வேட் பிரஸ் மற்றும் புளக்கர்


பதிவுத் தளங்களாக தங்களை அடையாளப்படுத்திய இரண்டு வேறுபட்ட தளங்களாக வலம் வந்து கொண்டிருப்பவையென்றால் அவை புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகியவை என்றுதான் கூற வேண்டும்.உண்மையிலேயே இவை இரண்டுமே மிகவும் சிறந்த பதிவுத் தளங்களாக பதிவாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மையும் கூட.


மாறுபட்ட கருத்துக்கள் , சிந்தனைகள் , நிகழ்கால நிஜங்கள் மேலும் பல விடயங்களை தனிப்பட்ட ரீதியாக யாருடைய தலையீடுமன்றி பதிவேற்ற வசதியளிக்கப்பட்ட தனித்துவமான இடமாகத்தான் இவை திகழ்கின்றன என்பதுதான் இதன் விசேட அம்சமாகும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்க ளுக்குமிடமில்லை.


“யாரும் கிறுக்கலாம் , எதையும் கிறுக்கலாம்” என்ற சிறந்த கொள்கையை கடைப்பிடிக்கும் பதிவேற்றுத் தளங்கள் என்ற ரீதியில் இவை தங்களுக்கென்று தனியொரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றது என்பதையே வாசிப்போருக்கு கூறிக் கொள்ள வேண்டும்.

பத்திரிகையில் ஒரு கருத்தை அல்லது ஏதாவது ஒரு விடயத்தை பற்றி எழுதலாம் என்றால் அதற்கான் சந்தர்பங்கள் அனைவருக்குமே
வழங்கப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்ததொரு உண்மையாகும். இப் பாரிய குறையைப் போக்க  உருவாக்கப் பட்டவைதான் இவ்விரண்டு பதிவேற்று தளங்களுமே என்பதுதான் வெளிப்படையான உண்மையாகும்.புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகிய இரண்டுமே  மிகவும் சிறந்த பதிவேற்று தளங்கள்தான்  எனினும் இவை இரண்டிலும் எது மிகவும் சிறந்தது என்ற கேள்வி பலரால் பல்வேறு விதமாக கேட்கப்படுகின்றன். மனிதர்கள் வேறுபட்டவர்கள்  மனிதர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை என்றதுக்கமைய புளக்கர் தான் சிறந்தததாக என் மனதுக்குப் படுகின்றது. உண்மையில் இதில் வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும் எழலாம் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.


கருத்துச் சுதந்திரம் மற்றும்எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்கு சந்தர்ப்பத் தை வழற்குவதே இவை  இரண்டினதும் பிரதான நோக்கங்களாக வெளிப்படுத்தப்படுதை  எவரொருவராலும்  இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமாக உள்ளது.


ஏராளமானோருக்கு புளக்கர் தான் மிகவும் பரிச்சயமானதாகும் வேட் பிரஸ் ஐ விட என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட. இதனை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் என்னிடத்திலே ஏற்படுகின்ற ஐயப் பாடென்றும் கூறலாம்.


ஏன் உனக்கு வேட் பிரஸ் பிடிக்காதா ??? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் நான் இங்கு எனக்கு வேட் பிரஸ் பிடிக்காது  புளக்கர் தான் பிடிக்கும் என்ற தொரு கருத்தை தெரிவிக்க வில்லை. என்னைப் பொறுத்த மட்டில் புளக்கர் ஆனது வேட் பிரஸ் ஐ விட ஏதோ சற்று சிறந்ததாக தோன்றகின்றது , அவ்வளவுதான்.


கருத்துக்களாகிய பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்க்கு இவை இரண்டுமே மிகவும் சிறந்த தளங்கள்தான் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களுமில்லை.

உண்மையில் எனக்கு மற்றவர்களைப் போல் பக்கம் பக்கமாக கிறுக்குவதற்கு விருப்பமில்லை ஏனெனில் அது உண்மையில் வாசிப்போருக்கு பொறுமையை இழக்கச் செய்யும் ஒரு செயலாக மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையிலேயே !


வித்தியாசமான மொழி நடையில் கிறுக்கும் போது உண்மையில் அது வாசிப்போருக்கு வேறுபட்ட அனுபவத்தை  வழங்கும் என்றதொரு கருத்து என் மனதில் பதிவிக்கப்பட்டுள்ளது , அதன் நிமித்தமே வேறுபட்ட கோணங்களில் என் பதிவுகளை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்  இது போலவும் !!!

-தொடர்ந்து கதைப்போம்-தாய்மொழியாம் தமிழ்

எதையாவதைப் பற்றி எழுதலாம் எனும் சிந்தனையின் போதுதான் இன்றைய தினம் ஞாபகத்திற்கு வந்தது “உலக தாய்மொழித் தினம்”. எத்தனை மொழிகளில் உரையாடினாலும் அவரவர் தாய்மொழியில் உரையாடுகின்ற போது    கிடைக்கின்ற சௌகரியம்,தைரியம்,தெளிவுத்தன்மை,நிதானம், பூரண மகிழ்ச்சி ஆகியவற்றை அளவிட முடியாது அனுபவிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ளலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.என்னுடைய தாய்மொழி “தமிழ்” என்று எத்தனை பேர் மார் தட்டிக் கொள்கிறார்கள் என்பது என்னிடத்திலே பெரியதொரு ஐயப் பாட்டை தோற்றுவித்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும். ஆங்கிலத்தின் ஆதிக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு அதன் வளர்ச்சிப் போக்கு துரித கதியில் பயணித்துக் கொண்டு செல்வதே தெளிவான எடுத்துக்காட்டாகும்.


ஏராளமான நண்பா்கள் தாங்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் மாத்திரம் தான் அங்கிகரிக்கப் படுவோம் என்றதொரு தவறான சிந்தனைப் போக்கை கண்மூடித்தனமாக பின்பற்றி வருவது தாய்மொழியாம் தமிழுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகவே என் மனதில் தோன்றுகின்றது.

என்னைப் பொறுத்த மட்டில் மொழியென்பது ஒரு ஊடகமாகத்தான் உற்று நோக்கப்படுகின்றது.அதாவது ஒரு தொடர்பாடல் ஊடகம் என்றே குறிப்பிடலாம்.

தாய்மொழியை இழிவாக நினைப்பது தாயை இழிவாக நினைப்பதற்கு ஈடாகும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு முதலில் அறிமுகப்படுத்தப்படுவது தாயும் , தாய்மொழியும் தான் என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது..


 கட்டாயம் எப்போதும் தாய்மொழியில் தான் பேச வேண்டுமா ?? என்றதொரு வினாவை எம்மில் பலர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். உண்மையில் உங்களது சிந்தனைப் போக்கு தவறானதாகத்தான் என் மனதில் தோன்றுகின்றது காரணம் என்னவெனில் காலத்தின் தேவைக்கேற்ப தங்களைத் தாங்கள் மாற்றிக் கொள்வதுததான் சிறந்தது என்ற கருத்தின் அடிப்படையில்.

“தழிழ் அவமானமல்ல அதுவொரு அடையாளம் என ஒரு பகுதியினரும் ச்ச்சீ   தமிழா??” என இன்னுமொரு பகுதியினரும் ஒரு மொழிக்கிடையிலேயே பிரிவினவாதத்தை உண்டாக்கும் செயலானது மிகவும் வருந்நத்தக்க தொன்றாகும்.காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கில அறிவு இன்றியமையாததொன்றாகி விட்டதை எவரொருவராலும் மறுக்க முடியாது. தொழில்நுட்ப புரட்சியின் கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதில் ஆங்கிலம் தான் முதல் மொழி மட்டுமல்ல உலக மொழியும் கூட என்ற அடிப்படையில் இதன் பயன்பாட்டை இழிவாக்கவோ நிறுத்தவோ முடியாததென்பது உலகறிந்த உண்மையாகும்.

வெளிநாட்டவருடனோ அல்லது தமிழ் மொழி நன்கு பரிச்சயம் இல்லாத ஒருவருடனோ ஆங்கிலத்திலோ அல்லது குறிப்பிட்ட வேறு மொழியிலோ உரையாடுவதில் தவறில்லை ஆனால் தமிழ் நன்கு பரிச்சயமானவர்கள் ஆங்கிலதில் உரையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் எனது கருத்து. இது தாய் மொழிக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமைந்து விடுகின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.


கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஏராளமான எடுத்துக்காட்டுக்களுடன் ஆனால் அதை வாசிப்போருக்கு பொறுமை இருக்குமா?? என்பதுதான் என்னிடத்திலே எழும் பெரிய ஐயப்பாடு. அதன் நிமித்தம் இப்பதிவை மிகவும் சுருக்கமாகவே கிறுக்கியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும் ஏராளமாக-


வை-பை யை ஹெக் பன்னுவது எப்படி??


தலைப்பைப்  பார்த்தவுடனேயே  எத்தனை பேர்  இதனை ஆவேசமாக   கிளிக் பண்ணியிருப்பார்கள்  என்பதை என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஏனென்றால் நம்மில் பலர் எது இலவசமாகக் கிடைத்தாலும் அதை விரயமாக்க விரும்புவதில்லை என்ற மிகவும் நல்ல நோக்கத்தை கொள்கையாகக் கடைப்பிடிப்பவர்கள்

என்பதனால்தான்.

சரி , இனி தலைப்புக்கு வருவோம்.எவ்வாரு பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை ( wi-fi ) யை ஹெக் பண்ணுவது என்பதைப் பற்றி.மிகவும் நல்ல நோக்கம் என்பதனால் தான் இப்பதிவை நம்மவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

உண்மையில் வை-பை யை ஹெக் பண்ணுவது பெரியதொரு விடமயல்ல என்பதையும் இவ்விடத்திலே சொல்லியே ஆக வேண்டும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வை-பை யை ஹெக் பண்ணலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

                                                                                                           
WEP , WPA ,  WPA2   போன்ற  பாதுகாப்பு முறைகள்தான் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் WPA2 தான் அதி பாதுகாப்பு முறையாகக் கருதப்படுகின்றது. எது எவ்வாறாயினும் கள்வனுக்கு வேலி போட்டு பயனில்லையே !!

என்னடா  இவன் மொக்கைக்கு மேல மொக்கையைப் போட்டு கடுப்பேத்துறான் என்றவாரு தாங்கள் ஆதங்கப்படுவதை என்னால் உணரமுடியாமலில்லை.மேலும் இவ்விடத்திலே உங்களது பொறுமையை சோதிக்கவும் எனக்குத் துளியும் உடன்பாடில்லை என்றபடியால் விடயத்துக்கு வருகிறேன்.இந்த உதவியை மட்டும் தான் என்னால் செய்ய முடியும் , இதைப் பயன்படுத்தி நிச்சயம் உங்களால் ஒரு வை-பை யை ஹெக் செய்ய முடியும் , இதனுடன் இன்னும் ஒரு சில காரியங்களை செய்யுமிடத்து.அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட்டால் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைத் தேடி அடிக்க வருவது உறுதியே !!

முழுமையான உதவிகள் தேவைப்படும் மகத்தான நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்னை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

                                                             
ஏன் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை யை ஹெக் செய்ய முனைகின்றீர்கள் ??? அடுத்தவன் பொருள் நமக்கெதுக்கு என்று கூறிக் கொள்ளும் மோசமான முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள்தானே !!??  

என்ன ??? நான் சொல்வதெல்லாம் சரிதானே ???

இப்பதிவை ஒரு நகைச்சுவை உணர்வுடனேயே கிறுக்கியிருக்கிறேன்  என்பதை பாவப்பட்ட வாசிப்போருக்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-

மோட்டார் சைக்கிளும் நானும்

மோட்டார் சைக்கிள் ஆசை துளிர்விட ஆரம்பித்தது என்னுடைய பாடசாலைப் பருவத்தில்தான்.மோட்டார் சைக்கிள் என்றால் அதன் மீது அந்தளவு மோகம் என்னிடத்திலே காணப்பட்ட  காலமென்றும் கூடச் சொல்லலாம்.ஆசை இருந்ததே தவிர ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை.மற்றவருடைய மோட்டார் சைக்கிளை ஓடுவதற்கும் மனமில்லை அதனால் மோட்டார் சைக்கிளை எவ்வாரு ஓட்டுவது என்ற போதுமான அறிவு , அனுபவம் என்னிடத்திலே சற்று மந்தமாகவே இருந்தது.பாடசாலை நண்பர்களிடத்தில் ஒரு பந்தாவை தக்கவைப்பதற்காக சிறு சிறு பொய்களும் என்னிடத்திலே இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய அனுபவமாக சென்றடைந்ததை இன்று கூட என்னால் மீட்டிப்பார்க்கும் போது பசுமை கலந்ததொன்றாகவே இருக்கின்றது.

ஏழாவது கியரிலே சைக்கிளை ஓட்டினேன் ” என்ற பொய்யை இன்று நினைத்தால் கூட சிரிப்புத்தான் வருகின்றது.பாடசாலைக் காலங்களில் எவரொருவராலும் பொய் சொல்வதை தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை ஏனென்றால் அது ஆசைகளுக்கும் , பாராட்டுக்கும் ஏங்கும் பருவம் என்றதாகையால்.அதிலும் பெண்கள் சொல்லும் பொய்யிருக்கே ! அடடா சும்மா ஒரு கலக்கு கலக்கும்.பொய்யென்று தெரிந்தும் அதை நம்பும் பருவம்தான்  அதுவென்றால் அதற்கான மாற்றுக்கருத்துக்களும் குறைவாகத்தானிருக்கும்.

சொந்தமாக சைக்கிளை வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசையும் என்னை மீண்டும் ஆட்கொண்ட காலங்கள்  உயர்தரத்தின் போதுதான்.அம்மாவிடம் ஒரே நச்சரிப்பு “மோட்டர் சைக்கிள் வாங்குவது” பற்றித்தான்.“கொஞ்சம் பொறுமையா இரு !! காசு வரட்டும்” அம்மா கூறும் பதில். மனமிருக்குதே அது குரங்கை விட ரொம்ப மோசமானது.எப்படியாவது வாங்கி ஓட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னுள் உள்ளார்ந்தமாக ஓடிக்கொண்டிருந்தது.இனி என்னுடைய நச்சரிப்பு அப்பா பக்கமும் தாவியது. பாவம் அப்பா !! நான் எதை வேண்டும் என்று சொன்னாலும் முகம் சுழிக்காமல் வாங்கித்தருவதையே வழக்கமாக்கி விட்டார் நானும் அதையே அவரிடமிருந்து எதிர்பார்ப்பேன்.

“எல்லார புள்ளைகளும் சைக்கிள் ஓடுது , நம்முட புள்ளய்க்கும் ஒண்டு வாங்கிக் கொடுக்கத்தான் வேனும்” அம்மா-அப்பாவின் உரையாடல் இறுதியில் எனக்குமொரு சைக்கிளை சொந்தமாக்கியது , அப்பாவின் பணத்தில். புது சைக்கிளை ஓட்டுவதற்கு போதுமான அனுபவம் இருந்திருக்கவில்லை என்றாலும் வாங்கிய முதல் நாளே தொண்ணூறு வீதம் கற்றுக் கொண்டேன் சொந்தமாக. “முடியாதது  ஒன்றுமே இல்லை” என்ற கருத்தினது வேறூன்றலின் வெளிப்பாட்டின் பிரதிபலிப்பாகக் கூட இருந்திருக்கலாம் அது.

ஏதாவது ஒரு பொருள் என்னிடம் இருந்தால் அதைப்பற்றி போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டுமென்ற கொள்கையை சிறு வயது முதலே கடைப்பிடிப்பதை பழக்கமாக்கிவிட்டேன்.அதன் தாக்கம் மோட்டார் சைக்கிளையும் விட்டு வைக்கவில்லை.

அப்பாவை பின்னிருக்கையில் உட்கார வைத்து வேகமாக  ஓட்டும் போது, அப்பாவின் கண்டிப்பான கருத்துக்களை ஏனோ , தானோ என்றுதான் கேட்டது மனம். “மெதுவாக ஓட வேண்டும் , ஒவ்வொரு சந்திக்கும் ஹோன் அடிக்க வேண்டும், மேலும் பல காரசாரமான அட்வைஸ்கள்”.ஏன்டா??  இவரை  ஏத்தினோம் என்று கூட நினைத்ததுண்டு சில நேரங்களில். மறு கணம் நம் நல்லதுக்குத் தானே சொல்கிறார் என்று  கூட  நினைத்ததுமுண்டு.

ஒருவாறாக மோட்டார் சைக்கிள் ஆசை என்னுள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது, ஆனால் முழுமையாக அல்ல.அப்பாவின் பணத்தில் முதன் முதலாக வாங்கிய சைக்கிள் எனும் போதுதான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது அதை விற்கும் போது.


-தொடர்ந்து கதைப்போம்-

                                                         


விஸ்வரூபம்

 photo bb_zps65c861bf.gif
மனதில் பட்டது
நீயுமா ??? என்று  நீங்கள் கேட்பது புரிகின்றது. காலத்தின் தேவைக்கேற்ப சில சில செயற்பாடுகளை மேற்கொள்வதுதான் சிறந்ததாக என் மனதில் பட்டது அதன் விளைவுதான் இப்பதிவு.


அப்படி என்னதான் இருக்கின்றது என்றதொரு ஆவலில்தான் திரைப்படத்தைப் பார்த்தேன் (திருட்டு டி.வி.டி யில்).பெரிதாக என்னால் குறைகளை இனங்கான முடியவில்லை என்று கூடச் சொல்லலாம்.

உண்மையில் கமலின் கடின உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் திரைப்படத்தை மிகவும் துல்லியமாக செதுக்கியிருக்கிறார் என்பதை திரைப்படத்தைப் பார்க்கும் எவரொருவராலும் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமென்பதுதான் தெளிவான உண்மையாகும்.


                                                                                                     

திரைப்படத்தைப் பற்றி ஏராளமானவர்கள் ஏராளமான விமர்சனங்களை எழுதிவிட்டனர் ஆனால் என் பங்குக்கும் ஏதாவது கிறுக்கலாம் என்றடிப்படையில்தான் இதைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையும் கூட.
                                                                 

படத்தின் தலைப்புக்கு ஏற்றால் போல் திரைக்கதையும் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றது  என்பதுதான் மிகவும் முக்கியமானதொரு விடயமாக என்னால் உணரப்பட்டது.படத்தின் காட்சியமைப்புக்கள் பிரமாண்டமாக அசத்தப்பட்டிருக்கின்றன மேலும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றார்கள் என்றால் அதில் எந்தவொரு பொய்யோ , அலட்டலோ இல்லையென்று கூடச்  சொல்லலாம்.

                                                                       
நான்  உண்மையில் இங்கு திரை விமர்சனத்தை எழுத முற்படவில்லை ஆனால் என் மனதில் தோன்றிய சில நிஜங்களைத்தான் கிறுக்க முற்பட்டேன் என்பதை வாசிப்போருக்கு  கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

திரைக்கதைக்கு ஏற்றால் போல் கதாப்பாத்திரங்களையும் மிகவும் அருமையாக அமைத்திருக்கிறார் என்றால் கூட அதில் எந்தவொரு மிகைப்படுத்தப்பட்ட  கருத்துமில்லை.

                                                                             

படம் ஆரம்பிக்கும் போது பறக்கும் புறாக்களில்தான்  கிளைமாக்சையும் புகுத்தியிருப்பது உண்மையில் பாராட்டப் பட வேண்டியதொரு யுக்தியாகத்தான் என் மனதில் தோன்றியது.உண்மையில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களிலும் தனித்தன்மையான வேறுபாடுகள் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.

                                                                             
பூஜாக்குமார் மற்றும் ஆன்றியா ஆகியோர் கதைக்கு ஏற்றாப் போல் தாங்களை  சரியான முறையில் தயார் படுத்தி நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகத்தான் தோன்றுகின்றது். பூஜாக்குமார்  டொக்டருடன் பேசும் விதம் உண்மையிலே அருமையாகயிருந்தது.

                                                                                             
ஏன் பூஜாக்குமார் ?? என்ற கேள்விக்கான விடையை  திரைப்படத்தின்  இறுதியிலேயே போட்டு உடைத்திருக்கிறார் கமல்ஜி. இது எத்தனை பேருக்கு புரிந்தது என்பதில்தான் எனக்குக்  கொஞ்சம்  ஐயமிருந்தது.தொழில்நுட்பத்தை எவ்வளவுக்கு புகுத்த முடியுமோ அவ்வளவுக்குப் புகுத்தி  ஹொலிவுட்டுக்கு நிகரானதொரு தமிழ்த் திரைப்படத்தைப் படைத்திருப்பது தமிழ் சினிமாவின் சாதனையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.சாதனைகளுக்கு சோதனை  வரும் என்பதை சரியாக உணர்ந்து கொண்ட சந்தா்ப்பமாக இதைக் குறிப்பிடலாம் என்றால் அதில் எவ்விதத்  தவருமில்லை.
                                                                                           

ஆப்கானிஸ்தான் காட்சிகளில் பிண்ணிருக்கிறார்கள் மேலும் நுணுக்கமான ஒளிப்பதிவு அதை சர்வதேச அளவுக்கு நகர்த்தியிருக்கின்றது என்பதுதான் நிஜமும் கூட. ஆப்கானிஸ்தான் மக்களின்  வாழ்க்கையை இதன் ஊடாக ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளவும் விஸ்வரூபம் உதவியிருக்கின்றது.


முஸ்லிம் மக்களுக்கு எந்த ரீதியில் திரைப்படம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது இன்று வரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது.சில அற்ப அரசியல் நோக்கங்களுக்காக  மதங்களைப்  பகடைக் காயாகப் பயன்படுத்துவதையே நம்மவர்கள் வழக்கமாக்கிவிட்டனர் என்பதுதான் மறுக்கவோ , மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

உண்மையில் பதிவுகள் நீளமாக  இருந்தால் வாசிப்போரின் மனோநிலை சற்று வேறுபட்டதாகவே  இருக்கும் என்ற  காரணத்தினால்தான் என்னுடைய பதிவை  ஓரளவுக்கு கட்டுப்பாடாக கிறுக்கியிருக்கிறேன் என்பதை கூறிக் கொள்கிறேன்.
                                                                                               

விஸ்வரூபம் பற்றி பக்கம் பக்கமாக கிறுக்கலாம் ஆனால் அதை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்பதில்தான் மிகப்பெரிய ஐயப்பாடு என்மத்தியில் நிலவியிருந்ததன் பொருட்டே என்னுடைய பதிவை சற்று வேறுபட்ட கோணத்தில் சில சில முக்கியமான கருத்துக்களுடன்  தெரிவித்திருந்தேன் என்பதுதான் உண்மையாகும்.

தொடர்ந்து எழுதுவதற்கு நான் தயார் “விஸ்வரூபம்II ” ஐப் பற்றி ..................
(I am waiting.................)

தொடர்ந்து கதைப்போம்-


அழுத்தங்களின் போக்கு !!


பிரச்சினைகளின் அழுத்தம் அதிகரிக்கும்
போதுதான் ஒரு மனிதனின் திறமை வெளிப்படுத்தப்படுகின்றது.மனிதனாகப் பிறந்து விட்டால் பிரச்சினைகள் , சிக்கல்கள் போன்றவற்றுக்கு முகங்கொடுத்துத்தானாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதியும் கூட.பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இறந்த பிணமும் ஒன்றுதான் என்பது எனது கருத்து.


மனிதன் என்பவன் சாதனையாளன் .யாருக்குத்தான் பிரச்சினை இல்லை , தெருவோரத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் முதல் வெள்ளை மாளிகையில் வாழும் ஒபாமா வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் ஆட்கொள்கின்றன.


ஏதோ பிறந்தோம் , வாழ்ந்தோம் , இறந்தோம் என்றில்லாம் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெறுவதற்க்கு முற்போக்கு சிந்தனையாளர்களாக நம்மை மாற்றிக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.இதன் போது பிரச்சினைகளையும் , சவால்களையும்  எதிர்கொள்ளக் கூடிய மனோபாவம் வேறூன்ற ஆரம்பிக்கும் என்பது திண்ணம்.ஐயோ !! இது என்னால் முடியாது !! என்று
தன்னை தாழ்த்திக் கொள்ளும் மனிதர்கள் நம்மில் எத்தனை போ் ??? உங்களை நீங்களே ஒரு கணம் சுய பரிசோதனை செய்து  கொள்ளுங்கள் நான் எப்படிப் பட்டவன் என்று ?? தன்னைப் பற்றி தான் முதலில் அறிந்து  கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையே இது.

உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு செக்கனும் ஏதாவதொரு சாதனை நிகழ்ந்து கொண்டேதானிருக்கின்றது. எம்மைப் போன்ற மனிதர்கள்  தான் சாதித்தவர்கள் , சாதித்துத்கொண்டிருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் சாதிக்கவிருக்கின்றவர்கள் என்பதுதான் யதார்த்தம்.பிறக்கும் போது எவரொருவரும் பெரிய சாதனையாளனாகப் பிறப்பதில்லை ஆனால் இறக்கும் போது ஏராளமான சாதனைகளுக்கு உரித்துடையவனாகவே மனிதன் இறக்கிறான் என்பது காலஓட்டத்தில் நாம் கானும் நிதர்சனமும் கூட.

என்னைப்பொருத்தமட்டில் சாதிப்பதற்க்கு  ஊனமோ , பணமோ ஒரு தடையல்ல.வறிய குடும்பத்தில் பிறந்து சாதித்துக் காட்டிய சாதனையாளர்களை இவ்வுலகம் இனறும் நினைவு கூறிக்கொண்டேதானிருக்கின்றது.

அப்துல் கலாம் , ஆபிரஹாம் லிங்கன் போன்றவர்கள் என்னை ஈா்த்த மாமனிதர்கள் ,சாதித்துத்காட்டியவர்கள். ஐசாக் நியுட்டனின் சாதனைகளை என்னுவதற்கே ஒருநாள் வேண்டும் என்பார்கள் அந்தளவுக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எம்மைப் போல் சாதாரன மனிதனாகப் பிறந்து சிகரத்தைத் தொட்ட மாபெரும் சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தியவர்.பிரச்சினைகள் , தோல்விகள், சவால்கள் அழுத்தும் போதுதான் ஒரு மனிதனின்  உண்மையான பலம் , திறமை வொளிப்படுத்தப்படுகின்றது. வேறுபட்ட சிந்தனைப் போக்கின் மூலம்தான் மனிதனின் சாதனைகள் எழுச்சி பெற ஆரம்பிக்கினறன என்பதுதான் உண்மை.
நேர்த்தியான சிந்தனைகள் ஒரு மனிதனை சிகரத்தின் உச்சிக்கே  தூக்கிச்செல்கின்றன என்றதொரு  எண்ணக்கரு என்னுள் ஆழமாக பதிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதன் விளைவுதான் இப்பதிவும்  கூட......-தொடர்ந்து  கதைப்போம்-


உன்னால் முடியும் !

ஏதோ சிந்தனையில் இருந்த போது தோன்றிய தலைப்புதான் “உன்னால் முடியும்” .வேறுபட்ட கோணத்தில் கிறுக்குவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அந்த அடிப்படையில்தான் இப்பதிவை எழுதுகின்றேன்.மனிதனாகப் பிறந்தால் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை கடைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவன்தான்  நான்.“ சாதிக்கப் பிறந்தவன் தான் மனிதன்” மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று
கூட சொல்லலாம் ஆனால் கடவுளுடன் ஒப்பிட முடியாதென்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஏராளமான தோல்விகள் , அவமானங்கள் போன்றவற்றை சந்தித்த பெருமைக்குரியவன் என்று கூட என்னைச் சொல்லாம். சில வேளைகளில் தோல்விகள் என்னை முழுமையாக ஆட்கொண்ட சந்தர்ப்பங்களை நினைக்கும் போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு வித மாற்றத்தை உணர முடிகின்றது.
“தோமஸ் அல்வா எடிசனைப்” பற்றியதொரு ஆழ்மனப்பதிவானது  நான் நம்பிக்கை இழந்து  போகும் தருணங்களில் என்னுள் புகுந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம்.எடிசனின் முயற்சியை நினைத்து நான் வியக்காத நாட்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு எடிசனின் முயற்சிகள் மற்றும் தோல்விச்சரித்திரங்கள் என்னுள் மிகவும் ஆழமாக வேறூன்றியிருப்பதை என்னால் கூட சில நேரங்களில் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்றால்  அது மிகையில்லை.


எதையாவத சாதிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேறூன்ற ஆரம்பித்தது எனது பாடசாலைப் பருவத்தில்தான்.பல்வேறு ஆசைகள் , எண்ணங்ளை சுமந்த காலங்கள் அவை.பசுமை கலந்த காலங்கள் மற்றும் நினைவுகளை சுமந்த பருவம் என்று கூட குறிப்பிடலாம்.பாடசாலைக் காலங்களில் பெருப்பாலான தோல்விகளை சந்தித்த அனுபவங்கள் மிகவும் குறைவென்றுதான் சொல்ல வேண்டும்.


தோல்விகள் என்னை புரட்டி எடுத்த சந்தர்ப்பங்களில் “ஏன்டா பிறந்தோம்?”
என்றதொரு  வினாவை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.ஆழ்மனதின் அபார சக்தி என்னுள் இதன் போது வெளிப்படுத்தப்பட்டதும் என்னையறியாமலே  நடந்ததொரு  நிகழ்வாகக் கூட இருக்கலாம்.

“முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை” தந்தையின்  அமுத மொழி அடிக்கடி என்னை விழிப்படைய வைத்த தருணங்கள் ஏராளம்.எனது வெற்றியின் பாதிப்பகுதி தந்தைக்க சமர்ப்பணமாகத்தான் செல்ல வேண்டும் என்றால் அதை மறுப்பதற்கு எனக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“உயிர் உள்ளவரை போராடு”  எனக்கு நானே அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒன்று.ஏராளமான சந்தர்ப்பங்களில் என்னுடைய முயற்சிகளுக்க தக்கதொரு விளைவு கிடைத்ததில்லை என்றால் அது மிகைப்படுத்தப்படா உண்மையாகத்தான் இருக்கும்.எத்தனை முறை வெற்றி பெற்றேன்  என்பதைப் பற்றி நான் நினைத்ததை விட எத்தனை முறை தோற்றுப் போனேன் என்று நினைத்த தருணங்கள் தான் அதிகம்.


தோல்விகளைக் கண்டு சோர்ந்து போன காலங்ளை நினைத்துப் பார்க்கும் போது என் மீது எனக்குக் கூட ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.தோல்விகள்தான்  எனக்கு நல்லதொரு நண்பன் என்று கூறுமளவுக்கு ஏராளமான அனுபவப் பாடங்கைளை கற்றுத்  தந்திருக்கின்றது.

ஆழ்மனதை ஆட்டிப் படைக்கும்  சக்தியை சற்று அதிகரிக்கும் போதுதான் வெற்றியின் வாசணையை நுகர முடியும் என்பது எனது தனிப்பட்ட அனுபவக் கருத்து , இதனுடன் எத்தனை பேர் உடன்படுவார்கள்  என்பதுதான்  ஐயம்.

-தொடர்ந்து  கதைப்போம்-

டுவிட்டர் ( Twitter )

ஏதாவதைப் பற்றி எழுதலாம் எனும் போதுதான் இத்தலைப்பு மனதில் தோன்றியது.டுவிட்டர்” நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானதொன்றுதான் என்றால் அது பொய்யில்லை.உண்மையில் டுவிட்டரானது  வியாபார நோக்குடனேயே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் பெரும்பாலும் இது  கருத்துப் பறிமாற்றத்தினை இலகுவாக மேற்கொள்ளவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பேஸ்புக்கைப் போன்று டுவிட்டரும் ஒரு சமுக வலைத்தளம்தான் ஆனால் பேஸ்புக்கை விட சற்று மாறுபட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.உண்மையில் டுவிட்டரை  பயன்படுத்தவதற்கு  ஓரளவாவது மொழியறிவு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தரமான கருத்துக்கள் மற்றும் தகவல்கள்  சூடான , காரசாரமான விவாதங்கள் கடலை போடல் போன்ற பற்பல செயற்பாடுகள் இதன் மூலம் செவ்வென நிறைவேற்றப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.டுவிட்டரைப்  பற்றி ஓர் அறிமுகம் தெரியாதவர்களுக்கு :

உண்மையில் இப்பதிவானது எவ்வாறு டுவிட்டரை முழுமையாக கையாள்வது தொடர்பான ஓர் அறிவை வழங்கும் என்று நம்புகிறேன்.

டுவிட்டர் கணக்கொன்றை உருவாக்கல் , அதாவது sign up செய்தல்.


பின்னர் நீங்கள் டுவிட்டர் தளத்திற்குள்  நுழையலாம். இதன் பின்னர் செய்ய வேண்டிய வேலைகள் பல.


Setting ஐ கிளிக் பன்னுங்க -சரியான தகவல்களைக் கொடுத்து  Save changes  ஐ சொடுக்குங்கள். நீங்கள் விரும்பியவாரு User name ஐயும்  மாற்றலாம்.

பின்னர்  Profile  ஐ edit செய்யுங்கள்மேலே காட்டியவாரு மேற்கொள்ளலாம். உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் அதையும் இதனுடன் இணைத்து உங்களது கீச்சுக்களை உங்களது பேஸ்புக் வோலில் பதிவேற்றறலாம்.

அடுத்தது டிசைன் பக்கம் போவோம்.படத்திலே தெளிவான முறையில் காட்டப்பட்டுள்ளது. உங்களது பேக்றவுன்டை நீங்கள் விரும்பியவாரு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் உங்களது டுவிட்டர் கணக்குடன் பல Apps களையும்  இணைக்கலாம் 
.


மேலும் உங்களது டுவிட்டர் டைம்லைனை உங்களது  வலைத்தளத்தில் embed செய்து உங்களது வலைத்தளத்தின்  வருயைகாளர்களின் எண்ணிக்கையைக் 
கூட்டலாம். கீழே காட்டப்படுமாரு. 
மேலும் இங்கு காட்டப்படும் Code ஐ copy செய்து உங்களது Blog இன் HTML  பகுதியில் Paste செய்தால் போதும். 
இனி உங்களது விளையாட்டை  தாராளமாகத் தொடரலாம்.கீச்சத் தொடங்குங்கோ !!!!


டுவிட்ரில் பயன்படுத்தப்படும் சில Codes
# இதைப் பயன்படுத்தி உங்களது கருத்துக்களைப் பகிரலாம். உதாரணமாக
#help #sorry #HRM #Biology #manathilpaddathu .......etc

மேலும் @ தைப் பயன்படுத்தி உங்களது நண்பர்களை இணைக்கலாம்.
@manathilpaddath @black ......etc பலோவர்ஸ் மற்றும்  பலோவிங்.

மேலும் உங்களது Followers and Unfollowers போன்ற தகவல்களைப் பெற இதைப் பயன்படுத்துங்கள்


மேலுள்ள தகவல்கள் அனைத்தும்  டுவிட்டர் கணக்கொன்றை எவ்வாறு சரியான முறையில் உருவாக்குவது பற்றி தெளிவு படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

குறிப்பு - சந்தேகங்கள் இருந்தால் மனதில் பட்டது ” டுவிட்டரில் கேட்கலாம்.Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...