வலைப்பூவில் நீங்களும் நாலு காசு பாக்கணுமா???

இந்த உலகத்தில எனக்குப் பிடிச்ச ரெண்டு விசயங்கள்:
1. பணம் அல்லது காசு
2. மணி அல்லது துட்டு




மத்தப்படி பெரிசா ஒண்டிலயும் அவ்வளவு இன்ரஸ்ட் இல்ல!! 

அதற்காக நான் காசிப் பைத்தியமெல்லாம் இல்லீங்க, பட் அதில கொஞ்சம் ஜாஸ்தி இன்ரஸ்ட் அவ்வளவுதான்.

தயவு செஞ்சு யாரும் இங்கே பாசத்துடன் காச ஒப்பிட்டு என்ன ஒரு மாதிரியாப் பாங்காதிங்க!

யேஸ், ஐயம் ஓல்வேய்ஸ் லவ் பியுபில், லவ் ஹியுமன் (B)யிங் என்ட் எட்சட்ரா..... 

நான் சொல்ல வந்த விசயமே வேற, தட்ஸ் நொட் திஸ்! 
யேஸ், அது வேற ஒரு மேட்டர்:

இன்று தமிழில் வலைப்பூவிடும் அதாவது ப்லோக்கிங் செய்யும் ஏராளமானவர்களின் பெரிய குறையொன்றுதான் கூகிள் எட்-சென்ஸ்.




இந்த கூகிள் எட்-சென்ஸ் ஆனது ப்லோக்கரில் பதிவிடும் வலைப்பதிவர்களுக்கு மாத்திரமே இலகுவாகப் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டு செயற்பாட்டிலிருக்கின்றது. 

வேட்பிரஸ் போன்ற ஏனைய ப்லோக்கிங் தளங்களில் பதிவிடுபவர்களுக்கு இதனை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கு பிற வழி முறைகளை கையாள்வதன் மூலமாக இயலுமாக்கலாம். 

இது ஒருபுறமிருக்க,


இவ்வாறு கூகிள் எட்-சென்ஸில் தமிழைப் புறக்கணிப்பது தமிழ் வலைப்பதிவர்களுக்கு கூகிள் செய்யும் மகா துரோகம் என்றுதான் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

தற்போது உலகத்திலுள்ள மொழிகளில் மிகவும் சிறப்புமிக்க மற்றும் தொண்மையான மொழியொன்றாகிய தமிழுக்கு ஏன் இங்கு அங்கீகாரம் வழங்கப்படாமல் போனது போன்ற விடயங்கள் பற்றியெல்லாம் பல விவாதங்கள் காலம் காலமாக விவாதிக்கப்படுகின்றன நம்மவர்களால் கூகிளுடன்.

அதற்கு கூகிளும் பல நொண்டிக் காரணங்களை முன்வைத்த வண்ணமே இருக்கின்றது.

எது எவ்வாறாகினும் இவையெல்லாம் நம்மவர்களுக்கு புளிச்சுப் போன சமாச்சாரங்கள் என்பதுதான் உண்மையும் கூட. 

ஆனால் “ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கப்படும்” என்பது போல இதற்கு மாற்றீடாக பல வழிகளை நம்மவர்கள் கையாள்வதை பெரும்பாலானவர்கள் அவதானித்திருப்பீர்கள், அல்லது அதைப் பார்த்து பொறாமையாவது பட்டிருப்பீர்கள்.

ஓல்ரைட்!! 

எப்புடி பாஸ் நானும் இதில நாலு காசு சம்பாதிக்கிறது எண்டு நீங்க கேக்குறது எனக்குப் புரியுது. 

இதில பெரிசா எந்தவொரு மாயாஜாலமோ அல்லது 
கண்கட்டி வித்தையோ என ஒரு மண்ணும் இல்ல!!!

தல சொல்றது போல, மேக் இட் சிம்பிள்!! அவ்வளவுதான். 

எவ்வாறு அல்லது ஹவ்??? 
நீங்க நினைக்கலாம் அதென்ன இவன் ஒண்ட ரெண்டுவாட்டி சொல்றான்  என்றவாறு...

(அது ஒன்னுமில்ல சும்மா ஒரு ஆர்வக் கோளாறாதுதான்...)

1. நீங்க கொஞ்சமாப்போல காசி செலவழிக்கனும். அதாவது வெப்ஹோஸ்டிங் மற்றும் தனித்துவமான டொமைன் ஒன்றை பெறுவதன் மூலமாக இதனை சாத்தியமாக்கலாம்.

தற்போது பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவற்றை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

இதைப்பற்றி கூகிளில் சற்று தேடிப் பாருங்கள்.
உங்களுக்குப் பொறுத்தமான டொமைன் நேம் ஒன்றையும்  வெப்ஹோஸ்ட் பெகேச் ஒன்றையும் தெரிவு செய்யுங்கள். 

Bluehost தற்போது மாதத்திற்கு கிட்டத்தட்ட 2 டொலர் அடிப்படையில்  ஆரம்பத் திட்டம் ஒன்றை வழங்குகின்றது. 




உண்மையில் நீங்கள் வேட்பிரஸை பயன்படுத்துபவராயின் Bluehost  ஆனது உங்களுக்கு சிறப்பானதொன்றாகவும்  இலகுவானதொன்றாகவும் அமையும்.

காரணம் வேட்பிரஸை இதனுடன் -(Bluehost)  இலகுவான இணைத்துவிடலாம் என்பதனால்தான். 

இதன் மூலமாக இலகுவாக நீங்கள் எந்த மொழியில் பதிவிட்டாலும் கூகிளின் எட்சென்ஸின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் இதனால் இன்னும் பற் பல நன்மைகள்...

2. உங்களிண்ட பதிவுகளை நல்லதாப் போடனும் அதாவது என்ன மாதிரி மொக்கையாப் போடாம!!
 மத்தவங்க உங்குட பக்கத்திற்கு ஏதோ சும்மா ஒரு எட்டு வந்து போர மாதிரியாச்சும் உங்குட பொன்னான பதிவுகளை போடனும்.

அப்பதான்  நாலு பேர் உங்களப் பத்தி நாலு விதமா கதைப்பாங்க. இதனால உங்களின்ட் வலைப்பூ நெரிசலும்(Blog Traffic) அதிகமாகும். 

இந்த  வலைப்பூ நெரிசலைப் பயன்படுத்தி பல இணையத்தளங்களின் இணைப்பு சந்தைப்படுத்தல்களை(Affiliate marketing) உங்களின் வலைத்தளத்தின் ஊடாகவே மேற்கொள்ளலாம். இதன் மூலமும் நாலு காசப் பாக்கலாம்.  

மேலும் உங்களின் வலைப்பூ நெரிசலைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் பல நிறுவனங்களின் விளம்பரங்களை நீங்களாகவே உங்களின் தளத்தில் விளம்பரப்படுத்தலாம். அதாவது விளம்பர அளவைப் பொறுத்து அதற்கான கட்டணத்தை வசூலிப்பதன் மூலமாக. 

இவைகள்தான் சட்ட ரீதியாக எந்தவொரு பிரச்சினைகளும் இல்லாத தீர்வுகள்.

பட் இதில நீங்க கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும் என ஆசப்பட்டா இன்னும் பல குறுக்கு வழிகலெல்லாம் இருக்கு. 

அவைகள் உங்களுக்காக:

1. உங்களின்ட வலைப்பூவ அதாவது உங்களின்ட ப்லோக்கர ஆங்கில மொழியில் பதிவு செய்து கொஞ்சக் காலத்துக்கு ஆங்கிலத்திலயே பதிவுகளை இட்டு கூகிள் எட்சென்ஸின் அனுமதி கிடைத்த பின் தமிழில் பதிவிடலாம்.

அல்லது  அதனுடைய எட்சென்ஸ் கணக்கை உங்களின்ட தமிழ் ப்லோகிங் கணக்குடன் இணைத்து விடலாம். 

2. வேறு ஒரு எட்சென்ஸ் கணக்கொன்றை ஹெக் செய்யலாம். 
தயவு செய்து யாரும் இதனை முயற்சிக்க வேண்டாம். 

3. இன்னும் பல...

“இவைகள் ஏதேனும் கூகிளினால் கண்டுபிடிக்கப்பட்டால் உங்களின் கணக்கு நிரந்தரமாகவே முடக்கப்படும்”

இது கூகிளின் அறிவிப்பு.

ஏன் ராசா கனியிருக்க காய் கவருவான்!!!


இப்ப புரியுதா எப்புடி நாலு காச நாசூக்கா சம்பாதிக்கிறண்டு.


--பாஸ் ஆயு ரெடி--




அடுத்த பில்கேட்ஸ் நீங்களா???

உங்களிடம் நம்பிக்கை, விடாமுயற்சி,  கடின உழைப்பு மற்றும் புதிய சிந்தனைகள் போன்றவை காணப்படுமாயின் நீங்கள்தான் அடுத்த  பில்கேட்ஸ் என்று உங்களிடம் பொய் சொல்லி நான் உங்களை உசுப்பியெல்லாம் விட மாட்டேன்.


உலகிலுள்ள ஏராளமானவர்களிடத்தில் நான் மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன என்பதும் அதற்கான காரணமாகும். 

ஆம், தற்போது இவ்உலகில் உள்ள அனைவரும் கடினமாக உழைக்கத் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். அதேபோல் புதிய மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். 

ஆனால் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்தால்,

பெரும்பாலானவர்களிடத்தில் பெரிய கனவுகளோ, அதனை செயற்படுத்துவதற்குரிய போதுமான நீண்ட காலத் திட்டமிடல்களோ இல்லை என்பதுதான் விடயமாகும்.

குறுகிய கால சிறிய இலக்குகளை நோக்கி குறிவைத்திருக்கும் இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கிய கனவுகள் விடயத்தில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள் என்பதுதான் இவர்களின் பில்கேட்ஸ் கனவுகளுக்கு முதல் தடையாக அமைந்து விடுகின்றது.

கிழக்காசிய நாடுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து அதனுடன் தொடர்பானதொரு துறையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் இணைந்து கைநிறைய சம்பாதிப்பதனையே அவர்களது வாழ்நாள் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மையாகும். 

அதிலும் குறிப்பாக தொழிநுட்பத் துறையை தெரிவு செய்து ஏதோ ஒரு அளவுக்கு வருமானம் கிடைத்தவுடன் வீட்டில் பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து ஐயம் செட்டில்ட் டவுன் என்று கூறிக்கொண்டும் திறிகிறார்களாம்...

இதை தவரென்றோ அல்லது இவர்கள் இலட்சியமற்றவர்கள் என்றோ யாராலும் குறை கூற முடியாது.

ஆனால், இவர்கலெல்லாம் அடுத்த பில்கேட்ஸ் அளவுக்கு யோசிப்பார்களேயானால் அதுதான் அவர்களின் வாழ்நாள் முட்டாள் தனம் என்று என்னால் கூற முடியும்.

உங்களின் இலக்குகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க வில்லையெனின் உங்களது இலக்குகள் மிகவும் சிறியவை  -அசிம் பிரேம்ஜி

உங்களின் பெரிய கனவுகள் தான் உங்களின் நீண்ட கால வெற்றிக்கு ஒரு ஊன்றுகோலாகும். 

யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உங்களின் கனவுகளையும் இலக்குகளையும் தீர்மானியுங்கள். 

அதனை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துங்கள். உங்களுக்கென்றே ஒரு கற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீங்கள்தான் அந்த சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ்.

உங்களின் கனவுகளுக்கு சக்தி கொடுங்கள் அதனை எவ்வாறு அடையலாம் என்று திட்டமிடுங்கள். வியூகங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் உங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பீர்கள் என்று உங்களை நம்புங்கள். அதற்கான தயார் படுத்தல்களை ஆரம்பியுங்கள். 

இவை போதும் உங்களின் பெரிய கனவுகளை நிஜமாக்குவதற்கு. 

ஒருபோதும் ஒரே இரவில் வெற்றிவாகையெல்லாம் சூட முடியாது. அதாவது ஓவர் நைட் சக்ஸஸ் (Overnight Success) எல்லாம் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலேயே சாத்தியமாகும்.

மாறாக, முறையான நீண்டகாலத் திட்டமிடல்கள், நம்பிக்கையான உழைப்பு, அதன் மீது மட்டில்லா ஈர்ப்பு (அல்லது அதன் மீது ஒரு வெறி) போன்றவற்றை ஒருமைப்படுத்திய யாருடைய தலையீடுமற்ற செயற்பட்டாடுகள் அவசியம்.

இதற்கு நீங்கள் தயார் எனின்,

நிச்சயமாக அடுத்த பில்கேட்ஸ் நீங்கள்தான்.

ஒரு வேளை அது நானாகக் கூட இருக்கலாம்!!!!

--பாஸ் முதல்ல உங்கள நம்புங்க, அப்புறமா அடுத்தவன நம்பலாம்--






பாஸ்!!! உங்குட லேப்-டொப்பும் சூடாவுதா ????

இன்று அதிகமானவர்கள் முணுமுணுக்கும் ஒரு விடயம்தான் மடிக்கணினிகளின் மிதமிஞ்சிய வெப்ப வெளியீடு. இதற்காக பல ஆயிரம் ரூபாக்கள் லெப்-டொப் சேர்விஸ் சென்டர்களினால் பகல் கொள்ளையிடப்படுகின்றன என்பதுதான் உண்மையும் கூட.

தற்போது லேப்-டொப்களை பயன்படுத்துவது மிகவும் சர்வசாதரணமானதொரு விடயமாகிவிட்டது. உண்மையில் லேப்-டொப் பயன்படுத்தும் 60% ஆனவர்கள் தொழிநுட்பத் துறையில் இருந்து அப்பாற்பட்டவர்வர்கள் என்பதும் இதற்கான காரணமொன்றாகவும் இருக்கின்றது.

இதனால்  எவ்வாறு ஒரு கணனியை முறையாக பராமரிப்பது என்ற அடிப்படை அறிவு என்பது இவர்களுக்கு சற்றுக் குறைவாகத்தான் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஓகே, இனி மேட்டருக்கு வருவோம்!

லேப்-டொப் ஹீட் ஆவதற்கு இரண்டு காரணங்கள்:
1. லேப்-டொப் கூலிங் பேனின் வேகம் குறைதல் மற்றும் அதனுடன் தொடர்பான ஹாட்-வெயார் பிரச்சினைகள்.

** இதற்கு லேப்-டொப் சேர்விஸ் சென்டரின் உதவியை நாடுவது நல்லது.

2. இங்கு லேப்-டொப்பில் நிறுவியுள்ள மென்பொருட்கள், ரெம் வேகம் போன்ற மென்பொருள் சார் குளறுபடிகள். 
--------------------------------------------------------------------------------------------------------------------------

** இதனை நிச்சயமாக உங்களால் தீர்க்க முடியும், எவரொருவருக்கும் ஒரு ரூபா கூடக் கொடுக்காமல்!


1. முதலில் உங்களின் லேப்-டொப்பில் நிறுவியுள்ள தேவையற்ற மென்பொருட்களை நீக்கி விடுங்கள்(Uninstall  a program). மிகவும் நீண்ட காலமாக நீங்கள் பயன்படுத்தாமல் விட்டிருக்கும்  மென்பொருட்களும் உங்களுடைய லேப்-டொப்பின் ஹீட்டுக்கு ஒரு காரணம்.

*Control Panel
*Programs
*Programs and Features


2. உங்களின் சேர்ச் ஒப்சனை பயன்படுத்தி Process என்ற சொல்லை டைப் செய்யுங்கள்.


 அதன் பின்னர் இங்கு காட்டப்பட்டுள்ளது போல் தோன்றும் மெனுவில் உள்ள
 View running processes with Task Manager என்ற ஒப்சனை கிளிக்     செய்யுங்கள்.

இங்கு தேவையில்லாமல் சில மென்பொருட்கள் உங்களின் ரெம்மில் இயங்கிக் கொண்டிருக்கலாம், அவைதான் உங்களின் ரெம்மின் வேகத்தை குறைத்து உங்களின் லேப்-டொப்பை ஹீட்டாக்கலாம். சோ, இங்கு தேவையில்லாமல் ஏதாவது இயங்கினால் அதை கிளிக் செய்து 
End Process ஐ சொடுக்குவதன் மூலம் நிறுத்தலாம்.


3. அடுத்து உங்களின் ஸ்டாட் மெனுவில் RUN என்று டைப் செய்து அதில் 
msconfig என்றவாறு உள்ளிட்டு OK செய்யவும்


தேவையற்ற மென்பொருட்கள் உங்கள் லேப்-டொப்பை இயக்க ஆரம்பிக்கும் போது  தன்னியக்கமாக தோன்றாமல் இருக்க Startup இல் காணப்படும் மென்பொருட்களை  கிளிக்  செய்து Apply ஐயும் Ok ஐயும் சொடுக்குங்கள்.


பின்னர் Exit without restart   Button ஐ சொடுக்குங்கள்.



        4. அடுத்து RUN இல் %temp% என்றவாறு டைப் செய்து Ok                செய்யுங்கள்



இங்கு தற்காலிகமாகக் காணப்படும் கோப்புக்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள். Ctrl+A அதன்பின்னர் Delete


சில வேளை சில கோப்புகள் அழிபடாமல் இவ்வாறு காணப்படுமிடத்து அதனை அவ்வாறே விட்டு விடுங்கள், Skip செய்து.



5. மேலும் நீங்கள் Search மெனுவில் Disk என்று டைப் செய்து 
1. Disk Defragmenter  2. Disk Cleanup
போன்றவற்றையும் செய்யுங்கள்.












சரி மேட்டர் ஓவர்!! இதன் பின்னர் உங்களின்ட லேப்-டொப்ப ரீ-ஸ்டாட் செய்து

பாருங்க! பாரியதொரு மாற்றம் உங்களுக்காக .....................

--பாஸ் நாங்க இப்புடியும் கதப்போமில்ல--












போட்டோ சொப் முற்றிலும் இலவசம்! Photoshop CS2

போட்டோ சொப்பின் வரலாறு மிகவும் நீண்டது அதாவது 25 வருடங்கள் பழமையானது. உண்மையில் இது 1990 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக திருத்தப்பட்ட பதிப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. சுமார் 25 மொழிகளில் முற்றிலும் புதிய மேம்படுத்தலுடன்  இவை கிடைக்கப்பெறுகின்றன என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் இதைப் பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களுக்கு விக்கிபீடியா மற்றும் அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குள் நுழைவதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.


பல்வேறு துறைகளில் போட்டோ சொப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும், இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை. எது எவ்வாறாகினும் அடோப் நிறுவனமானது தனது மென் பொருட்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதில்லை என்ற உண்மையும் எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

உண்மையில் இதற்கான காரணம் அவை தொழிற் துறையில் மிகவும் இன்றியமையாத மற்றும் முன்னனியான மென் பொருள் உற்பத்திகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதே எனலாம்.

ஆனால் சில நேரங்களில் அதாவது மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய பதிப்புகளின் தாக்கத்தால் பழைய பதிப்புகளை இலவசமாக வழங்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன என்பது சற்று மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

மேலும் இவை நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தொடர் எண்களுடன் கிடைக்கப் பெறுவதே சிறப்பம்சமாகும்.

இங்கு நீங்கள் அடோப் நிறுவனத்தின் CS2 உற்பத்திகளை முற்றிலும் இலவசமாக சட்ட ரீதியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.



1. இவற்றை தரவிறக்கிக் கொள்ள உங்களது கணினி பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்யதல் வேண்டும்.



  • Mac OS X v.10.2.8–v.10.3.8, PowerPC® G4 or G5 processor
  • Microsoft® Windows® 2000/Windows XP, Intel® Pentium® III or 4 processor

  • 2. இரண்டாவதாக பின்வரும் இணைப்பை சொடுக்குவதன் மூலமாக தரவிறக்க வலைப் பக்கத்திற்குள் நுழையலாம். இணைப்பு 
                                                       
    3. மூன்றாவதாக Accept என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக:


    பின்வருமாறு அடோப் ஐடியினுள் உள்நுழையுமாறு வினவப்படுவீர்கள்


    அவ்வாறு உங்களுக்கு அடோப் ஐடி இருந்தால் உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் வழங்கி  உள்நுழையலாம்.

    அவ்வாறு உங்களுக்கு அடோப் ஐடி இல்லை எனின், 

    Get and Adope ID என்பதை சொடுக்குவதன் மூலமாக உருவாக்கி கொள்ளலாம்



    அவ்வாறு உருவாக்கி உள் நுழைந்ததன் பின்னராக
    பின்வரும் பக்கத்திற்கு திருப்பப்படுவீர்கள் அங்கு நீங்கள் மீண்டும்
    ஒரு முறை பின்வரும் ACCEPT பொத்தானை அழுத்தி 
    உங்களது தரவிறக்க பட்டியலை பார்வையிடலாம்.



    அதன் பின்னர் ஆங்கில மொழியை தெரிவு செய்து அங்கே போட்டோ சொப் CS2 என்பதை சொடுக்கி உங்களது தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.



    இங்கு இரண்டு விதமான இயங்கு தளங்களுக்கான தரவிறக்க தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன 

    1. மெக் - அதாவது நீங்கள் அப்பிள் இயங்குதளம் பயன்படுத்தினால்
    2. வின்டோஸ்- மைக்ரோ சொப்டின் வின்டோஸ் இயக்குதளம் பயன்படுத்தினால்

    அதன் அருகில் ஒவ்வொன்றுக்குமான சட்ட ரீதியான தொடர் எண்கள் தரப்பட்டுள்ளன அவற்றை இறுதியாக மென் பொருளை நிறுவும் போது
    உள்ளிட வேண்டும். 

    இதன் பின்னர் PHOTOSHOP CS2 உடன் உங்களது மாயாஜால வித்தைகள் மற்றும் இன்னோரன்ன பற்பல விடயங்களை மிகவும் இலகுவாகவும் துல்லியமாகவும் மேற் கொள்ளலாம் என்பது உறுதியே!

    குறிப்பு: இணைய சந்தைகளில் குவிந்து கிடக்கும் இரண்டாம் தர போலியான மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை விடுத்து அதை விட மேம்படுத்தலில் சற்றுத் தாழ்வான சட்ட ரீதியான முறைபடியாக வழங்கப்பட்ட தொடர் எண்களுடன் கூடிய இவ் மென் பொருட்கள் எவ்வளோ சிறந்தது. மேலும் அவ்வாறு கிடைக்கப் பெறும் சில மென் பொருட்கள் ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் தாமாகவே காலாவதியாகி விட்டு பணம் செலுத்துங்கள் என்று உங்களை அடிக்கடி தொல்லைப் படுத்தும் என்பது நிச்சயமே. 

    ---- தொடா்ந்தும் கதைப்போம்  தொழிநுட்பத்துடன்  இதுபோலவும்....







    எதையோ தேடி எனது பயணம்!

    இற்றைக்கு சுமார் இருபந்தைந்து வருடங்களுக்கு முன்னராக ஆரம்பிந்த எனது பயணம் - எதையோ தேடி என்றவாறு தொடர்கிறது.......

    வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள் பல, அவற்றுல் ஒரு சிலவையே பொக்கிஷங்களாகும் மற்றவை வடுக்கள் நிறைந்த அனுபவங்களாகவும், தோல்விச் சரித்திரங்களாகவுமே பதிவிக்கப்படுகின்றன.

     “பொக்கிஷங்கள்” இனிமையானவை, ஒவ்வொரு மனிதனினதும் வாழ்க்கையில் ஏதோ ஒரு மூலையில் பொக்கிஷங்களும் பொதிந்துதான் கிடக்கின்றன என்பதுதான் நிசப்தமாகிப் போன உண்மை.

    பொக்கிஷங்களுக்கான வடிவங்கள் பல, அவை நிச்சயமாக மனிதனுக்கு மனிதன் வேறுபாட்டையே காட்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட ரீதியிலானதொரு கருத்து.

    “அப்படியானால் உனது பயணம் பொக்கிஷங்களைத் தேடியவாறா???”
     என்று என்னிடம் கேட்கப்பட்டால், உண்மையில் அதற்கான பதில் என்னிடத்திலிருந்து “ஆம்” என்றவாறுதான் அமையும்.

    என்னைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடயம் ஒரு மனிதனது வாழ்க்கையில் அவனுக்கு மகிழ்ச்சியையும் பூரண  திருப்தியையும் கொடுக்குமோ, அதுவே அவனுடைய பொக்கிஷமாகும். 

    ஆகவே மனிதனது வாழ்வியல் போராட்டங்கள் மற்றும் பயணங்கள் அனைத்துமே “பொக்கிஷங்களைத்” தேடியும் நோக்கியுமாகவே அமைந்து விடுகின்றன என்பதுதான் சத்தியமான உண்மை.

    சோ பிரண்ட்ஸ், 

    பொக்கிஷத்தைத் தேடி நீங்களும் ஒரு பணயம் வைக்கலாமே???





















    இன்னும் படிச்சு முடியலயா ??? குட்டிக் கிறுக்கல்

    என்னிடம் அதிகம் பேர் கேட்கும் கேள்வி
    “தம்பி நீங்க இன்னும் படிச்சு முடியலயா ??? ”

    // இன்னும் கொஞ்சம் இருக்கு // இதத்தான் நானும் அஞ்சு வருசமா சொல்லிக்கிட்டு வாறன்.

    “படிச்சு முடியற” எண்டா என்ன ? என்கிறதுதான் என்னன்ட பெரிய டவுட்டு

    இலங்கையின் கல்வி அமைப்பானது மிகவும் நேர்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் என்னிடத்திலில்லை.

    ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி அதன் பின்னர் பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி அதன் பின்னராக இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டக் கற்கைகளுடன் இணைந்தவாறான தொழில்சார் கற்கைகள் என தொடர்ச்சியாக அதன் போக்கிலேயே அது பயணிக்கின்றது.

    35% (சதவீத)மானவர்களின் மனநிலை என்னவென்றால் ''ஒன்று தொடக்கம் உயர்தரம்" வரையில்தான் படிப்பு என்றவாறு.

    ஏஸ், ஏற்றுக்கொள்ளலாம் !!

    மீதமுள்ள 65% (சதவீத)மானவர்களின் மனநிலை பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி வரையில் ஓரளவுக்கு விரிவுபடுத்தப்படுகின்றது.

    ஆம், இதையும் ஏற்றுக்கொள்ளலாம் !!!

    உண்மையில் ஏராளமானோருக்கு பல்கலைக்கழகத்தின் பின்னரான இரண்டாம், மூன்றாம் மற்றும் இன்னோரன்ன பட்டக்கற்கைகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை போலும்.

    அல்லது ஏதாவது ஒரு கற்கையை தனியார் கல்லூரியில் மேற்கொண்டு துபாயோ, சவூதியோ, லண்டனோ சென்றால் அத்துடன் கதை ஓவர் என்றவாறுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்தோனுகின்றது.

    //நான் சாகுற வரைக்கும்  படிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன்// என்னா கேக்குறவங்க நம்மல ஒருமாதிரியாத்தான் பாப்பாங்க.

     “என்ன இவனுக்கு தல கில சரியில்லயோ” !! என்றுமாக வதந்திகள் காட்டுத் தீ போல பரவிவிடும் .

    அதுக்குத்தான் இன்னம் கொஞ்சம் இருக்கு,  கொஞ்சம் இருக்குன்னு கூறி தப்பித்துக் கொள்வது.

    என்னைப் பொறுத்தமட்டில் கற்றல் என்பது மரணிக்கும் வரை  பயணிக்கக்கூடியது என்றே கூறுவேன்.

    ''Yes, its a life-long process''

    அம்மா, அக்கா, அண்ணா, அப்பா, தம்பி ராசா மார்களே ! ஒண்ட மட்டும் தெளிவா புரிஞ்சுக்கொங்கோ, // படிப்புக்கு என்றய்க்குமோ முடிவில்ல // 
    எங்கிற உண்மய.

    ----- தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக ----------































    மற்றுமொரு உறுப்பினர் ! வணக்கம் !! சூ(TSU)

    இணையப் புரட்சியலில் Social Media எனும் சமூக வலைத் தளங்களின் பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்(Facebook) என்று சொல்லக்கூடிய முகப்புத்தகம்,  டுவிட்டர் (Twitter), கூகிலின் பினாமியான கூகில் பிளஸ்(Google+) அத்துடன் லிங்இன்ட்(Linkedin) எனும் அதிவிசேட தொழில்சார் சமூக வலைத்தளம் என்றவாறு பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றது.

    சமூக வலைத்தளம் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது ?? அதன் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் என்ன ??? என்றவாறான அடுக்கடுக்கான கேள்விக்கணைகளுக்கான விடைகள் நம்மில் பல பேறுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

    இன்று பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு  போட்டுக் கொண்டிருக்கும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு நான் மேற்கூறியவை பற்றிய போதுமான அறிவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. அதிலும் குறிப்பாக சிறப்பானதொரு கல்வி மட்டத்தில் ஜாம்பவான்களாக வீற்றிருப்பவர்களும் இதில் உட்சேர்க்கப்படுவதுதான் சற்று கவலைக்குரிய விடயம்.

    நான் அறிந்தவரை பல பேர் தாங்களின் தொழில் சார் விடயங்களுக்கு அப்பால் துளியும் எந்தவொரு விடயத்தையும் அலசுவதில்லை. காரணம் கேட்டால் “அது நமக்கு வேண்டாத வேலை”   என்றுதான் பதில் வரும்.

    ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிட  முடியாது என்பதுதான் எனது வாதம். உதாரணத்திற்கு, வைத்தியர் ஒருவர் சமையல் கற்பதில் தவறொன்றும் இல்லையே !  அதை விடுத்து நான் இது, நான் அது எனும் பந்தாக்கள் காட்டினால் இழப்பது பல.

    சரி இனி மெயின் மேட்டருக்கு வருவோம்,

    ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நம்முடவங்க ஏதாச்சும் செஞ்சுக்கிட்டுத்தான் இறுக்குறானுக. அதில இப்ப ரீசண்டா எண்டராகி இருப்பது, TSU எனும் வாய்க்குள் நுழைய மறுக்கும் “சூ” எனும் சமூக இணையத்தளம்.

    நான் நெனய்க்கிறன் தம்பிமார் இந்தப் பெயர ஜப்பான் மொழியிலிருந்து சுட்டிருப்பாங்களோ என்னவோ எண்டு,

    ஏஸ் காரணம் இருக்கு !!

    காய்ஸ், உங்களுக்க ஞாபகம் இருக்குமா சுனாமி ??? TSUNAMI 
    ஆமாங்க, நீங்க நெனயக்கிறது கரெக்ட். ''T" இற்கு சவுன்ட் இல்ல.

    ஆழிப்பேரலை எனும் பதத்தால் சுட்டிக்காட்டப்படும் இந்த சுனாமி ஜப்பான் மொழியிலிருந்து சுட்டது, வந்தது, போனது என்ற ஆதிக் கதையெல்லாம் தெரியும் தானே மக்களே !!

    அதே கேஸ்தான் TSU இற்கும் நடந்திருக்குமோ என நெனய்க்க தோனுதுங்க.

    சோ, இது நம்முட தனிப்பட்ட கருத்து மேலும் மாற்றுக் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

    பய புல்லயல்கள், சும்மா நல்லா டிசைன் பன்னிருங்கானுகள்,  யூஸ் பன்னவும் ஈசியாவிருக்கு ஆனாலும் பேஸ்புக்கின் வாடையடிக்கிறது என்னவோ உண்மைதான்.

    மேலும் இங்கு குறிப்பான  மற்றும்  முக்கியமான விசயங்கள் ரெண்டு இருக்கு, முதலாவது  கொஞ்சம் கவலையான மேட்டர் - “பேஸ்புக் போன்று லைவா கடலயெல்லாம்  போட முடியாது, எதுவானாலும் மெசேஜ்தான் போடனும் ”

    காய்ஸ் பாவங்க நீங்க !!

    இப்ப ரெண்டாவது மேட்டர்  “பாஸ் இவங்க உங்களுக்கு காசு தருவினமாம்”
    காசு, பணம், துட்டு, மணி மணி.

    என்ன ரெடியா ???

    ஏதோ புதுசா செய்றம் எண்ட பேர்ல எங்குட பய புல்லயல வாழ்க்கையில இப்புடி வௌயாடிட்டயலே மிஸ்டர் Sebastian Sobczak, வாய்க்கு நொழயுது  இல்ல அதான் இங்கிலீசுல அடிச்சு விட்டேன்.


    பயணம் தொடர வாழ்த்துக்கள் !!
































    ரசனியின் ஜிங்கா.... ஓ சொாறி “லிங்கா”

    முதல்ல எல்லாறும் என்ன மன்னிச்சுக்கொங்கோ, தலைப்பு கொஞ்சம் சொதப்பிடுச்சு. சோ ஐயம் றியலி சொறி போ தட்.

    டீசர், ரெய்லர் எண்டு சும்மா அம்புட்டு பந்தா காட்டி வெளியான திரைப்படம் இப்புடி எடயில .................. ஆகும் எண்டு ஆராச்சும் நெனச்சிங்களா?????

    உண்மையில படத்த நான் தியட்டருக்கெல்லாம் போய் பாக்கலங்க, எப்போயும் போல திருட்டு டிவிடி தான் !


    தியட்டருக்கெல்லாம் போய் பாக்குர அளவுக்கு வசதியில்லீங்க !
    விடுங்க அது நம்முட சோகக் கதை, அத விட்டுட்டு 
    இப்ப லிங்காக்கிட்ட வருவோம்.

    உண்மையச் சொன்னா படம் சுமார் மூஞ்சிக் முமாரு, 

    காரணங்கள் அஞ்சு - வைவ் ரீசன்ஸ் (சோட் - நோட்ஸ் : நச்சிண்டு அஞ்சு)
    ------------------------------------------------------------------------------------------------------------------------

    1. பழைய சோத்துக் கதை
    ஐயா, ராசா “கே.எஸ்” ஒங்குட ரெண்ட கொஞ்சம் மாத்தலாமே?
     சும்மா ஒரு எட்டு சுத்திப் பாருங்க இப்ப 
    என்ன நடக்குது தமிழ் சினிமால எண்டு. 
    பய புல்லய்கள் எப்புடி எப்புடியெல்லாம்
     யோசிச்சு கதை எழுதுறானுக எண்டு. 

    பிலிஸ் அப்டேட் யுவர் தோட்ஸ், 
    இது அட்வைஸ் இல்ல, சிமோல் ரிகுவஸ்ட். 

    ********************************************

    2. தலைவருக்கு வயசாச்சில்ல ???? 
     பல எடங்கல அப்பட்டமா தெரியுதோ, 
    என்ன செய்ய? சொல்லித்தான் ஆகனும். 
    எவ்வளவு மேக்-அப் போட்டாலும் சத்தியமா 
    வௌங்குது- வயசாச்சிண்டு. 

    குரல கொஞ்சம் தொய்வு மாதிரி வௌங்குது, ஆனா வௌங்கள.

    கிசு-கிசு- இமய மலைக்கு போற வயசுல ஏண் ஒங்களுக்கு வேண்டாத வேல எண்டு ஒரு தகவல், மிகவும் ரகசியமாக.
    நான் இத யாருக்கிட்யும் சொல்லலிங்க!! (யேஸ் புரமிஸ்)

    ஐயா !! அந்த பழைய கெட்டப்ப இப்பெல்லாம் பாக்க முடியலிங்க!! 
    (ஆதங்கம்)

    WOW !! வவ் !! - பில்லா, முரட்டுக்காளை, பாட்சா மற்றும் பல.

    ****************************************************

    3. ஜாடிக்கேத்த மூடி ??? -
    புரிஞ்சாச் சரி ???? 
    என்ன கொடும சரவணா????? 
    “கே.எஸ்” உங்களுக்கு கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்கா !! 

    நல்லா வருது வாய்ல !! ஏதாச்சும் சொல்லி-கில்லிடப் போறன் !

    அதில “இது” வேற - “அப்பா. கண்ணக் கட்டுதே !! 

    இது எண்டா எது எண்டு புரியுதா ??

    அனுஸ்கா அக்கா - பரவால 
    ஆனா அந்த வெள்ள (அக்கா) புள்ள பாவம்

     யேஸ், ஓடியன்ஸ் நான் அவங்க ரெண்டு பேரயும் விட 
    வயசில சின்னவன் அதான் 
    கொஞ்சமாப்போல மரியாதய்க்கு 
    அக்கா எண்டு சொல்லிப்புட்டேன்.

    ஏதோ என்னால முடிஞ்சது !

    ******************************************************************

    4. வை- ஓல் மோஸ்ட் 3 அவர்ஸ் டைம் - ???? 
    அப்புடி பெரிசா என்னத்தய்யா சொல்ல, 
    இந்த நேர நீடிப்பு ??? 
    ரீசன் - பிலீஸ்???
    பல- பேரின் ஆவேசம் 
    கலந்த கேள்வி !! 

    அட ராசா!! 
    அந்த பைட்டுக்கா இம்புட்டு 
    நேரம் எடுத்த???

    விஜய்ங்கிட குருவி ஸ்டைலா ??? 
    அப்புடி பிலையிங் !! ஓ காட் !! 
    இட்ஸ், ஓசம் !! ??? 

    ரியலி இம்பிரஸ்ட் ஆயிட்டன். 

    *******************************************************************

    5. ஓ !! வில்லன்கள் ??? - 
    சிரிப்பு போலீஸ். 
    மசாலாவ கொஞ்சம் காரமா போட்டாத்தானே, 
    சும்மா டேஸ்ட் தூக்கலா இருக்கும். 
    இது எழுதப்படாத விதியெண்டு 
    ஒங்களுக்கு தெரியாதா - 
    மிஸ்டர்- குமாரு ??? !!! 

    பெடர் - லக் நெக்ஸ்ட் டைம் !! 
    போத் ஒவ் யு 
    *************************************************************

    நாங்க இப்புடியும் கதப்போமில்ல !!






















    ஆடாம ஜெயிச்சோமடா

    “எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

    நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

    கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

    பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

    சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

    சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

    தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

    கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
    இவரும் ஒருவர்.

    இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

    ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

    இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

    சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

    இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

    இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

    ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









    அத்தனைக்கும் ஆசைப்படு

    ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
     என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

    ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

    ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

    ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

    எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

    அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

    ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

    என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

    நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

    காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

    என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

    ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

    ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

    ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

    நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

    தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























    ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

    “முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

    காரணம்,
     
    என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

    ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

    இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

     செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

    சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

    முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

    ஒரு சிலரே

     “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

    “ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

    உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

    “நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

    இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


    - தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














    இலங்கையிலுள்ள முற்கொடுப்பனவுத் தரவுத் திட்டங்கள் ஒரு ஒப்பீடு 2014

    குறிப்பு : இப் பதிவானது இலங்கையிலுள்ள இணையப் பாவனையாளர்களுக்கு நிச்சயமாக உதவக் கூடியவாறானதொன்றாகவே அமையப்பெறும். மேலும் இதன் மூலம் வினைத்திறனான தரவுத் திட்டமொன்றை தெரிவு செய்யக்கூடிய தெளிவொன்றும் உருவாகும்.

    சரி,

    இனி பதிவிற்குள் நுழையலாம்.

    இணையப்புரட்சி என்றதொரு யுகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதனது அத்தியவசியமான தேவைகளுக்குள் இணையமும் ஒன்றாகிவிட்டது. இணையம் இன்றி  வாழ்வதற்க்கு மனிதன் தயாரில்லை என்றதொரு நிலைக்கு மனிதனது தேவைகள் அனைத்தும் இணையத்திற்குள் முடக்கப்பட்டு விட்டன என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

    இது ஒரு புறமிருக்க இணையக் கட்டணங்கள் என்றதொரு விடயமும் மனிதனது பிரதான செலவினங்களுக்குள் உள்ளடக்கலாகிவிட்டது. எது எவ்வாறாயினும் இதனைத் தவிர்த்துக் கொள்ளவதென்பது சற்றுக் கடினமானதொரு காரியம் ஆனாலும் ஒப்பீட்டளவில் இதனை இழிவாக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    இலங்கையில் இணையப் பாவணையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான்  செல்வதாக அண்மைய ஆய்வறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது ஒரு விதத்தில் சாதகமானதாக உற்று நோக்கப்பட்டாலும் மற்றொரு விதத்தில் பாதகமானதொன்றாகவே அவதானிக்கப்படுகின்றது.

    எடிசலாட்(Etisalat), டயலொக்(Dialog), மொபிடெல்(Mobitel), எயாடெல்(Airtel) மற்றும் ஹச்(Hutch) ஆகிய இவ் ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் இலங்கையில் பிரதான இணையப் பங்காளர்களாகவும் வழங்குனர்களாவும் செயற்பட்டு வருகின்றன.

    ஒப்பீட்டளவில் வேறுபட்ட தரவுத் திட்டங்களை/பொதிகளை (Data Plans/Packages) வழங்குவதிலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தங்களோடு தக்க வைத்துக் கொள்வதிலும் இந் நிறுவனங்கள் மிகவும் கச்சிதமாக  தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

    சாதாரணமாகவே தரவுத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த இவ் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டிற்குள் சமூக வலைத்தளங்களுக்கென்றே தனிப்பட்ட தரவுத் திட்டங்களை வழங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு தினம் தினம் விசேட புதிய தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

    இது இவ்வாறிருக்க,

    என்னால் இங்கு ஒரு சிறிய முயற்சியாக இவ் ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்களை அதாவது முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்களை ஒப்பு நோக்கியவாறான ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட  தரவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    அதாவது இதன் பிரதான நோக்கம் யாதெனில் எந்த நிறுவனம் மிகவும் வினைத்திறனான தரவுத் திட்டத்தை வழங்குகின்றது என்பதாகும்.

     இதன் மூலம் இணையச் செலவினங்களை ஓரளவுக்கு இழிவாக்கலாம் என்றதொரு அடிப்படையில்தான் என்னால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

    இவ் ஒப்பீட்டு அட்டவணையிலுள்ள தகவல்கள் அனைத்தும் நேரடியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை மேலும் இத் தகவல்கள்  அதாவது செப்ரம்பர் மாதம் 16 ம் திகதி 2014 ஆண்டுக்குரியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன (Updated Details).

    ஒப்பீட்டு அட்டவணை  


    தெளிவான அட்டவணைக்கு இதனை சொடுக்கவும்

    இங்கு அட்டவணையில் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்கள் அதனது விலைகளுக்கேற்ப ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட விலை வீச்சுக்கேற்ப எவ்வாறான தரவுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்பதை மிகவும் இலகுவான முறையில் அவதானிக்கவும் முடியுமாகவுள்ளது.

    உதவிக் குறிப்புகள் :
    Prize range - விலை வீச்சு, அதாவது இங்கு மூன்று விலை வீச்சுக்குள் எல்லைப் படுத்தப்பட்ட தரவுப் பொதிகள்/திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

    1. ரூபா 1- 99 வரையில்
    2. ரூபா 100 - 299 வரையில்
    3. ரூபா 300 - 1999 வரையில்

    இலகுவாக ஒப்பீட்டை மேற்கொள்ளலாம்.

    Prize - விலை, அதாவது குறிப்பிட்ட தரவுத் திட்டத்தின் விலை

    Data - தரவுத் திட்டம் (MB) அலகில் தரப்பட்டுள்ளது மேலும் என்னால் சில இடங்களில் GB யிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உதாரணமாக 110+50 எனில் 110MB ஆனது பகல் பொழுதிலும் 50MB என்பது இரவுப் பொழுதிலும் பாவிக்க கூடியவாறாக உள்ளது.

    SMS/Call - இதன் போது வழங்கப்படுகின்ற குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளுர் அழைப்பு நிமிடம்.

    உதாரணமாக 50/10 எனில், 50 குறுஞ்செய்திகள் மற்றும் 10 நிமிட அழைப்பு இலவசம் என்றவாறு அது  அமையப் பெறும்

    Val (Validity) - செல்லுபடிக்காலம், அதாவது இத் தரவுத் திட்டமானது எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதாகும்.

    உதாரணமாக : 7 என்றால் இத்தரவுத் திட்டமானது 7 நாட்களுக்குள் செல்லுபடியாகும் என்பதாகும் அதன் பிறகு அது தானாகவே காலாவதியாகிவிடும்.

    TT - Talk Time - அழைப்பு நேரம்.

    NIG - இரவு நேரத் திட்டம்

    இங்கு இரவு நேரத்திட்டங்கள் பொதுவாக நள்ளிரவு 12 யிலிருந்தே ஆரம்பிக்கின்றன ஆனாலும் சில நிறுவனங்களின் திட்டங்கள் வேறுபட்ட நேரத்தில் ஆரம்பிக்கின்றன ( அதிகாலை 1 மற்றும் 2 மணியளவுகளில் ) தயவு செய்து இதனைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணையத் தளங்களுக்குள் பிரவேசியுங்கள்.

    எடிசலாட் (Etisalat) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

    இணையத்தள முகவரிப் பக்கம்: எடிசலாட் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்






    டயலொக் (Dialog) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

    இணையத்தள முகவரிப் பக்கம்: டயலொக் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








    எயாடெல் (Airtel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

    இணையத்தள முகவரிப் பக்கம்: எயாடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








     மொபிடெல்(Mobitel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

    இணையத்தள முகவரிப் பக்கம்: மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்







    ஹச் (Hutch) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

    இணையத்தள முகவரிப் பக்கம்: ஹச் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்
















    Creative Commons License
    manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
    Related Posts Plugin for WordPress, Blogger...