
Too much of  anything is good for nothing !






















டில்லி மருத்துவக்கல்லூரி மாணவி

இவ்வுலகிலுல்ல அனைவருக்கும் அவரவா் கருத்துக்களை முன்வைப்பதற்கு தாராளமான உரிமையிருக்கின்றது. எவ்வாறாயினும்  கருத்துக்களை முன்வைக்கும் விதத்தின் மூலம்தான் கருத்துக்களின் உண்மைத்தன்மை மற்றும் அதன் ஆழம் வெளிப்படுத்தப்படுகின்றது.வலைப்பதிவுகள் மூலம் ஏராளமான விடயங்கள் அலசப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே , ஆனால் எந்த அளவுக்கு  உண்மையான விடயங்கள் அலசப்படுகின்றன என்பதுதான் முக்கியமானதாகும்.

டில்லியில் நடந்ந  கொடூரம் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை ஏனெனில் அதைத்தான் தலைப்பு செய்தியாக அனேக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி  ஊடகங்கள் அலசியிருந்தன.

இங்கு நான் அந்த மாணவிக்கு  என்ன நடந்தது என்ற பிசைந்த சோற்றை பிசைய விரும்பவில்லை. சற்று  வேறுபட்ட கோணத்தில் இதை அணுகலாம் என்ற என்னத்தில்தான்  இதை பதிவேற்றியிருக்கிறேன்.

குற்றம் நடந்தது என்ன? என்பதை ஏராளமான ஊடகங்கள் ஏராளமான கருத்துக்களை முன்வைத்த  வண்ணமேயிருக்கிறார்கள். காரணம் என்னவென்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

பாலியல் ரீதியில் தினந்தோரும்  ஏராளமான துஸ்பிரயோயங்கள்  நடந்த வண்ணமேதான்  இருக்கின்றன. இதற்கு யார் காரணம்? என்று பார்த்தால் பெண்கள்தான் என்றும்  பெண்கள் மீதுமே பெருமளவு குற்றமும் சாட்டப்படுகின்றது.எது எவ்வாறாயினும் இதை மறுக்கவும் முடியாது.


நவநாகரீக ஆடையென்ற போக்கில் அறை குறையான ஆடைகளை  உடுத்துவதென்பது  மூலாதாரணமான காரணமாக அமையப்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது.பாலியல் ரீதியில் உணர்ச்சிகளை தூண்டும் விதமான ஆடைகளை உடுத்தும் போது. விளைவுகள் மோசமாகத்தான் அமையப்பெறுமென்பது  திண்ணம்.இது நியுட்டனின் மூன்றாம் விதிக்கமைய என்றால் தவறில்லை.
Every Action  has an equal and opposite Reaction

தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சியும்  இதன் மீது ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதென்பது  மறைக்க முடியாத உண்மையாக வெளிப்படுத்தப்படுகின்றது.ஆபாச இணையத்தளங்களின்  எண்ணிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களின் விரிவாக்கம் போன்றவறை  இவற்றுக்கு ஊக்கியாக அமைகின்றன.

 பாலியல் குற்றங்களை  தடுக்க முடியாது ஆனால் குறைக்கக்கூடிய  சூழ்நிலைகளை உருவாக்கிமிடத்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.
















நீதானே என் பொன் வசந்தம்

திரைப்படங்கள்  பார்ப்பது  ஓரளவு பிடித்த விடயம்  என்ற வகையில்  இந்த பதிவை எழுதுகிறேன். அண்மையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகவும் ஈா்த்த திரைப்படம்தான்   "நீதானே என் பொன் வசந்நம்".

கொஞ்சம் வித்தியாசமான  போக்கில் கதையை  நகா்த்தியிருக்கிறார்   "கௌதம் மேனன்". ஜீவா மற்றும் சமந்தாவின்  நடிப்புக்கள்  உண்மையிலேயே  பிரமாதம் என்றால் அது பொய்யில்லை. அதிலும் சமந்தாவின் நடிப்பு  மனதிலே நிலைத்து  நிற்கின்றது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான  போக்கினை  கடைப்பிடிப்பவா்களில் கௌதம் மேனனையும்  குறிப்பிடலாம்.அந்த வகையில்தான்  இந்ந திரைப்படமும்  அமையப்பெற்றுள்ளது.

ஈகோவையும் , காதலையும் மையப்படுத்தி  எந்தவொரு  சண்டைக்காட்சிகளும்  இன்றி  அருமையான  தமிழ் காதல் காவியம் ஒன்றை தத்ரூவமான முறையிலே  உருவாக்கியிருப்பது  உண்மையிலேயே  பாராட்டப்பட  வேண்டிய  விடயமாகத்தான்  காணப்படுகின்றது.

மூன்று  கட்டமாக  திரைப்படத்தை  நகர்த்தியிருக்கிறார்  கௌதம் மேனன்.
இங்கு சந்தானத்திற்கு  பெரிய அளவில் சந்நா்ப்பம் கொடுக்கப்படவில்லை  இருந்நாலும்  ஓரளவுக்கு  இவருயை  ஜோக்குகள்  சிரிக்க வைக்கின்றன.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே  இசைஞானியின்  தெவிட்டாத இசைதான் என்பதை எவறாலும் மறுக்க முடியாது. " வானம் மெல்ல கீழிறங்கி........"
 பாடல் superb. இசைக்கு நான் தான் ராஜா என்று மீண்டும் தன்னை  அடையாளப்படுத்தியிருக்கிறார் இசைஞானி.




Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...